Type Here to Get Search Results !

இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் அறிக்கை / The Centre for Monitoring Indian Economy (CMIE) Report

 

  • கொரோனா இரண்டாம் அலையால், இந்தியாவின் பொருளாதார நிலையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இந்திய பொருளாதார மத்திய கண்காணிப்பகம் (The Centre for Monitoring Indian Economy (CMIE)) அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையால் நாட்டில் 97% குடும்பங்கள் பொருளாதாரப் பிரச்னைகளை சந்தித்துள்ளதாகவும், கடந்த ஏப்ரல் மாதம் வேலையின்மை விகிதம் 8% அதிகரித்துள்ளதாகவும், இது மே மாதத்தில் 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்கிற அதிர்ச்சித் தகவல்கள் அந்த ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
  • கடந்த 2020-ம் ஆண்டு, மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சில வாரங்களிலே, அமைப்புசாரா துறைகளில் இருந்தவர்களில் 10 கோடி பேர் வேலையை இழந்தனர்.
  • தொழில்கள் முடங்கிடாத வகையில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடந்த மே மாதத்தில் மட்டும் நாடெங்கிலும் 1.5 கோடி பேருக்கு மேல் வேலையை இழந்திருப்பதாக சி.எம்.ஐ.இ அமைப்பு தெரிவிக்கிறது. 
  • இந்தியாவில் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 40.07 கோடி பேர் வேலையில் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை மே மாத இறுதியில் 37.55 கோடியாகக் குறைந்துள்ளது.
  • இது ஒரு பக்கம் இருக்க, புதிய வேலைவாய்ப்பு குறித்த நிலவரமும் மோசமாகவே உள்ளது. சுற்றுலாத் துறையில் புதிதாக ஆள் எடுப்பு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் 30% குறைந்துள்ளது. 
  • கல்வி, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் 20% - 30% குறைவாகவும் தொலைத் தொடர்புத்துறை, வங்கிகள் சார்ந்த வேலைகளில் 10% - 20% வரையிலும் வேலைவாய்ப்புகள் குறைவாகவும் உள்ளன.
  • சென்ற ஆண்டு முதல் அலையின்போது வேலையிழந்தவர்களில் பலர் இன்னும் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற முடியாமல் திணறி வருகின்றனர். 
  • இந்தச் சூழலில், கொரோனா இரண்டாம் அலையில் ஏற்படத் தொடங்கியிருக்கும் வேலையிழப்பும் நிறுவனங்கள் புதிதாக ஆட்கள் எடுப்பதைக் குறைத்து வருவதும் நிலைமை இன்னும் மோசமாக்கும் என்றே இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel