Type Here to Get Search Results !

TNPSC 11th JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கோவிஷீல்டு' தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல்

  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த 'கோவிஷீல்டு' தடுப்பூசியையும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த 'கோவேக்சின்' தடுப்பூசியையும் இந்தியாவில் பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்தது. 
  • கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான இரண்டு கட்ட ஒத்திகைகளும் நடந்து முடிந்துள்ளன. வருகிற 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இதன் அடுத்தகட்டமாக 'கோவிஷீல்டு' தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது.அந்த நிறுவனத்திடம் 1 கோடியே பாத்து லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டரை மத்திய அரசு அளித்தது.
  • மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் எச்.எல்.எல். லைப்கேர் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் இந்த ஆர்டரை அளித்தது. ஒரு டோஸ் தடுப்பூசி விலை ரூ.200 ஆகும். ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.210 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
தேசிய எரிசக்தி சேமிப்பு விருது
  • தேசிய எரிசக்தி சேமிப்பில் கடந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் மூன்று பிரிவுகளில் 13 விருதுகளை ரயில்வே துறை பெற்றுள்ளது.
  • துாய்மை மற்றும் பசுமை மிகுந்த போக்குவரத்திற்கான முயற்சிகளை ரயில்வே தொடர்ந்து மேற்கொள்கிறது. இதனால் போக்குவரத்து பிரிவில் மேற்கு ரயில்வே முதல் பரிசையும், கிழக்கு ரயில்வே இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளன. 

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் அடிக்கல் நாட்டினார் பல்கலை துணைவேந்தர்
  • இலங்கை உள்நாட்டு போரில் ஏராளமான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட மே 18ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசு வெற்றி நாளாக கொண்டாடி வரும் நிலையில், அந்நாளை இலங்கை தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர். 
  • இந்த நினைவு நாளை போற்றும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு திடீரென முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டது. 
  • இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், நினைவு சின்னம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களிடம் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • அப்போது, மாணவர்களின் கோரிக்கை மற்றும் அரசின் கோரிக்கையை ஏற்று பல்கலைக்கழக வளாகத்தில் அரசின் அங்கீகாரத்துடன், மீண்டும் பழைய வடிவத்திலேயே நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார். அதன்படி, மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அமைப்பதற்கன அடிக்கல்லை துணைவேந்தர் சற்குணராஜா நாட்டினார். இதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்திய கடற்படையின் மிகப் பெரிய பாதுகாப்பு பயிற்சி

    • இந்திய கடற்படையின் மிகப் பெரிய கடல் கண்காணிப்பு பாதுகாப்பு பயிற்சி தொடங்கவுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக 'கடல் கண்காணிப்பு' என்ற பெயரில் இந்திய கடற்படை மிகப் பெரிய பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டது. 
    • இந்த பயிற்சியை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்த பயிற்சி 2-ஆவது முறையாக இவ்வாண்டு ஜனவரி 12, 13-ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.
    • பதின்மூன்று கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 7,516 கி.மீ. நீள கடற்கரைப் பகுதிகள் மற்றும் பிரத்யேக பொருளாதார மண்டலங்களில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
    • கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பயங்கரவாதிகள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தினா். அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னா், கடலோர பாதுகாப்பு கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக மறுசீரமைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து கடல் கண்காணிப்பு பாதுகாப்புப் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel