Type Here to Get Search Results !

TNPSC 18th MARCH 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வாகனங்கள் அழிப்பு கொள்கை குறித்த விளக்க அறிக்கை

  • 2021-22-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பழைய வாகனங்களை புழக்கத்திலிருந்து நீக்குவது தொடர்பான அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. 
  • இது தொடர்பான கொள்கை விளக்கத்தை தரைவழி போக்குவரத்து அமைச்சகம் தயாரித்தது. இதன்படி தனி நபர் உபயோக வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலிருந்தால் அவற்றை புழக்கத்திலிருந்து நீக்குவது எனவும், அரசு மற்றும் பொது உபயோக வாகனங்களாயிருப்பின் 15 ஆண்டுகளுக்கு அதிகமாயிருப்பின் அவற்றை புழக்கத்திலிருந்து நீக்குவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • பழைய வாகனங்களை அழித்துவிட்டு அதற்கான சான்றை காட்டும்தனி நபர் வாகன உரிமையாளருக்கு புதிய வாகனம் வாங்குதற்கான விலையில் 5 சதவீத சலுகை அளிக்கப்படும். இதை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சான்றை காட்டும் வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும் என்றுகுறிப்பிட்டார். 
  • இதன் மூலம் வாகனவிற்பனை அதிகரிக்கும். எரிபொருள் நுகர்வு குறையும். சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும். வாகனங்கள் புதிதாக இருப்பதால் பயணமும் பாதுகாப்பானதாக அமையும். 
  • மேலும் வாகனங்களை அழிக்கும் பணியில் ஈடுபடும் தொழில் நிறுவனங்கள் முறைசார்ந்த நிறுவன அந்தஸ்தைப் பெறும். பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம் கிடைக்கும் பொருட்கள் மறு சுழற்சிக்கு உதவியாக இருக்கும். 
  • அமைச்சகத்தின் கணக்குப்படி 51 லட்சம் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலானவை. இலகு ரக வாகனங்களில் 34 லட்சம் 15 ஆண்டுகளுக்கு மேலானவை. நடுத்தர மற்றும் கனரக வாகனங்களில் 15 ஆண்டுகளுக்கு மேலானவற்றின் எண்ணிக்கை 17 லட்சமாக உள்ளது. இந்த வாகனங்கள் வெளியிடும் புகையால் வழக்கமான புதிய வாகனங்கள் வெளியிடும் புகை அளவைக் காட்டிலும் 10 முதல் 12 மடங்கு அதிகம் என்றார்.
  • 15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்குவதற்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது

  • கடந்த, 2015ல், இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டு உச்ச வரம்பு, 24 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதன் மூலம், 26 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு கிடைத்து உள்ளது. 
  • தற்போது, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மூலதன நிதிச் சிக்கலில் உள்ளன. ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனப் படும், இன்சூரன்ஸ் ஒழுங்கு முறை ஆணையம் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்த பிறகே, அன்னிய நேரடி முதலீடு உச்ச வரம்பு, 74 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
  • இதன்பின், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
சாகித்திய அகாடமி விருதுகள் 2020 
  • தமிழில் "செல்லாத பணம்" நாவலை எழுதிய எழுத்தாளர் "இமையம்”, கன்னடத்தில் “ஸ்ரீபாகுபலி அஹிம்சா திக் விஜயம்” பெருங்கவிதை நூலை (Epic Poetry) எழுதிய முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, ஆங்கிலத்தில் "வென் காட் இஸ் எ டிராவலர்” ("When God is a Traveller") என்ற கவிதை நூலை எழுதிய "அருந்ததி சுப்பிரமணியம்" உள்பட 20 பேருக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • கடலூர் மாவட்டம், கழுதூரில் பிறந்த எழுத்தாளர் இமையத்தின் இயற்பெயர் சி.வெ.அண்ணாமலை ஆகும் கவிதை நூல்கள், 4 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 2 நாடகங்கள், ஒரு பெருங்கவிதை நூல், ஒரு அனுபவ நூல் என மொத்தம் 20 மொழிகளில் வெளியான 20 நூல்கள் சாகித்ய அகாதெ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
  • அனுபவக் குறிப்பு நூலுக்காக (Memories), வங்க மொழி E Chakra எழுத்தாளர் "மணி சங்கர் முகோபாத்யாய” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தொடுக்கப்பட்டிருப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் தாமிர கேடயம் பரிசளிக்கப்படும். 
நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்கள்
  • நாடு சுதந்திரமடைந்த 75-வது ஆண்டைக் கொண்டாடும் நோக்கில் நாட்டின் 75 இடங்களில் 75 வாரங்களுக்குக் கொண்டாட்டங்களை முன்னெடுப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
  • இதையொட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து 'சுதந்திரத்துக்கான அம்ருத் மகோத்சவம்” ('Azadi Ka Amrut Mahotsav') நிகழ்ச்சியை பிரதமர் மோடி மார்ச் தொடங்கி வைத்தார். 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்கள் 15 ஆகஸ்ட் 2022 வரை நடைபெற உள்ளது.
  • மகாத்மா காந்தியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உப்பு சத்தியாகிரக பாத யாத்திரையை நினைவுகூறும் வகையில் 81 பேர் கொண்ட குழு அகமதாபாத்தில் இருந்து தண்டி கடற்கரை வரையிலான 386 கி.மீ. தூரத்தை 25 நாட்களில் நிறைவு செய்ய புறப்பட்டது. ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி இந்த யாத்திரை நிறைவடையும்.
  • மகாத்மா காந்தி 12 மார்ச் 1930-ல் உப்பு மீது விதிக்கப்படும் வரியை ரத்து செய்யக் கோரி சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரைக்குப் பாத யாத்திரை மேற்கொண்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel