Type Here to Get Search Results !

TNPSC 9th & 10th JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை. பிடெக், டிப்ளமோ பட்டங்கள் செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

  • டெல்லி இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில் பி.டெக், டிப்ளமோ படிப்பு சேர்க்கப்பட்டன. ஆனால், இதை ஏற்காத பல்கலை மானியக்குழு, தொழில்நுட்பக் கல்விகளை தொலை தூரக் கல்வியாக வழங்குவது விதிமீறல் என்று கூறியது. 
  • இதனால், 2012க்குப் பிறகு இந்த படிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், ஏற்கனவே இதை படித்த மாணவர்களின் நிலை கேள்விக்குறியானது. இது தொடர்பாக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. 
  • இறுதியாக, இது தொடர்பான வழக்கில் 2018ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், '2009-2010 கல்வியாண்டு பி.டெக், டிப்ளமோ இன்ஜினியரிங் பட்டப் படிப்புகள் அங்கீகரிக்கப்படும்' என்று தீர்ப்பளித்தது.
  • இதைத் தொடர்ந்து, '2011-2012ம் ஆண்டில் பி.டெக், டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டது. 
  • இதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் குழு எதிர்ப்பு தெரிவிக்காததால், 2011-12 கல்வியாண்டு பிடெக், டிப்ளமோ படிப்புகளும் அங்கீகரிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எல்லையில் நிலவும் கடும் குளிரை எதிர்கொள்ள உதவும் சாதனங்கள் வாங்க ராணுவத்துக்கு ரூ.420 கோடி அனுமதி

  • எல்லையில் நிலவும் கடும் குளிரை எதிர்கொள்ள உதவும் சாதனங்கள் வாங்க ராணுவத்துக்கு ரூ.420 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
  • சீனப் படையினரின் ஊடுறுவலைத் தடுக்க கிழக்கு லடாக் பகுதியில் 50,000 இந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கார்பன் மோனாக்சைடு விஷ வாயுவால் மூச்சுத் திணறலில் இருந்து இந்திய வீரர்களை, புகாரி சாதனம் காக்க வல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

  • 'கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.
  • இந்த இணையவழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள்( டேட்டா கார்டுகள்) வழங்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel