Type Here to Get Search Results !

TNPSC 19th MAY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

டவ் தே புயல் பாதிப்பு குஜராத்தில் நிவாரண பணிகளுக்கு ரூ1000 கோடி ஒதுக்கீடு - பிரதமர் மோடி அறிவிப்பு

  • அரபிக் கடலில் உருவான அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில நாட்களுக்கு முன் அதிதீவிர புயலாக வலுவடைந்தது. டவ்-தே என்ற பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாகக் கேரளா கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மிகக் கன மழை பெய்தது.
  • இந்த புயலின் கோரத் தாண்டவத்தால் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டவ்-தே அதிதீவிர புயலானது திங்கள்கிழமை நள்ளிரவில் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் கரையைக் கடந்தது.
  • அப்போது குஜராத், டாமன் டையு, மகாராஷ்டிரா சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அம்மாநிலத்தின் பல பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
  • இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டவ்-தே புயலால் குஜராத் மற்றும் டாமன் டையு மாநிலங்களில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்தார். 
  • இந்நிலையில், டவ்-தே புயல் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இடைக்கால நிதியாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். 
  • அதேபோல இந்த புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும். காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரேப்பிட் ஆன்டிஜன் முறைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி

  • கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே இந்த ரேப்பிட் ஆன்டிஜன் முறையில் பரிசோதனை செய்ய வேண்டும். இதில் ஒருவருக்கு பாசிடிவ் என்ற முடிவு வந்தால், அவர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யத் தேவையில்லை. அதேநேரம் கொரோனா அறிகுறிகள் இருந்தும் நெகடிவ் என முடிவு வந்தால், அவர் உடனடியாக RTPCR பரிசோதனை செய்ய வேண்டும்.
  • கொரோனா அறிகுறி உள்ளவர்களும், கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் மட்டும் இதைப் பயன்படுத்தினால் போதும்" எனக் கூறப்பட்டுள்ளது. 
  • தற்போது வரை CoviSelfTM(PathoCatch) Covid-19 OTC Antigen LF ஆகிய ரேப்பிட் சோதனை கருவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் விளக்கப்பட்டிருக்கும் முறையைப் பின்பற்றி ஒருவர் கொரோனா பரிசோதனையை வீடுகளிலேயே மேற்கொள்ளலாம்.

பாஸ்பேட் உர மானியத்தை உயர்த்தியது மத்திய அரசு

  • சர்வதேச அளவில் உரம் விலை உயர்ந்துள்ளது. அதனால் உள்நாட்டிலும் உரம் விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், உர மானியத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
  • இதையடுத்து, பிரதமர், மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், நிறுவனங்களுக்கு வழங்கும், உர மானியத்தை, 140 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • இதனால், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 14 ஆயிரத்து,775 கோடிரூபாய் செலவாகும். இதன் மூலம், விவசாயிகள், ஒரு மூட்டை பாஸ்பேட் உரத்தை, பழைய விலைக்கே, அதாவது, 1,200 ரூபாய்க்கே வாங்கலாம். 'உர மானியம் இந்த அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது இதுவே முதன் முறை'. 
ஜல் ஜீவன் திட்டம் 15 மாநிலங்களுக்கு முதல் தவணை விடுவிப்பு
  • 2021-22-ஆம் நிதியாண்டில் ஜல் ஜீவன் திட்டத்தை அமல்படுத்துவதற்காக 15 மாநிலங்களுக்கு முதல் கட்டமாக ரூ.5,968 கோடியை மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டமானது 15 ஆகஸ்ட் விடுவித்துள்ளது. தொடங்கப்பட்டது. 
  • 2019-ல் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் 93% குடிநீர் விநியோகத்துக்கான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், 5% அது சார்ந்த இணை நடவடிக்கைகளுக்கும், 2% நீரின் தரத்தை உறுதி செய்தல் மற்றும் கண்காணித்தல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும். 
  • மாநிலங்களில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டப் பணிகளின் நிலவரம், மத்திய அரசு வழங்கிய நிதியின் பயன்பாடு, திட்டத்துக்காக மாநில அரசின் பங்கு ஆகியவற்றை ஆராய்ந்து ஜல் ஜீவன திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வீடுவிக்கிறது. 
  • 2021-22 காலகட்டத்துக்கான பட்ஜெட்டில் ஜல் ஜீவன் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.50,011 கோடியாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கரோனா மரபியல் ஆய்வுக் குழுத் தலைவர் ராஜிநாமா 
  • கரோனா தீநுண்மி மரபியல் ஆய்வுக் குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து ஷாஹித் ஜமீல் ராஜிநாமா செய்துள்ளார். 
  • இந்தியாவில், "பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் பிரிவு” கரோனா தீநுண்மி பரவியதால் அதுகுறித்து அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த, நாட்டில் உள்ள 10 ஆய்வு மையங்களை ஒருங்கிணைத்து 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கரோனா தீநுண்மி மரபியல் ஆய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்தது. 
  • அதன் தலைவராக தீநுண்மி ஆராய்ச்சியாளர் "ஷாஹித் ஜமீல்" நியமிக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel