Type Here to Get Search Results !

TNPSC 5th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்திய பணக்கார பெண்கள் பட்டியல் ரூ.54,850 கோடியுடன் ஹெச்.சி.எல் தலைவர் ரோஷ்ணி நாடார் முதலிடம் 

  • கோடக் வெல்த் ஹுருன் நிறுவனம் இந்தியாவில் உள்ள பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், சமீப காலங்களில் பெண்களும் மிக அதிக அளவில் சொத்து சேர்ப்பவர்களாக இருக்கின்றனர் என அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
  • செப்டம்பர் 2020 நிலவரப்படி குடும்ப தொழிலில் பெண்கள் எந்த அளவுக்கு பங்களிப்பு அளித்து தொழில் துறையில் சிறந்து விளங்குகின்றனர் என்பதையும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2,725 கோடியாக உள்ளது.
  • ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா ரூ.54,850 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். பயோகான் கிரண் மஜும்தார் ரூ.36,600 கோடியுடன் 2ஆம் இடத்திலும் யுஎஸ்வி நிறுவன லீனா காந்தி திவாரி ரூ.21,340 கோடியுடன் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.
  • ரூ.18,620 கோடியுடன் டிவி லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் நிலிமா மொடபார்தி 4ஆவது இடத்திலும், ரூ.11,590கோடியுடன் ஸோஹோ நிறுவனத்தின் ராதா வேம்பு 5ஆவது இடத்திலும், ரூ.10,220 கோடியுடன் அரிஸ்டா நெட்வொர்க் நிறுவனத்தின் ஜெயஸ்ரீ உள்ளால் 6ஆவது இடத்திலும், ரூ.8,690 கோடியுடன் ஹீரோ பின்கார்ப் நிறுவனத்தின் ரேணு முன்ஜால் 7ஆவது இடத்திலும் உள்ளனர்.
  • இதேபோல், அலெம்பிக் நிறுவனத்தின் மல்லிகா சரயு அமின் (ரூ.7,570 கோடி), தெர்மாக்ஸ் நிறுவனத்தின் அனு ஆகா மற்றும் மெஹர் பதம்ஜி (ரூ.5,850 கோடி), பல்குனி நாயர் மற்றும் குடும்பத்தினர் (ரூ.5,410 கோடி) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

நிலவில் தேசியக் கொடியை ஏற்றியது சீனா

  • அமெரிக்கா தனது தேசியக் கொடியை நிலவில் ஏற்றி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இரண்டாவது நாடாக சீனா இந்தப் பெருமையை பெற்றுள்ளது.
  • சீனாவின் சாங்கி-5 விண்கலம் கடந்த நவ.23-ஆம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்டது. நிலவில் மணல் மற்றும் கற்களை சேகரித்து வருவதற்காக அந்த விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷியாவையடுத்து நிலவில் இருந்து கற்களை சேகரிப்பதற்காக 3-ஆவது நாடாக சீனா அந்த விண்கலத்தை அனுப்பியது. 
  • கடந்த டிச.1-ஆம் தேதி அந்த விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. மணல் மற்றும் கற்களை சேகரித்துக் கொண்டு அந்த விண்கலம் கடந்த டிச.3-ஆம் தேதி இரவு பூமியை நோக்கிப் புறப்பட்டது.
  • இந்தக் கற்களை கொண்டு நிலவின் காலத்தைக் கண்டறிய சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனா். இந்நிலையில் சாங்கி-5 விண்கலத்தின் பயணத்தின்போது நிலவில் 2 மீட்டா் அகலம், 90 செ.மீ. நீளம் கொண்ட தனது தேசியக் கொடியை சீனா ஏற்றியுள்ளது. நிலவில் ஏற்றிய தேசியக் கொடி புகைப்படத்தை சீன தேசிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒரே மோதிரத்தில் 12,638 வைரக் கற்கள் கின்னஸ் சாதனை படைத்த உத்தரப் பிரதேச நகைக் கடை

  • உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டிலுள்ளது ரெனானி ஜூவல்லர்ஸ். அந்த நகைக் கடையின் நிர்வாக இயக்குநர் ஹர்ஷித் பன்சால். இந்த நகைக்கடையில் 12,638 வைரக் கற்களைப் பதித்து வைர மோதிரத்தை உருவாக்கியுள்ளனர். 
  • அதிக வைரக் கற்களைப் பதித்து உருவாக்கப்பட்டுள்ள மோதிரத்துக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது. சாமந்திப் பூ(MARIGOLD) வடிவில் இந்த வைர மோதிரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Indian Navy ரஷ்ய கடற்படையுடன் கூட்டு பயிற்சி

  • கிழக்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (Eastern Indian Ocean Region (IOR)) ரஷ்ய கூட்டமைப்பு கடற்படை (Russian Federation Navy (RuFN)) உடன் இந்திய கடற்படையின் (Indian Navy) இரண்டு நாள் பயிற்சி நடைபெற்றுவருகிறது.
  • இந்த பயிற்சியில் ஏவுகணை கப்பல் Varyag, பெரிய நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் அட்மிரல் பாண்டலீவ் (Admiral Panteleyev) மற்றும் நடுத்தர கடல் டேங்கர் பெச்செங்கா ஆகியவை பங்கேற்றுள்ளன. 
  • உள்நாட்டில் கட்டமைக்கப்பட்டு, வழிநடத்தப்படும் சிவாலிக் (Shivalik) மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு கொர்வெட் காட்மட் (corvette Kadmatt) ஆகியவையும் இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன.
  • கடற்படைகளுக்கு இடையில் சிறந்த நட்பையும் செயல்திறனை மேம்படுத்துதல், புரிந்துணர்வை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவையே இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கங்கள் ஆகும். 
  • இந்த பயிற்சியில், நீர்மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சிகள், ஆயுதம் ஏந்துதல், ஹெலிகாப்டர் (helicopter) நடவடிக்கைகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
  • இந்த பயிற்சி டிசம்பர் 4 ம் தேதி இந்தியாவின் 'கடற்படை தினத்தை' முன்னிட்டு மேற்கொள்ளப்படுகிறது, இது இரு நட்பு நாடுகளின் பகிர்ந்து கொள்ளப்பட்ட நட்பின் வலுவான பிணைப்பை வலியுறுத்துகிறது. இந்திய கடற்படையின் (Indian Navy) முழு அர்ப்பணிப்புடன் இதுபோன்ற கூட்டு பயிற்சிகள் பல நாடுகளுடன் நடத்தப்படுவது வழக்கம்.

அமெரிக்காவின் பைசர் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த பஹ்ரைன் நாடும் ஒப்புதல்

  • கொரோனா பரவல் இன்னும் பல நாடுகளில் ஓய்ந்தபாடில்லை. இதுவரை உலகில் 15,28,037 பேர் இதன் காரணமாக உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60,617ஆக உள்ளது, 
  • மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,90,432ஆக உள்ளது. அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் பாதிக்கப்பட்டோர் மொத்தம் 87,600ஆகவும் உயிரிழந்தோர் 341 என்கிற அளவிலும் உள்ளது.
  • இந்நிலையில், அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி இங்கிலாந்தில் சமீபத்தில் பயன்பாட்டுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து பஹ்ரைனிலும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. 
  • அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் கூட்டாகச் சேர்ந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசி, கொரோனா வைரஸ்க்கு எதிராக சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்துவதாகக் கூறப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel