3,400 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு
- எகிப்து நாட்டில் அகழ்வாராய்ச்சியின் மூலம் சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான எகிப்தில் Luxor நகரத்துக்கு அருகே Kings பள்ளத்தாக்கில் மண்ணில் புதைந்திருந்த எகிப்தின் மிகப் பெரிய பண்டைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இது சுமார் 3,400 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை ஆண்ட Pharaohs மன்னர் Tutankhamun ஆட்சியின் கீழ் இருந்த பெருநகரம் என கூறப்படுகிறது.
- அகழ்வாராச்சியில் அப்பகுதியில் ஏகப்பட்ட மனித மற்றும் விலங்குகளின் எச்சங்கள், மண் பாண்டங்கள் , நகைகள், முத்திரைகள் பதித்த செங்கற்கள் உள்ளிட்ட பல அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- காலத்தால் மண்ணில் புதைந்துபோன அந்த நகரத்தில் குடியிருப்புகள், சேமிப்பு கிடங்குகள், கடைகள், உணவகங்கள், அடுப்புகள், சுவர்கள், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்ட அக்கருவிகள் உள்ளிட்ட பலவற்றை அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை
- கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
- அதனால் கொரோனா சிகிச்சைக்கு முக்கிய பங்கு வகிக்கும் ரெம்டெசிவர் ஊசி மருந்து சில இடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
- இதனால் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் ஊசி மருந்து விற்பனை அதிகரித்துள்ளது. புனேவில் ரெம்டெசிவர் ஊசி மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த நிலையில் இதனை கருத்தில் கொண்டும், அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டும் ரெம்டெசிவர் ஊசி மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
- ரெம்டெசிவர் மருந்தை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் தங்களது விநியோகஸ்தர்கள், ஸ்டாக்கிஸ்டுகளின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், மருந்து ஆய்வாளர்கள் அதனை சரிபார்த்து பதுக்கல் மற்றும் கருப்புச் சந்தைப்படுத்தலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ரூ.600 கோடி மதிப்பிலான வெள்ளத்தடுப்பு திட்டப்பணிகளை செயல்படுத்த ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி தர சம்மதம்
- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின்போது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 டிஎம்சி வரை மழை நீர் வீணாக கடலில் கலக்கும் அவல நிலை தான் உள்ளது. மேலும், மழை நீரை சேமித்து வைக்க போதிய கட்டமைப்புகள் இல்லை.
- இப்பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் சென்னையில் ரூ.600 கோடி செலவில் 60 ஏரிகள், பாலாறு, அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு உள்ளிட்ட பல்வேறு ஆற்றுப்படுகைகளில் 15 இடங்களில் தடுப்பணை அமைத்து அதில் மழை நீரை சேமித்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் ஏரிகளின் பழைய கொள்ளவை மீட்பதன் மூலம் கூடுதல் நீரை சேமித்து வைக்க முடியும்.
- அதே நேரத்தில் தடுப்பணைகள் அமைப்பதன் மூலம் சேமித்து வைக்கப்படும் நீர் அப்பகுதிகளில் நிலத்தடி நீரை உயர்த்த முடியும்.
- மேலும், தடுப்பணைகளில் சேமித்து வைக்கப்படும் நீரை குடிநீர் மற்றும் விவசாயிகளின் பாசன தேவைகளுக்காக திருப்பி விட்டு பயன்படுத்தப்படுகிறது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
- இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் உலக வங்கி, நபார்டு வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடம் கடனுதவி கேட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- ஆனால், இந்த திட்டப்பணிகளை மேற்கொள்ள நிதி தர ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைகா) நிதி தர சம்மதம் தெரிவித்தள்ளது.
- இதை தொடர்ந்து அடுத்த அரசு அமைந்தவுடன் இந்த திட்டப்பணிகளுக்கு தமிழக அரசின் சார்பில நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இந்த புதிய திட்டப்பணிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.