Type Here to Get Search Results !

TNPSC 30th & 31st MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஆசிய குத்துச்சண்டைப் போட்டி
  • துபாயில் நடந்த ஆசியக் குத்துச்சண்டைப் போட்டி 2021்-ல்(ASBC) யில் இந்திய மகளிர் அணியினர் ஒரு தங்கம்,3 வெற்றி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றனர்.
  • மேரி கோம் (51கிலோ), லால்புட்சாஹி (64கிலோ), அனுபமா (81கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர். இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர் (60கிலோ), லோவ்லினா போர்கோஹெயின் (69கிலோ), ஜாஸ்மின் (57கிலோ), சாக்ஸி சவுத்ரி (54கிலோ), மோனிகா (48கிலோ), சாவித்ரி (81கிலோ) ஆகிய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
  • நடப்பு சாம்பியன் பூஜா ராணி 75 கிலோ எடைபிரிவில் மீண்டும் தங்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார்.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரில் செல்சீ 2வது முறையாக சாம்பியன்
  • போர்ச்சுகல் நாட்டின் போர்டோ நகரில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த செல்சீ மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. 
  • மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் செல்சீ அணி 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை முத்தமிட்டது. அந்த அணியின் கெய் ஹாவெர்ட்ஸ் 42வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து வெற்றிக்கு உதவினார்.
  • முன்னதாக, 2011-12 சீசனில் செல்சீ அணி முதல் முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் 2 முறை பட்டம் வென்ற 3வது இங்கிலாந்து கிளப் என்ற பெருமை செல்சீ அணிக்கு கிடைத்துள்ளது. லிவர்பூல் (2004-05, 2018-19), மான்செஸ்டர் யுனைட்டட் (1998-99, 2007-08) ஏற்கனவே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன.
முதல் முறையாக மணிக்கு 99.30 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட சரக்கு ரயில் சாதனை
  • நாட்டின் கிழக்கு பகுதியில் குர்ஜா மற்றும் பவுபூர் இடையே 331 கி.மீ. சரக்கு ரயில்களுக்கான தனி பாதையை டிசம்பரில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். 
  • இப்பாதையில் காலி சரக்கு ரயில் மணிக்கு 99.30 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. ராஜதானி ரயில்களை விட வேகமாக 300 கி.மீ. துாரத்தை 3 மணி 20 நிமிடங்களில் கடந்துள்ளது. 
இந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த நிதியாண்டில் பொருளாதார வீழ்ச்சி
  • 2020 - 21 நிதியாண்டுக்கான மத்திய அரசின் வருவாய் - செலவின விவரத்தை, கணக்குத் தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2020-21 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 3 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதற்கு முந்தைய நிதியான 2019-20-ல் 4 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது. இது 40 ஆண்டுகளில் இல்லாத சரிவு என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 
  • ரிசர்வ் வங்கியும், மத்திய புள்ளியியல் துறையும் 8 சதவீதம் வரை வீழ்ச்சி இருக்கும் என கணித்த நிலையில் அதை விட சற்று குறைவாகவே பொருளாதார வளர்ச்சி சரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
  • அதேநேரத்தில் 2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் முந்தைய காலாண்டை விட 1 புள்ளி 1 சதவீதம் அதிகரித்து 1.6 சதவீதமாக உயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
  • அதற்கு வணிக முதலீடுகள் அதிகரித்ததும் மத்திய அரசு செலவினத்தை அதிகரித்ததும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறையானது 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
ஆந்திர பாரம்பரிய மருந்துக்கு மாநில அரசு அனுமதி
  • ஆந்திராவில், ஆயுர்வேத மருத்துவர் தயாரித்த பாரம்பரிய மருந்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. 
  • ஆந்திரா நெல்லுார் மாவட்டம் கிருஷ்ணபட்டணத்தை சேர்ந்த பரம்பரை ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தையா, கொரோனாவை விரைந்து குணப்படுத்தும் சொட்டு மருந்தை அறிமுகம் செய்தார். 
இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகை டெல்டா - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
  • இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய B.1.617.2 கொரோனா வகை 'டெல்டா' கொரோனா வகை என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
  • பிரிட்டனில் 2020 செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா 'ஆல்பா' ( 'Alpha') என்றும், தென் ஆப்பிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா பீட்டா ('Beta') எனவும், பிரேசிலில் 2020 நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா ('Gamma') எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா 'Epsilon' எனவும் பெயரிட்டுள்ளது.
சீனாவில் 3 குழந்தை பெற்று கொள்ள அனுமதி
  • சீனா 140 கோடி மக்கள் தொகையுடன் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. அதில், 1960ம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த பிறப்பு விகிதம் பதிவானது. 
  • கடந்த ஓராண்டில் 1.2 கோடி குழந்தைகளே பிறந்துள்ளன. இது கடந்த 2019ஐ காட்டிலும் 5ல் ஒரு பங்கு குறைவாகும்.  15 முதல் 59 வயதுக்கு உட்பட்ட உழைக்கும் மக்கள் தொகை 70.1 சதவீதத்தில் இருந்து 63.3 சதவீதமாக சரிந்துள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 8.9 சதவீதத்தில் இருந்து 13.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 
  • எனவே, முதியவர்கள் அதிகம் கொண்ட நாடாக சீனா மாறிக் கொண்டிருப்பதால், இனி 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பது என ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. 
எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த பாா்வையற்றவா் சீனாவை சோந்த வீரா்
  • எவரெஸ்ட் மலையின் மீது ஏறி சாதனை படைத்துள்ளாா் சீனாவை சோந்த பாா்வையற்ற மலையேற்ற வீரா். எவரெஸ்டில் ஏறிய ஆசியாவை சோந்த முதல் பாா்வையற்றவா், உலகின் மூன்றாவது பாா்வையற்றவா் என்கிற சாதனையையும் அவா் சொந்தமாக்கியுள்ளாா்.
மே.வங்க தலைமை செயலர் ஓய்வு, மம்தாவின் தலைமை ஆலோசகராக நியமனம்
  • மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேலும், மேற்குவங்கத்திற்கு எச்.கே.திவேதி புதிய தலைமை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பழனி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட 7,000 ஆண்டு பழமையான கற்கால ஆயுதம்
  • திண்டுக்கல் மாவட்டம், பழநி சண்முகநதி ஆற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில், கற்காலக் கருவி உடைந்த நிலையில் கிடைத்துள்ளது. 
  • இதில் பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மேற்புறத்தில் 8 எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை தமிழ் எழுத்துக்கள். 5 எழுத்துக்கள் உயிர் மெய்யாகவும், 3 எழுத்துக்கள் குறில், நெடிலாகவும் உள்ளன. 
  • இந்த எழுத்து பொறிப்பை ''தெந்னாடாந்'' என வாசிக்க முடிகிறது. இதன்மூலம் கருவியின் உரிமையாளரை தென்நாடான் எனக் கொள்ளலாம். இக்கருவியின் எழுத்து பொறிப்பு இடமிருந்து வலமாக போகிறது. 
  • இந்த எழுத்துக்கள் சங்ககாலத் தமிழ் எழுத்துக்களான தமிழியின் முன்னோடிகளாக உள்ளன. ஆனால் குறில், நெடில் குறிகள் தமிழைப்போல் எழுத்துகளுடன் ஒட்டியிராமல் தனித்தனி எழுத்துகளாக எழுதப்பட்டுள்ளன.
  • இந்த எழுத்துக்கள் கூர்மையான வடிவம் கொண்ட தாமிரம் போன்ற உலோகத்தால் வடிக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கருவியின் காலத்தை சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் என கணிக்கலாம். 
  • அதாவது கிமு 5 ஆயிரம். இரும்பு பயன்பாட்டிற்கு வராத காலம். இக்கருவியின் காலம் இடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவையாக கணிக்கலாம். இக்கற்கால கருவி கிடைத்திருப்பதன் மூலம் தமிழ் மொழி மற்றும் தமிழ் எழுத்துக்களின் உலகளாவிய தொன்மை உறுதிப்படுகிறது.
உடலில் எதிர்ப்பு சக்தியை 75 நிமிஷங்களில் கண்டுபிடிக்கும் கிட்
  • கரோனா தொற்றை சமாளிக்க உடலில் எதிர்ப்பு சக்தி எவ்வளவு உள்ளது என்பதை 75 நிமிஷங்களில் அறிந்து கொள்ளும் சிறு கருவியை (antibody detection kit) மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) உருவாக்கியுள்ளது.
  • “டிப்கேவன்” (DIPCOVAN kit) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவியில் கரோனா நோய்க்கான எதிர்ப்பு சக்தியின் அளவு குறித்து 75 நிமிஷங்களில் தெரிந்துகொள்ளலாம். வேறு நோய்களின் விவரங்கள் இதில் இடம் பெறாது. 
  • 18 மாதங்கள் வரை பயன்பாட்டு காலம் உள்ள இந்தக் கருவியில் கண்டுபிடிக்கப்படும் விவரங்கள் 97% முதல் 99% வரை துல்லியமாக இருக்கும். தில்லியைச் சேர்ந்த "வான்கார்ட் தனியார் நிறுவனத்துடன்” இணைந்து இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு பரிசோதனைக்கான செலவு சுமார் ரூ.75-ஆக இருக்கும். 
