Type Here to Get Search Results !

TNPSC 17th APRIL 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

தஞ்சையில் நாயக்கர் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

 • தஞ்சை வடக்கு வீதியில் நாயக்கர் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த கல்வெட்டு தஞ்சை நாயக்கர் ஆட்சிக்காலத்தை சேர்ந்தது.
 • 3½ அடி உயரமும் 1¼ அடி அகலமும் கொண்டது. இதில் 15 வரிகள் உள்ளன. தஞ்சையில் கி.பி. 1535 முதல் கி.பி. 1675 வரை 140 ஆண்டுகள் நாயக்கர் ஆட்சி நடைபெற்றது. 
 • இவர்களுடைய ஆட்சியில் பல புதிய கோயில்கள் கட்டுதல், பழுதடைந்த கோயில்களை சீரமைத்தல் மற்றும் அவைகளுக்கு அறக்கொடை வழங்குதல் போன்றவை நடைபெற்றது. 
 • அந்த வகையில் இன்றைய சீனிவாசபுரம் பகுதிக்கு மேற்கே மேலவெளி ஊராட்சியில் சிங்கப்பெருமாள் குளம் எனும் இடத்தில் அமைந்திருந்த சிங்கப்பெருமாள் கோயிலுக்கு வழங்கிய கொடை பற்றி இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
 • இதில் சங்கு, சக்கர சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. வெட்டப்பெற்ற ஆண்டு, மாதம், தானம் அளித்தவர் பெயர் எதுவும் இல்லை. இக்கல்வெட்டு குறிப்பிடும் செய்தி, சிங்கப்பெருமாள் கோயிலுக்காக பூர்வதர்மமாக வழங்கப்பட்ட நந்தவனம், பூந்தோட்டம் ஆகிய சொத்துக்களுக்கு விரோதமாக யாராவது செயல்பட்டால் அவர்கள் கங்கைக்கரையில் காராம் பசுவினைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்கின்றது. 

கிரிஜா வைத்தியநாதனை தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினராக நியமித்தது செல்லும்

 • தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் - உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கு விசாரணையின் முடிவில் அவரை உறுப்பினர் பதவியில் நியமனம் செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 • "கிரிஜா வைத்தியநாதன் தரப்பு பதிலை பரிசீலித்ததில், அவர் சுற்றுச்சூழல் செயலாளராகவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் செயல்பட்டது மற்றும் சுகாதார செயலாளராக இருந்த போது, பயோமெடிக்கல் கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்திய நடவடிக்கை போன்றவற்றை கவனத்தில் கொண்டு, அவரது நியமனம் செல்லும்," என குறிப்பிட்டனர்.
இந்திய விமானப்படை தளபதிகள் மாநாடு தொடக்கம் 
 • இந்திய விமானப்படை தளபதிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு (Indian Air Force Commanders' Conference 2021) ஏப்ரல் 15 அன்று தொடங்கியது. நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து இந்த மாநாட்டின் போது ஆய்வு செய்யப்படுகிறது. 
 • விமானப்படை தளபதிகள் மாநாடு ஆண்டுக்கு இருமுறை (bi-annual) நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டின் முதலாவது மாநாடு தில்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் தொடங்கியது. 
 • எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய விமானப்படையின் செயல் திறனை மேம்படுத்துவது, நிர்வாகத் திறனை மேம்படுத்துவது, மனித வளங்களை முறையாகப் பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து தளபதிகள் இம்மாநாட்டில் விவாதிப்பாளர்கள். 
15ஆம் நூற்றாண்டு கல்செக்கு உரல் கண்டெடுப்பு
 • காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே விண்ணமங்கலத்தில் 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை கல்செக்கு (stone-ural inscription) ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் இருப்பதை வரலாற்று ஆய்வு மையத்தினர் ஏப்ரல் 15 அன்று கண்டெடுத்துள்ளனர்.
 • ஒரு மன்னரோ அல்லது பெரும் செல்வந்தரோ தனது குடும்பத்தார் உடல் நலம் பெற வேண்டி அந்தக் காலத்தில் ஆலயத்துக்கோ அல்லது ஊருக்காகவோ கல்செக்கை தானமாக வழங்கியிருக்கிறார்கள். அவ்வாறு தானம் வழங்கும் செக்கில் எந்த ஆண்டு, யார் தானமாக வழங்கினர் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். 
 • அதன்படி, இச்செக்கில் மூன்று வரியில் குரோதன ஆண்டில் புக்கண்ணராயர் ஆட்சிக் காலத்தில் கலை வாணிகன் என்பவர் இந்த கல்செக்கு உரலை ஊருக்கு தானம் அளித்துள்ள செய்தி இடம் பெற்றுள்ளது. 
 • சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தைச் சார்ந்த அரியவகை கல்செக்கு இதுவாகும். இக்கல்செக்கு கிடைத்த பகுதி செக்குமேடு என்றும் அழைக்கப்படுகிறது. 
 • உத்தரமேரூர் வட்டாரத்தில் உள்ள ஒரே செக்கு கல்வெட்டு இது என்பதும் கூடுதல் சிறப்பாகும். 1923-ஆம் ஆண்டில் இது அரசால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 
ஆசிய மல்யுத்தம் சரிதாவுக்கு தங்கம்
 • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சரிதா தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 5 கான் அல்மேட்டி நகரில் இந்திய வீராங்கனை சரிதா, இறுதிச்சுற்றில் மங்கோலிய வீராங்கனை ஷூவ்தார் பாட்டர்ஜாவை வீழ்த்தினார்.
அசோக் லேலண்ட் தயாரித்த குண்டு துளைக்காத வாகனம்
 • அசோக் லேலண்ட் நிறுவனம் லாக்கீட் மாா்ட்டினுடன் இணைந்து தயாரித்த குண்டு துளைக்காத இலகு ரக வாகனம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 • இந்திய விமானப் படைக்கு தேவையான இலகுரக குண்டு துளைக்காத வாகனத்தை (எல்பிபிவி) தயாரிக்கும் ஒப்பந்தத்தைப் அசோக் லேலண்ட் பெற்றது.
 • இதையடுத்து, லாக்கீட் மாா்ட்டின் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப பரிமாற்ற (டிஓடி) ஒப்பந்தத்தின் கீழ் இந்த வாகனத்தை அசோக் லேலண்ட் உருவாக்கியுள்ளது.
 • முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த வாகனம் லாக்கீட் மாா்டின் 'சிவிஎன்ஜி' வாகனத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்த வாகனம் முதல் கட்டமாக ஏப்ரல் 13-ஆம் தேதி விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 • எல்பிபிவி வாகனம் சேறு, மண், பாறை, நீா் உள்ளிட அனைத்திலும் இயங்கக்கூடியது. இதில், தாக்குதலுக்கு தேவையான கணிசமான உபகரணங்களை கொண்டு செல்லலாம் என்பதுடன், 6 போ அடங்கிய குழுவும் இந்த வாகனத்தில் பயணிக்கலாம் என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத், அன்ஷு மாலிக் ஆகியோா் தங்கம் வென்றனா்
 • கஜகஸ்தானின் அல்மேட்டி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் மகளிா் 53 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற வினேஷ் போகத், ஒரு புள்ளியைக்கூட இழக்காமல் தங்கம் வென்றுள்ளாா். 
 • சீனா மற்றும் ஜப்பானைச் சோந்த வீராங்கனைகள் பங்கேற்காததால் வினேஷ் போகத்தின் வெற்றி எளிதானது. மகளிா் 57 கிலோ எடைப் பிரிவில் 19 வயதான அன்ஷு மாலிக் தங்கம் வென்றாா்.
 • வினேஷ் போகத், அன்ஷு மாலிக் ஆகியோா் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். வினேஷ் போகத் இதற்கு முன்பு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 3 வெள்ளி உள்பட 7 பதக்கங்கள் வென்றிருந்தபோதிலும், இப்போதுதான் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளாா்.
 • இதேபோல் இந்தியாவின் திவ்யா காக்ரன் (72 கிலோ எடைப் பிரிவு) தங்கமும், சாக்ஷி மாலிக் (65 கிலோ எடைப் பிரிவு) வெள்ளிப் பதக்கமும் வென்றனா்.
 • ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 4 தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel