தொழிற்சாலை விரிவாக்கம் மற்றும் துறைவாரியாக திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்
- தமிழகத்தில் ஏற்கெனவே தொழில் தொடங்கியுள்ள நிறுவனங்களின் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கான ஒப்புதல் இக்கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
- இதுதவிர சமீபத்தில் மருத்துவத் துறை தொடர்பான பொருட்களின் உற்பத்திக்கு தமிழக அரசுஅளித்துள்ள சலுகைகள் அடிப்படையில் முன்வந்துள்ள நிறுவனங்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டன.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழிற்சாலைகள், தொழிற்சாலை விரிவாக்கம் மற்றும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஜியோ- கூகுள் கூட்டணியில் உருவான குறைந்தவிலை ஸ்மாா்ட்போன்
- ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்களின் கூட்டணியில் உருவான குறைந்த விலை ஸ்மாா்ட்போன் 'ஜியோபோன் நெக்ஸ்ட்' வரும் செப்டம்பா் 10-ஆம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு வரும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளாா்.
- வரும் செப்டம்பா் 10-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தியன்று சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள 'ஜியோபோன் நெக்ஸ்ட்'-இன் விலை இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் மலிவானதாகவே இருக்கும். ஜியோவின் இந்த முயற்சி மொபைல்போன் பயன்பாட்டில் நிச்சயம் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
- மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய எரிசக்தி வா்த்தகத்தில் ரூ.75,000 கோடியை முதலீடு செய்யவுள்ளோம்.
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநா் குழுவில் சவூதி அராம்கோ நிறுவனத்தின் தலைவா் அல்-ருமயானும் இடம்பெறவுள்ளாா் என்றாா் அவா்.
வேளாண் பல்கலைக்கழக முதுநிலை மாணவரின் ஆய்வறிக்கைக்கு தேசிய விருது
- தேசிய விவசாய விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தின் 34 ஆவது நிறுவன நாள் விழா இணைய வழியில் அண்மையில் நடைபெற்றது. வேளாண் விரிவாக்க முதுநிலை, முனைவா் பிரிவில் இந்திய மாணவா்கள் மேற்கொண்ட மிகச்சிறந்த ஆராய்ச்சிப் பணிகளை கண்டறிந்து, அவா்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய அளவில் சிறந்த வேளாண் விரிவாக்க ஆய்வறிக்கை விருதை மேலாண்மை நிறுவனம் வழங்கியுள்ளது.
- அதன்படி கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி பேராசிரியா் ச.காா்த்திகேயனின் வழிகாட்டுதலின் பேரில் வேளாண் விரிவாக்கம், தகவல் தொடா்புத் துறையில் முதுநிலை படிப்பை முடித்துள்ள மாணவா் எஸ்.அரவிந்தகுமாரின், தமிழ்நாட்டில் விவசாயிகள், வேளாண் விரிவாக்க அதிகாரிகளிடையே உழவன் செயலியின் பயன்பாட்டின் பயன்பாட்டு நடத்தை மதிப்பீடு என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை தேசிய அளவில் சிறந்த அறிக்கையாகத் தோவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுமார் 7000 வருடங்கள் பழமையான கற்காலக் கருவி கண்டுபிடிப்பு
- பழனி (Palani) சண்முகநதி ஆற்றங்கரையில் ஒரு தொல்லியல் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ஆற்றங்கரையின் மேற்கு ஓரத்தில் இந்த கற்காலக் கருவி உடைந்த நிலையில் கிடைத்தது. இந்தக் கருவியை மேற்கொண்டு ஆராய்ந்ததில் தமிழ் எழுத்துப் பொறிப்புகள் இருந்ததும் கண்டறியப்பட்டது.
- பொதுவாக மனித இனத்தின் தொன்மை வரலாற்றையை பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், உலோக கற்காலம் என்றவாறு வகைப்படுத்துவார்கள். நமக்கு கிடைத்த இந்த கருவி புதிய கற்காலத்தைச் சேர்ந்தது.
- தொல்லியலில் புதிய கற்காலம் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. தமிழகத்தில் புதிய கற்காலம் என்பது பிளிஸ்டோசின் (pleistocene) காலத்தின் இறுதியாக அதாவது கி.மு 11700 ஆக உள்ளது.
- இங்கிருந்து தான் தமிழின் முதல் சங்கம் தொடங்குகிறது. இவ்வகையான புதிய கற்கால கருவிகள் மனிதனின் விலங்கு வேட்டையில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்ற சில சமூக பழக்க வழக்கங்களிலும் இக்கருவி பயன்பாட்டில் இருந்துள்ளது.
- நமக்கு கிடைத்த இக்கருவி மிகவும் உடைந்த நிலையில் உள்ளது. கற்கருவியின் முனைப் பகுதியும், பின் பகுதியும் உடைந்துள்ளது. பயன்படுத்தும் போது இது உடைந்து போன மையால் இதன் உடைமையாளன் இக்கருவியை கைவிட்டு இருக்கவேண்டும்.
- இக்கருவியில் உள்ள சிறப்பு என்னவென்றால் இக்கருவியில் பழந்தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருப்பதுதான். இக்கருவியின் தற்போதைய எடை 80 கிராம். இக்கருவியின் பளபளப்பான மேல்புறத்தில் மொத்தம் 8 எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. இவை தமிழ் எழுத்துக்கள். இவை தொல் தமிழி எழுத்து வடிவத்தை சார்ந்தவை.
- இதில் 5 எழுத்துக்கள் உயிர் மெய்யாகவும், 3 எழுத்துக்கள் குறில் , நெடில் வடிவங்களாகவும் உள்ளன. இவை இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளன.
- இந்த எழுத்துப் பொறிப்பை "தென்னாடந்" என வாசிக்க முடிகிறது. அதாவது இக்கருவியின் உடைமையாளனின் பெயரை தென்னாடன் என கொள்ளலாம். இவ்வாறு ஆட்களை பகுதிகளின் பெயர்களாக அழைப்பது தமிழர்களின் வழக்கமே.
- மேற்கத்தியான், வடக்கத்தியான், கீழ்நாடான், மேல்நாடான் என் அழைப்பது மரபு. அதை ஒட்டி இக்கருவியின் உடைமையாளரின் பெயர் தென்நாடன் என்பது புலனாகிறது. இவன் தெற்குப் பகுதியை சேர்ந்தவனாக இருக்கக்கூடும். இக்கருவியின் எழுத்துப் பொறிப்பு இடமிருந்து வலமாகப் போகிறது.
- எழுத்துக்கள் சராசரியாக 1 செ.மீ உயரமும் 0.5 மில்லி மீட்டர் ஆழமும் கொண்டவையாக உள்ளன. இந்த எழுத்துக்கள் சங்ககால தமிழ் எழுத்துக்களான தமிழியின் முன்னோடியாக உள்ளன.
- ஆனால் குறில், நெடில் குறிகள் தமிழியைப் போல் எழுத்துக்களுடன் ஒட்டியிரமால் தனித்தனி எழுத்துக்களாகவே எழுதப்பட்டுள்ளன.
- எழுத்துக்கள் கூர்மையான வடிவம் கொண்ட ஏதோ ஒரு உலகத்தால் குறிப்பாக தாமிரத்தால் வடிக்கப்பட்டிருக்க வேண்டும். எழுத்துக்களின் தொடக்கம் தெளிவாக உள்ளது. ஆனால் போகப்போக உலோகத்தின் கூர்மை மங்கிப் போனதால் எழுத்துக்கள் சிதைவுற்று காணப்படுகின்றன.
- இக்கருவியின் காலத்தை சுமார் 7000 ஆண்டுகள் என கணிக்கலாம். அதாவது கி.மு 5000 இரும்பு பயன்பாட்டிற்கு வராத காலம் மற்றும் தாமிர காலம் அடிப்படையிலும் தொல் தமிழி எழுத்துக்கள் என்ற அடிப்படையிலும் இவ்வாறு கணிக்கலாம்.
- இறையனார் அகப்பொருள் உரை எனும் கி.பி 7 ஆம் நூற்றாண்டு இலக்கியத்தின் அடிப்படையில் இடைச்சங்க காலமானது கி.மு 6900 க்கும் கி.மு 3200 க்கும் இடைப்பட்ட காலம். எனவே இக்கருவியின் காலத்தை மேற்கண்ட காரணிகளால் இடைச்சங்க காலத்தை சேர்ந்தது.
- அதாவது 7000 ஆண்டுகளுக்கு முன் (கி.மு 5000 அளவில் என கணிக்கலாம்) இக்கற்கால கருவி கிடைத்திருப்பதன் மூலம் தமிழ்மொழி மற்றும் தமிழ் எழுத்துக்களின் உலகளாவிய தொண்மை உறுதிப்படுத்திகிறது.