சுந்தர்லால் பகுகுணா காலமானார்
  • உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் 09-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் 1927 ஜனவரி தெஹ்ரி அருகேயுள்ள மரோடா கிராமத்தில் பிறந்தார்.
  • தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டார். மதுக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார். மகாத்மா காந்தியின் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட சுந்தர்லால் பகுகுணா இமயமலைப் பகுதியில் வனங்கள், மரங்களை அழிப்பதற்கு எதிராக 1973-ஆம் ஆண்டுகளில்" "சிப்கோ இயக்கத்தை” (Chipko movement) முன்னெடுத்தார். 
  • இதன்படி, கோபேஷ்வர், அலக்னந்தா பள்ளத்தாக்கு பகுதிகளில் இந்த அமைப்பினர் மரங்களை கட்டித்தழுவி அதனை வெட்டவிடாமல் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
  • சூழலியல்தான் உண்மையான பொருளாதாரம். அதனை பாதுகாப்பதன் மூலம் உலகில் மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியும்” என்ற முழக்கத்தை பகுகுணா முன்வைத்தார்.
பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை அமைத்தது சீனா
  • திபெத்தில் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே 6,009 மீட்டர் பள்ளத்தாக்கில் 67.22 கி.மீ. தூரத்துக்கு சீனா நெடுஞ்சாலை அமைத்துள்ளது. உலகிலேயே மிக ஆழமான பள்ளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்சாலை இதுவாகும். 
  • இந்தியாவின் அருணாசல பிரதேசத்தின் சர்வதேச எல்லைக் கோட்டுக்கு அருகே இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதன்மூலம் திபெத்தின் கடைசி நகரமான மிடாக்கை (Medog), நிங்சி (Nyingchi) நகரத்துடன் இணைக்கும் சாலை பயணம் 8 மணி நேரம் குறையும். 
  • இதில் மிடாக், அருணாசல பிரதேசத்துக்கு அருகே உள்ளது. 2014-இல் 310 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பிரம்மபுத்ரா நதியின் வழியே 67.22 கி.மீ. தூர நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை சீனா தொடங்கியது. 
  • இந்தியா-சீனா இடையேயான 3,488 கி.மீ. எல்லைப் பகுதியில் (iLine of Actual Control (LAC)) தொடர் சர்ச்சை நிலவி வருகிறது. 
மியான்மர் பல்லியின் பெயர்
  • அரபிக் கடல், வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இணைந்து பெயர்களை பரிந்துரை செய்கின்றன.
  • சமீபத்தில் அரபிக் கடலில் உருவான புயலுக்கு "டவ்-தே” என்று மியான்மர் நாடு பெயர் சூட்டியது. இது மியான்மரில் காணப்படும் ஒருவகை பல்லி இனத்தின் பெயர் ஆகும். 
இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனம் வடிவமைப்பு 
  • மத்திய ரிசர்வ் காவல் படையினருக்காக "இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனத்தை வடிவமைத்துள்ளது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ). "ரக்ஷிதா” (Rakshita) என்று பெயரிடப்பட்ட இந்த இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் தலைவரிடம் வழங்கப்பட்டன.
  • டெல்லியில் உள்ள டிஆர்டிஓ நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகமான "அணு மருத்துவ மற்றும் சார்பு அறிவியல் நிறுவனம்" (Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS)) இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளது. இதே ஆய்வகம்தான், கரோனா எதிர்ப்பு மருந்தான 2டிஜி-யை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
"ஃபேக் பஸ்டர்" எனும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
  • சமூக வலைதளம் மற்றும் இணையதளங்களில் முகமாற்றம் (Face mapping) மூலம் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டறிய "ஃபேக் பஸ்டர்” (“Fake Buster” detector) என்ற புதிய தொழில்நுட்பத்தை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரோபர் ஐஐடி (IIT Ropar) வடிவமைத்து சாதனை படைத்துள்ளது. 
  • பேராசிரியர்கள் அபிநவ் தால், ராமநாதன் சுப்ரமணியன் மற்றும் மாணவர்கள் வினீத் மேத்தா, பாருல் குப்தா ஆகியோர் கொண்ட பிரத்யேக குழு, ஆஸ்திரேலியாவின் "மோனாஷ் பல்கலைக்கழகத்துடன்" (Monash University) இணைந்து இந்தக் கருவியை தயாரித்துள்ளனர்.
  • ஒருவரின் முகத்தை இன்னொருவரின் முகம்போல மாற்றும் "ஃபேஸ் மேப்பிங்” தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel