வானில் பறக்கும் இ-டாக்ஸி சென்னை ஐஐடி வடிவமைப்பு
- போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பறக்கும் டாக்ஸியை வடிவமைக்க சென்னை ஐஐடி திட்டமிட்டது. அதற்காக 'தி இ-பிளேன் கம்பெனி' (The ePlane Company) என்ற புதிய நிறுவனத்தை கடந்த ஆண்டு நிறுவியது. இந்நிலையில், மின்கலம் (பேட்டரி) மூலம் இயங்கும் பறக்கும் இ-டாக்ஸியை ஐஐடி வடிவமைத்துள்ளது.
- சிறிய விமான வடிவிலான இ-டாக்ஸியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது. மின்கலம் (பேட்டரி) மூலம் இயங்கும் இதில் 2 பேர் பயணிக்க முடியும். இந்த இ-டாக்ஸி சுமார் 200 கிலோ அளவிலான எடையை சுமந்தபடி மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
- இ-டாக்ஸி சோதனை ஓட்டம் வரும் ஜூலை மாதம் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டில் முழு வடிவம் பெற்று பயணிகளை ஏற்றிச் செல்லதயாராகிவிடும். இது நடைமுறைக்கு வரும்போது, வழக்கமான கால்டாக்ஸியைவிட 2 மடங்குமட்டுமே வாடகை அதிகம் இருக்கும்.
ஆப்கானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படை முழுமையாக வாபஸ் - அதிபர் பைடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- அமெரிக்காவில் கபந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், புதிய அதிபராக பதவியேற்றதில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.
- கடந்த முறை டிரம்ப் அதிபராக இருந்தபோது எடுத்த முக்கிய முடிவகளில், ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதும் ஒன்றாகும்.
- ஆனால், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்து விடும் என்ற காரணத்தால், குறிப்பிட்ட அளவு வீரர்களை மட்டுமே திரும்பப் பெற்றார். 2500 வீரர்கள் தொடர்ந்து ஆப்கானில் தங்கியுள்ளனர்.
- இந்நிலையில், புதிய அதிபரான பைடன், அமெரிக்க வீரர்களை வரும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் முழுமையாக திரும்பப் பெறப்படுவார்கள் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
விண்வெளி அதிசயமான 'கருந்துளையின் மல்டி பேண்ட்' புகைப்படத்தை வெளியிட்ட சீன விஞ்ஞானிகள்
- விண்வெளியில் உள்ள அதிசயங்களில் ஒன்றான 'கருந்துளையின்' பல வளையங்கள்(மல்டி பேண்ட்)கொண்ட புகைப்படத்தை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
- அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா,பல வருடங்களாக விண்வெளி ஆராய்ச்சியில் மர்ம முடிச்சாக இருந்து வந்து கருந்துளை(black hole)யினைக் கண்டுபிடித்து அதன் புகைப்படத்தை முதல் முறையாக 2019ஆம் ஆண்டு வெளியிட்டது.
- இதனைத் தொடர்ந்து,சீன விஞ்ஞானிகள் கருந்துளையினைச் சுற்றி 'பல வளையங்கள்'(மல்டி பேண்ட்) இருக்கும் புகைப்படத்தினை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
- இந்த புகைப்படத்தில்,கருந்துளையின் மையப் பகுதியானது கருப்பு நிறத்திலும்,அதனைச் சுற்றியுள்ள வளையமானது ஆரஞ்சு நிறத்திலும் உள்ளது.
- மேலும், மஞ்சள் நிற வெப்பமான வாயுக்களும் இடம் பெற்றுள்ளன.இந்த கருந்துளையினை, சீனாவின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியான 'தியான்மா' படம் பிடித்துள்ளது.
- கருந்துளையானது,பூமியிலிருந்து சுமார் 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலும்,சூரியனை விட 6.5 பில்லியன் மடங்கு பெரியதாகவும் இருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- இந்திய மண்ணிலிருந்து மனிதா்களை முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்புவதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மேற்கொண்டு வருகிறது.
- நாடு சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டான 2022-இல் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட இடையூறுகளால் இத்திட்டத்தின் பணிகள் தாமதமடைந்துள்ளன.
- இந்நிலையில், 'ககன்யான்' திட்டத்தில் இந்தியாவும் பிரான்ஸும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் ஜான் ஈவ் லெடிரியன், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தைப் பாா்வையிட்டாா். அதையடுத்து, ஜான் ஈவ் லெடிரியன், இஸ்ரோ தலைவா் சிவன் ஆகியோா் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
- அதன்படி, இந்திய விண்வெளி வீரா்களுக்கு பிரான்ஸில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ககன்யான் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமைப்பில் பணிபுரிபவா்களும் பிரான்ஸில் பயிற்சி பெறவுள்ளனா். திட்டம் தொடா்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், விண்வெளி வீரா்களுக்கான உணவு உள்ளிட்டவற்றைத் தயாா் செய்வதில் ஒத்துழைப்பு அளிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
- கருவிகளைப் பயன்படுத்த அனுமதி: பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள கருவிகள் உள்ளிட்டவற்றை இந்திய விண்வெளி வீரா்கள் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
- சா்வதேச விண்வெளி நிலையத்தில் பிரான்ஸ் சாா்பில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை இந்திய வீரா்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- பல்வேறு பாதுகாப்புக் கருவிகளும் இந்திய வீரா்களுக்கு வழங்கப்படவுள்ளன. விண்வெளி வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான பிரத்யேக மையத்தை பெங்களூரில் கட்டமைக்கவும் பிரான்ஸ் உதவி செய்யவுள்ளது.