Type Here to Get Search Results !

TNPSC 4th DECEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இந்தியாவுக்கு, 6, 660 கோடி ரூபாய் மதிப்புக்கு ராணுவ தளவாடங்களை விற்க, அமெரிக்கா ஒப்புதல் 

 • அமெரிக்காவின் மிகப் பெரும் ராணுவ பங்குதாரர்களில், இந்தியாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்தோ - பசிபிக் மற்றும் தெற்கு ஆசிய பகுதிகளில், அமைதியையும், நிலைத்தன்மையும் ஏற்படுத்துவதில், இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. 
 • இந்தியா வலியுறுத்தியதை அடுத்து, 6,660 கோடி ரூபாய் மதிப்புக்கு, ராணுவ தளவாடங்களை விற்க, அமெரிக்க பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.இந்த தளவாடங்கள், இந்திய ராணுவத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

காந்தி - கிங் கொள்கைகள் சட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

 • கடந்த 1959ல் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்ட மார்ட்டின் லுாதர் கிங் இந்தியாவிற்கு பயணித்தார். அந்த பயணம் அவருக்கு பல புரிதல்களை ஏற்படுத்தியது. அந்த பயணத்தின் 50ம் ஆண்டு விழா 2009ல் கொண்டாடப்பட்டது. 
 • அதில் பங்கேற்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஜான் லுாயிஸ் அடங்கிய குழுவினர் இந்தியாவிற்கு சென்றனர். அமெரிக்கா திரும்பிய ஜான் லுாயிஸ் காந்தி மற்றும் கிங்கின் சித்தாந்தங்களை பின்பற்றி பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் கொள்கை சவால்களை எதிர்கொள்ளவும் ஒரு சட்டத்தை உருவாக்க விரும்பினார்.
 • அதன்படி உருவாக்கப்பட்ட 'காந்தி - கிங் அறிவார்ந்த பரிமாற்ற முயற்சி சட்ட' மசோதாவை 2011ல் லுாயிஸ் அறிமுகம் செய்தார்.பின் 2017ல் அந்த மசோதாவை லுாயிஸ் மீண்டும் தாக்கல் செய்தார்.
 • இதற்கிடையே சமீபத்தில் உடல்நலக்குறைவால் லுாயிஸ் காலமானார்.இந்நிலையில் லுாயிசுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த மசோதா பிரிதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை

 • விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், பல்வேறு ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அவற்றில், காற்று இல்லாத சூழலில் தாவரங்களை வளர்ப்பது குறித்தும், ஆய்வு நடக்கிறது.
 • அமெரிக்காவின், 'நாசா' விண்வெளி ஆய்வு மையத்தின் உதவியுடன் நடக்கும் இந்த ஆய்வு திட்டத்தின் கீழ், ஏற்கனவே கடுகு, முட்டைக் கோஸ், சிவப்பு லெட்யூஸ் ஆகியவை விளைவிக்கப்பட்டன.
 • இதையடுத்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், முள்ளங்கி வளர்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், முதன் முறையாக, 20 முள்ளங்கிகள் அறுவடை செய்யப்பட்டு உள்ளன.
 • அவற்றை, நாசா விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், பக்குவமாக குளிர்சாதனப் பெட்டியில், பாதுகாப்பாக வைத்தார். அடுத்த ஆண்டு, 'ஸ்பேஸ்எக்ஸ்' விண்கலம் மூலம், இந்த முள்ளங்கிகள் பூமிக்கு எடுத்து வரப்பட்டு, ஆய்வு செய்யப்படும்.

எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணைகள் இந்தியாவில் சோதனை

 • எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப்படை சோதனை மேற்கொண்டது.ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணைகள் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தன. 
 • ஆகாஷ் ஏவுகணையை அதிக செங்குத்து உயரத்திலுள்ள இலக்கை தாக்கும் விதத்தில் டிஆர்டிஓ மேம்படுத்தி வருகிறது. மேலும் வீரர்கள் தோளில் வைத்து ஏவக்கூடிய இக்லா ஏவுகணைகளும் சோதனை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபத்தான போதைப் பொருட்கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்க, ஐநா.வில் இந்தியா ஆதரவு 
 • ஐக்கிய நாடுகள் போதைப்பொருள் மருந்துகள் ஆணையத்தின் 63வது கூட்டம் கடந்த புதனன்று நடந்தது. அப்போது சர்வதேச அளவில் கஞ்சாவை ஒழுங்குபடுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 
 • இதன்படி கஞ்சாவை ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. போதைப்பொருள் மருந்துகள் ஆணையத்தில் மொத்தமுள்ள 53 உறுப்பு நாடுகளில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 27 நாடுகள் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்தன.
 • சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 25 நாடுகள் ஐநா.வின் முடிவுக்கு எதிராக வாக்களித்தன. உக்ரைன் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 
 • இதனை தொடர்ந்து கடந்த 59 ஆண்டுகளாக கஞ்சா மீது நீடித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு மருத்துவ நோக்கங்களுக்காக அதனை பயன்படுத்துவதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 • தற்போது, 50க்கும் மேற்பட்ட நாடுகள் கஞ்சாவை மருத்துவ திட்டங்களுக்காக பயன்படுத்த அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கஞ்சாவுக்கு இந்த மாநாட்டில் ஆதரவு அளித்த இந்தியாவில், கஞ்சா ஆபத்தான போதைப் பொருட்கள் பட்டியலில் இருக்கிறது.
 • இதை பயன்படுத்துபவர்கள், வளர்ப்பவர்கள், வைத்திருப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 4127 கோடி செலவில் நாகலாந்தில் நெடுஞ்சாலைத் திட்டங்கள்: நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்

 • மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாகலாந்தில் 15 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை காணொலி வாயிலாகத் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டினார்.
 • மத்திய சாலைப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் வி கே சிங், நாகலாந்து முதல்வர் நெஃபி ரியோ, பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். 266 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த நெடுஞ்சாலைத் திட்டங்கள் ரூ. 4127 கோடி செலவில் அமையவிருக்கின்றன.

மதுரைக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் ரூ.1295 கோடி குடிநீர்த் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல்

 • மதுரை மாவட்டத்தில் நிறைவுற்ற அரசுத் திட்டங்கள் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
 • இதில், ரூ.30.19 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலக புதிய கட்டடம், ரூ.15 கோடியில் பாலரெங்காபுரத்தில் கட்டப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் மையம் உள்பட ரூ. 69 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
 • மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குழாய் வழியாக குடிநீர் கொண்டு வருவதற்கான ரூ.1295.76 கோடி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
 • வருவாய், வேளாண்மை, ஊரகவளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின்கீழ் 2236 பயனாளிகளுக்கு ரூ.3.90 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செய்திகள் ஒரு வரிகளில்

 • இந்தியாவின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியல் 2020 ல் சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை மணிப்பூர் மாநிலத்திலுள்ள நாங்போக்சேக்மாய் (NongpokSekmai)காவல் நிலையம் பெற்றுள்ளது. 
 • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் உள்ள உலக பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச விருது : அமெரிக்காவில் உள்ள சர்வதேச தொழில்முறை பாதுகாப்பு சங்கமான உலக பாதுகாப்பு அமைப்பின் மூலம் பாதுகாப்பு தர நிலைகளை சிறப்பாக கடைபிடித்து பாதுகாப்பை உறுதி செய்யும் நிறுவனத்துக்கு சர்வதேச விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இதில், ஆண்டுதோறும் 6 நிறுவனங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 2020-ம் ஆண்டுக்கான விருதை இந்தியாவில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பெற்றுள்ளது. முன்மாதிரியான பாதுகாப்பு தரங்களை உறுதி செய்தல்,பாதுகாப்பு பதிவுகளை திறம்பட பராமரித்தல், மக்கள், உடைமை, வளங்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து பொறியாளர்கள், ஊழியர்கள், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சார்ந்த நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்துதல் உள்ளிட்டவை அடிப்படையில் இந்த விருது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 • ஜிஎஸ்டிவிலைப்பட்டியல் வெளியிடும் போது 49 ரசாயன அடிப்படையிலான தயாரிப்புகளுக்கான வரி விலைப்பட்டியலில் 8 இலக்க எச்எஸ்என் ((HSN -Harmonized System of Nomenclature code) குறியீட்டைக் குறிப்பிடுவதை மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (Central Board of Indirect Taxes and Customs (CBIC)) கட்டாயமாக்கியுள்ளது.
 • மஹாராஷ்டிராவில் ஜாதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ள குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களை நீக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • 10 வது தேசிய அறிவியல் திரைப்பட விழா 2020 24-27 நவம்பர் 2020 தினங்களில் இணையவழியில் நடைபெற்றது. 
 • ஆதி மஹோஸ்தவ் (Aadi Mahostav) தேசிய பழங்குடியினர் திருவிழா 1 டிசம்பர், 2020 அன்று நடைபெற்றது. 
 • ‘பாதுகாப்பு புவியியல்சார் தகவல் ஆராய்ச்சி நிறுவனம்’(Defence Geo Informatics Research Establishment) என்ற பெயரில் புதிய ஆராய்ச்சி நிறுவனத்தை, Snow and Avalanche Studies Establishment (SASE), மணலி, ஹிமாச்சலப்பிரதேசம் மற்றும் Defence Terrain Research Laboratory (DTRL), புது தில்லி ஆகிய இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்களை இணைப்பதன் மூலம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation - DRDO) உருவாக்கியுள்ளது. 
 • 9 வது சர்வதேச மணல் கலை விழா மற்றும் கோனார்க் நடன விழா ஒடிஷாவில் 1-5 டிசம்பர் 2020 தினங்களில் நடைபெறுகிறது. 
 • ஃபிட் இந்தியா இயக்கத்தின் (Fit India movement) தூதராககுல் தீப்ஹேண்டூ (Kuldeep Handoo) நியமிக்கப்படுகிறார். ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேசத்திலிருந்து முதல் துரோணாச்சார்யா விருது பெற்ற குல்தீப்ஹேண்டூ வுஷு (Wushu) விளையாட்டு பயிற்சியாளராவர். 
 • வாரணாசி அன்னபூர்ணா சிலை கனடாவிலிருந்து ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குக்கொண்டுவரப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலை 1913 ஆம் ஆண்டு திருடப்பட்டது. இந்த சிற்பம் ‘பெனாரஸ் பாணியில்’ செதுக்கப்பட்டுள்ளது
 • "டைம்' இதழின் 2020 ஆம் ஆண்டின் சிறந்த குழந்தையாக (Time Kid of the Year) இந்திய வம்சாவளி சிறுமி கீதாஞ்சலிராவ் (15) (Gitanjali Rao) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 • உலகின் 8 வது மிகப்பெரிய பால் செயலாக்கியாக, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (Gujarat Cooperative Milk Marketing Federation (GCMMF)) பிராண்டான அமுல் (AMUL - Anand Milk Union Limited) உருவாகியுள்ளது. சர்வதேச பண்ணை ஒப்பீட்டு வலையமைப்பு (International Farm Comparison Network (IFCN)) வெளியிட்டுள்ள பால் செயலிகள் அறிக்கை 2020 ல் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • தெரேமின் (Theremin) இசைக்கருவி உருவாக்கப்பட்டு 2020 இல் நூறு ஆண்டு நிறைவடைந்துள்ளது. உலகின் முதல் மின்னணுகருவியாகக் கருதப்படும் இதனை சோவியத் ரஷியாவைச் சேர்ந்த லியோன் தெரேமின் என்பவர் 1920 ஆண்டு உருவாக்கியுள்ளார்.
 • 2019 ல் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 8 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
 • 6 வது பிரிக்ஸ் இளைஞர் உச்சி மாநாடு 2020 (BRICS Youth Summit) 30-11-2020 அன்று ரஷ்யாவின் உலியனோவ்ஸ்கில் (Ulyanovsk) “பிரிக்ஸ்: இளைஞர்களுக்கான இக்கால சவால்கள்” (BRICS: Challenges of the Time for young People) எனும் மையக்கருட்தில் நடைபெற்றது.
 • ”வஹானா மாஸ்டர் கிளாஸ்”(Vahana Masterclass) என்ற பெயரிலான தனது முதல் குழந்தைகள் புத்தகமான இத்தாலிய எழுத்தாளர் ஆல்ஃபிரடோகோவெல்லி (Alfredo Covelli) இந்தியாவில் வெளியிட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel