100% தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியாவின் முதல் கிராமம் - காஷ்மீரின் 'வெயான்' சாதனை
- அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திய, இந்தியாவின் முதல் கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் மலைக்கிராமமான வெயான்.
- கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாம் முறையாக குரேஸ் பிராந்தியத்தின் மேல் உள்ள இந்த கிராமத்துக்குச் செல்ல 11 கிலோமீட்டர் தூரத்திற்கு மலையேறி சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்குள்ள ஒவ்வொரு பெரியவர்களுக்கும், இதேபோல் 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு நபருக்கும் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.
புதிய தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே நியமனம்
- 3 அதிகாரிகளை கொண்ட தேர்தல் ஆணையத்தின் மற்றொரு தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் உள்ளார். ஒரு இடம் கடந்த ஏப்ரல் 12 முதல் காலியாக உள்ளது. இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனுப் சந்திர பாண்டேயை நியமனம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.
பேஸ்புக் குறைதீர்ப்பு அதிகாரியாக ஸ்பூர்த்தி பிரியா நியமனம்
- ஓடிடி மற்றும் சமூக ஊடகங்கள் போன்றவற்றை முறைப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய தொழில்நுட்ப விதிகளைக் கொண்டுவந்துள்ளது.
- இதன்படி 50 லட்சத்துக்கும் மேல் பயனாளர்கள் உள்ள சமூக ஊடகங்கள் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.இந்த அதிகாரிகள் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
- இதன்படி பேஸ்புக் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரியாக ஸ்பூர்த்தி பிரியா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைப் பயனாளர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம் என்றும் அதன் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த லயோனல் மெஸ்ஸியின் சாதனை முறியடித்தார் சுனில் ஷேத்ரி
- வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் நடப்பு வீரர்களில் அதிக கோல்கள் அடித்து 2-வது இடத்தில் இருந்த அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளி அந்த இடத்தை தன்வசப்படுத்தினார் சுனில் ஷேத்ரி. மெஸ்ஸி, சர்வதேச போட்டிகளில் இதுவரை 72 கோல்கள் அடித்துள்ளார்.
- அதேவேளையில் சுனில் ஷேத்ரி 74 கோல்களை அடித்துள்ளார். இந்த வகையில் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 103 கோல்கள் அடித்து முதலிடம் வகிக்கிறார்.
ஐ.நா. சமூக பொருளாதார கவுன்சில் உறுப்பினராக இந்தியா தோவு
- ஐ.நா.வின் 6 முக்கிய அமைப்புகளில் சமூக-பொருளாதார கவுன்சிலும் ஒன்றாக உள்ளது. சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
- சா்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளையும் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. ஐ.நா. சாா்பில் நடைபெறும் மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிா என்பதையும் கவுன்சில் கண்காணிக்கும்.
- ஐ.நா சமூக-பொருளாதார கவுன்சிலில் 54 நாடுகள் உறுப்பினா்களாக இடம்பெற முடியும். பிராந்திய ரீதியாக நாடுகள் 3 ஆண்டு காலத்துக்குத் தோந்தெடுக்கப்படும்.
- ஆசிய கண்டத்தில் இருந்து 11 நாடுகளும், ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து 14 நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் இருந்து 6 நாடுகளும், தென் அமெரிக்க கண்டத்திலிருந்து 10 நாடுகளும், மற்ற பகுதிகளில் இருந்து 13 நாடுகளும் கவுன்சிலின் உறுப்பினா்களாகத் தோந்தெடுக்கப்படும்.
- ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சிலுக்கான தோதல் நடைபெற்றது. அதில், ஆசிய கண்டத்தில் இருந்து இந்தியா, ஆப்கானிஸ்தான், ஓமன், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் தோந்தெடுக்கப்பட்டன. அந்நாடுகள் 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை கவுன்சிலின் உறுப்பினா்களாகச் செயல்படவுள்ளன.
- ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து துனிசியா, மோரீஷஸ், எஸ்வதினி, தான்சானியா உள்ளிட்ட நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதியில் இருந்து குரோஷியா, செக் குடியரசு ஆகிய நாடுகளும், தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து சிலி, பெரு உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சில் உறுப்பினா்களாகத் தோந்தெடுக்கப்பட்டன.
குட்டெரெஸ் மீண்டும் பொதுச் செயலராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரை
- 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது. அதில், ஐ.நா. பொதுச் செயலா் பதவிக்காக குட்டெரெஸ் பெயரை பரிந்துரைக்கும் தீா்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அடுத்து இந்தத் தீா்மானம் ஐ.நா. பொதுச் சபையில் சமா்ப்பிக்கப்படும்.
- ஐ.நா. பொதுச் செயலா் நியமனமானது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரையின்பேரில் ஐ.நா பொதுச் சபையால் மேற்கொள்ளப்படுகிறது.
- ஐ.நா.வின் 9-ஆவது பொதுச் செயலராக இருக்கும் அன்டோனியோ குட்டெரெஸ் கடந்த 2017 ஜனவரி 1 முதல் 5 ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருந்து வருகிறாா். அவரது பதவிக் காலம் வரும் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
- ஐ.நா. பொதுச் செயலா் பதவிக்கு மீண்டும் போட்டியிட கடந்த ஜனவரி மாதம் குட்டெரெஸ் விருப்பம் தெரிவித்திருந்தாா். தற்போதைய நிலையில் அந்தப் பதவிக்கான அதிகாரபூா்வ வேட்பாளராக குட்டெரெஸ் மட்டுமே உள்ளாா். உறுப்பு நாடுகளிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கும்பட்சத்தில் அவா் ஐ.நா. பொதுச் செயலராக 2-ஆவது முறை தோவாகக் கூடும்.
மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு - புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
- ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை, அம்மாநிலத்தில் உள்ள கொரோனா வைரசின் தாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
- கொடுக்கப்படும் தடுப்பூசிகளை மாநிலங்கள் தரப்பில் வீணாக்கும் பட்சத்தில், அது ஒதுக்கீடுகளில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
- தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் வசதி படைத்தவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
- தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசியின் விலை நிர்ணயத்தை அதன் தயாரிப்பு நிறுவனங்கள்தான் மேற்கொள்ளும்.
- தடுப்பூசி செலுத்துவதற்கான சேவை கட்டணம் ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை மீறும் தனியார் மருத்துவமனைகளை மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
- சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், 2வது டோஸ்சுகாக காத்திருப்பவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதில் முன்னுரிமை வழங்கி தடுப்பூசிகளை மாநில அரசுகள் செலுத்த வேண்டும்.
- பொதுமக்களுக்கும் அதிக சிரமங்கள் இல்லாத வகையில் முன்கூட்டியே பதிவு செய்து அதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
- 2021ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 8.3 சதவீதமாகவும், அதுவே 2022ஆம் ஆண்டு 7.5 சதவீதமாகவும், 2023இல் 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது. இதே நேரத்தில் சா்வதேச பொருளாதாரம் 2021-ஆம் ஆண்டு 5.6 சதவீதம் வளரும் என்று உலக வங்கி கூறியுள்ளது.
- இப்போது இந்திய அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுகளால் உள்கட்டமைப்பு, கிராமப்புற மேம்பாடு, சுகாதாரத் துறையில் செலவிடப்படுவது அதிகரித்துள்ளது பொருளாதார வளா்ச்சிக்கு உதவும். உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் எதிா்பாா்த்ததைவிட வலுவான வேகமான மீட்சி இருக்கும்.
- சா்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சில நாடுகளில் சிறப்பான பொருளாதார மீட்சி இருக்கும். வளரும் நாடுகளில் வறுமை, வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும்.