தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணர் குழுவில் கிரிஜா வைத்தியநாதன், சத்யகோபால்
- மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர்களாக மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது.
- அதில், தமிழகத்தை சேர்ந்த கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் வருவாய் ஆணையர் கே.சத்யகோபால் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
மெரீனாவில் தள்ளுவண்டிக் கடைகள் ஒதுக்கீடு ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி நியமனம்
- மீனவா் நல சங்கம் தொடா்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மெரீனா கடற்கரையைச் சுத்தமாகப் பராமரிக்க உத்தரவிட்டது.
- அந்தப் பகுதியில் உள்ள மீன்சந்தை, கடைகள் உள்ளிட்டவற்றை ஒழுங்குபடுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது. மெரீனா கடற்கரையில் புதிதாக 900 தள்ளுவண்டிக் கடைகளை 3 மாதத்துக்குள் அமைத்துக் கொடுக்கும் வகையில் ஒப்பந்தப் பணி வழங்க வேண்டும்.
- மெரீனா கடற்கரையில் 900 தள்ளுவண்டிக் கடைகள் ஒதுக்கீடு செய்யும் பணிகளை மேற்கொள்ள சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியாகவும், சிக்கிம் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற சதீஷ்குமாா் அக்னிஹோத்ரியை நியமித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய குடியரசுதின விழாவின் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார் இங்கிலாந்து பிரதமர்
- ஜனவரி 26-ஆம் தேதி தலைநகர் டெல்லியில் இந்திய குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர் ஒருவரை அழைத்து தலைமை விருந்தினராக பங்கேற்க வைப்பது வழக்கம்.
- அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
- ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை விருந்தினராக பங்கேற்க இருக்கிறார்.
உலகிலேயே மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டம்பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
- குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதிக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட, வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
- உலகிலேயே மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டம், குடிநீர் சுத்திகரிப்புத் திட்டம், பால் பதப்படுத்தும் திட்டம் ஆகியவற்றுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- அதன்பின் உள்ளூர் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபேக்டரியை தமிழ்நாட்டில் அமைக்கிறது ஓலா
- சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்திக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கமும் ஆதரவும் அளிக்கின்றன. தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலைகளை அமைத்து தொழில்துறையை மேம்படுத்துவதில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, மிகத்தீவிரமாக செயல்பட்டு முதலீடுகளை கவர்ந்துவருகிறது.
- தொழில்துறை சார்பில் 19 ஆயிரத்து 995 கோடி ரூபாய் முதலீட்டில், 26 ஆயிரத்து 509 பேருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் தமிழக அரசு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது.
- அதில் ஓலா நிறுவனத்துடனான ஒப்பந்தமும் ஒன்று, வாகன உற்பத்தியின் கேந்திரமாக இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில், ரூ.2400 கோடி மதிப்பீட்டில் ஓலா நிறுவனம் தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை நிறுவவுள்ளது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும்.
சத்தீஸ்கரில் ரூபி எனும் நாயிற்கு சிறந்த காவலர் விருது
- சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் முதன்முறையாக, ஒரு போலீஸ் ஸ்னிஃபர் நாய்க்கு இரண்டு காவல்துறையினருடன் இணைந்து மாதத்தின் சிறந்த காவலர் எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
- ரூபி என்ற நாயுடன் சேர்த்து இரண்டு காவல்துறையினருக்கு, மாதத்தின் சிறந்த காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஒருவர் சட்டம் ஒழுங்கு பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.
- மற்றொருவர் நாய் கையாளுபவர் வீரேந்திரா ஆவார். ரூபி என்ற நாய், சாரங்கர் ராயல் அரண்மனை கொள்ளை வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய தடயங்களை கொடுத்து தீர்வு காண வழிவகுத்தது..
- சாரங்கர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள சாரங்கர் ராஜ் மஹாலில், சுமார் 6 லட்சம் ரூபாய் விலை உயர்ந்த இரண்டு வெள்ளி தட்டுகள் திருடப்பட்டன.