Type Here to Get Search Results !

TNPSC 5th JUNE 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

நீட் தேர்வின் பாதிப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆராய நீதிபதி ராஜன் தலைமையில் குழு

  • 2017-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு நடத்தப்படுகிறது. இந்த நீட் நுழைவுத்தேர்வால் தமிழகத்தில் கிராமப்புற, அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு காவு வாங்கப்பட்டு வருகிறது.
  • இதனால் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தமிழகத்தின் ஒற்றை கோரிக்கை. நீட் தேர்வுகளில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதலும் தரவில்லை. இதனால் நீட் தேர்வு தமிழகத்தில் திணிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது.
  • நீட் தேர்வின் பாதிப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான ஒரு குழுவையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
நாடு முழுவதும் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்க இ-100 என்ற திட்டம்
  • உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய சுற்றுச்சூழல், பெட்ரோலிய துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பிரதமர்மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். 
  • அப்போது, பெட்ரோலில் எத்தனாலை கலப்பது தொடர்பான நிபுணர்களின் திட்ட அறிக்கையை பிரதமர் வெளியிட்டார். மேலும் நாடு முழுவதும் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிக்க இ-100 என்ற திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். 
  • விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 21-ம் நூற்றாண்டில் இந்தியாவில் எத்தனால் பயன்பாடு அதிகரிக்கப்படும். இதன்மூலம் சுற்றுச்சூழல் மேம்படும். விவசாயி களின் வருவாய் பெருகும்.
  • வரும் 2030-ம் ஆண்டுக்குள் 20 சதவீத எத்தனால் பயன்பாட்டை முழுமையாக அமலுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது 2025-ம் ஆண்டுக் குள்ளேயே இலக்கை எட்ட முடிவு செய்துள்ளோம்.
  • கடந்த 2014-ம் ஆண்டில் 1.5 சதவீத எத்தனால், பெட்ரோலுடன் சேர்க்கப்பட்டது. தற்போது 8.5 சதவீதத்தை எட்டியுள்ளோம். வரும் 2025-ம் ஆண்டுக்குள் 20 சதவீதத்தை எட்டுவோம்.
  • கடந்த 2013-14-ம் ஆண்டில் 38 கோடி லிட்டர் எத்தனாலை கொள்முதல் செய்தோம். இப்போது 320 கோடி லிட்டர் எத்தனாலை கொள்முதல் செய்கிறோம். இதன் மூலம் நாடு முழுவதும் கரும்பு விவசாயிகள் பெரிதும் பலன் அடைந்து வருகிறார்கள்.
  • கடந்த 6 ஆண்டுகளில் சூரிய மின் சக்தி உற்பத்தி 15 மடங்கு அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகம் உற்பத்தி செய்யும் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம் பிடித்துள்ளது.
  • காற்று மாசுவைக் கட்டுப்படுத்த நீர்வழிப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாட்டின் 18 நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு 7 விமான நிலையங்களில் மட்டுமே சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்யும் வசதி இருந்தது. இப்போது 50 விமான நிலையங்களில் சூரிய மின் சக்தி உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மே மாதத்தில் ரூ.1.02 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்
  • கடந்த மே மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயாக ரூ. ரூ.1,02,709 கோடி வசூலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் மத்திய சரக்கு-சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.17,592 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.22,653 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.53,199 கோடியும் வசூலாகியுள்ளது. 
  • செஸ் வரியாக ரூ.9,265 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 27 சதவீதம் குறைவான ஜிஎஸ்டி வருவாயே கடந்த மாதத்தில் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
  • நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் காரணமாக பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
  • இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களின் கல்வியிலும், பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு, பொதுத் தேர்வுகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் கலந்து ஆலோசித்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • இப்பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக, ஒன்றிய அரசு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு நடக்கவிருந்த பொதுத்தேர்வை ஏற்கெனவே ரத்து செய்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel