Type Here to Get Search Results !

TNPSC 27th JUNE 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சிவகளை அகழாய்வில் ஒரே குழியில் 16 தாழிகள்

  • தமிழக தொல்லியல்துறை சார்பில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதல்கட்ட அகழாய்வும் நடைபெற்று வருகின்றன. 
  • தொல்லியல்துறை அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
  • சிவகளை அகழாய்வில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிவகளை பரம்பு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் இருந்தன.
  • இவற்றில் 5 முதுமக்கள் தாழிகள் மூடியுடன் உள்ளன. 10 முதுமக்கள் தாழிகள் பெரிய அளவில் உள்ளன. ஒவ்வொரு முதுமக்கள் தாழியும் 2 அடி முதல் 4 அடி உயரம் உள்ளன. இதுதவிர பானைகளும், பானை ஓடுகளும், தமிழ் பிராமி எழுத்துகளும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

டிசம்பருக்குள் 135 கோடி தடுப்பூசி

  • கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த 2ம் தேதி நடந்த விசாரணையின்போது, தடுப்பூசி போடப்படும் நிலவரம் குறித்த முழு விவரங்களையும் தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. 
  • அதன்படி, ஒன்றிய அரசு நேற்று தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், 'இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் நாடு முழுவதும் 135 கோடி டோஸ் தடுப்பூசி போடப்படும். 
  • 2020ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் 18 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை 94 கோடியாக உள்ளது. இவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி வழங்க 188 கோடி தடுப்பூசிகள் தேவை. ஜூலை 31ம் தேதிக்குள் நாட்டில் 51.6 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்
புதுச்சேரியில் அமைச்சர்கள் பதவியேற்பு
  • புதுச்சேரியில் நடந்து முடிந்த 15வது சட்டசபை தேர்தலில், என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி மே 7ல் முதல்வராக பதவியேற்றார்.
  • மத்திய உள்துறை அமைச்சகம், பா.ஜ.,வைச் சேர்ந்த நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், என்.ஆர்.காங்., கட்சியைச் சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீ ஜெயகுமார், சந்திரபிரியங்கா ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க, 25ம் தேதி ஒப்புதல் வழங்கியது.
  • நமச்சிவாயம் உள்ளிட்ட ஐந்து பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு, கவர்னர் தமிழிசை பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் 22 ஆண்டுகள் விளையாடிய முதல் வீராங்கனை - மித்தாலி

  • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் 22 ஆண்டுகள் விளையாடிய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையானார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ். 
  • இங்கிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் களம் கண்டதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார் அவர்.
  • 38 வயதான அவர் இதுவரை 215 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 1999 ஜூனில் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக அறிமுக வீராங்கனையாக களம் இறங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • தனது 215வது போட்டியில் அவர் 72 ரன்களை சேர்த்திருந்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி களத்தில் அவர் 7170 ரன்களை சேர்த்துள்ளார்.

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற இந்தியா

  • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி சார்பில் தீபிகா குமாரி, கோமளிகா பாரி, அங்கிதா பகத் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் இறுதிச் சுற்றில் மெக்சிகோ அணியை ஐந்துக்கு ஒன்று என்கிற கணக்கில் வீழ்த்தித் தங்கப்பதக்கம் வென்றனர். 
  • மேலும், உலக கோப்பை வில்வித்தையில் கலப்பு இரட்டையர் 'ரிகர்வ்' மற்றொரு பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி - அட்டானு தாஸ் ஜோடி இறுதி போட்டியில் நெதர்லாந்து ஜோடியை எதிர்கொண்டது. இதில் தீபிகா குமாரி - அட்டானு தாஸ் 5-3 என வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்றனர்.
  • ஆண்களுக்கான 'காம்பவுண்ட்' தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா, அமெரிக்க வீரர் கிரிஸ் ஸ்கேப்பை எதிர்கொண்டார்.இந்த போட்டியின் முடிவில் அபிஷேக் வர்மா 10-9 என்ற புள்ளி கணக்கில் கிரிஸ் ஸ்கேப்பை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel