உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கம்
- பூஜா அகர்வால் கடந்த 2012-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஊனமடைந்தார். பின்னர் அதிலிருந்து மீண்ட அவர் 2014-ல் இந்தியன் வங்கியில் பணியில் சேர்ந்தார்.
- 2016-ம் ஆண்டு முதல் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற தொடங்கினார். 2017-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த உலக மாற்றுத் திறனாளிகள் துப்பாக்கி சுடுதல் உலகப் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் வென்று முதலாவது சர்வதேச பதக்கத்தை வென்றார்.
- அதே ஆண்டில் நடந்த 61-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- தற்போது பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா கடற்படை பயிற்சி
- இந்திய - பசிபிக் கடல் பகுதியில், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள், 'குவாட்' என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன.
- இந்நிலையில், இந்திய பெருங்கடலில், திருவனந்தபுரத்தை ஒட்டிய கடற்பகுதியில், இந்திய - அமெரிக்க கடற்படை மற்றும் விமானப் படையின் இரண்டு நாள் போர் பயிற்சி துவங்கியது.
- இந்த கூட்டு போர் பயிற்சியில், அமெரிக்காவின் அணு ஆயுத போர் விமானம் தாங்கி கப்பலான, 'ரொனால்டு ரீகன், எப் - 18, இ - 2சி' போர் விமானங்கள், ஏவுகணையுடன் கூடிய 'யு.எஸ்.எஸ். ஷிலோ' கப்பல் ஆகியவை ஈடுபட்டுள்ளன.
- இந்திய கடற்படை கப்பல்கள், 'ஜாகுவார், சுகோய் - 30, மிக்' போர் விமானங்கள் உள்ளிட்டவையும் இப்பயிற்சியில் இடம் பெற்றுள்ளன.
வளர்ச்சி 9.6 சதவீதம் மூடிஸ் நிறுவனம் கணிப்பு
- நடப்பு, 2021ம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 9.6 சதவீதமாக இருக்கும் என, 'மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீசஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது.
- இதற்கு முன் இந்நிறுவனம், வளர்ச்சி, 13.9 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது அதை குறைத்து, 9.6 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. அடுத்த, 2022ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி, 7 சதவீதமாக இருக்கும்.
இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது நியூசிலாந்து
- இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. அதன் மூலம் கேப்டன் கேன் வில்லியம்சனின் அணியினர் சரித்திர சாதனை படைத்துள்ளனர்.
- இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை வேகப்பந்து வீச்சாளர் கெய்ல் ஜேமிசன் வெல்ல வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.
நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை நீட்டிப்பதாக மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்
- மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கொரோனா 3 ஆவது அலை பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றியும் கலந்தாலோசித்தனர்.
- அப்போது பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு மாதம் 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை ஜூலை முதல் நவம்பர் வரை நீட்டிக்க இந்த மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.