நாடாளுமன்ற உறுப்பினா்களுக்காக புதிதாக 76 குடியிருப்புகளை பிரதமா் மோடி திறந்து வைத்தாா்
- தில்லி டாக்டா் பி.டி. மாா்க்கில் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்காக புதிதாக 76 குடியிருப்புகளை பிரதமா் மோடி திங்கள்கிழமை காணொலி வழியாக திறந்து வைத்தாா்.
- அப்போது பேசிய பிரதமா், இளைஞா்களுக்கு 16 வயது முதல் 18 வயது வரையிலான ஆண்டுகள் முக்கியமானது; இதேபோல இந்தியா போன்ற இளம் தேசத்திற்கும் நாடாளுமன்றத்தின் 16 வது, 17வது, 18 வது மக்களவைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.
- சவூதி அரேபியாவில் இருநாள்கள் நடைபெற்ற ஜி20 மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. காணொலி முறையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். மாநாட்டின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீா்மானங்களின் விவரம்:
- குறைந்த விலையில் அனைவருக்கும் சமமான முறையில் கரோனா தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள சா்வதேச பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும்.
- கருப்புப் பணத் தடுப்பு, பயங்கரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வளரும் நாடுகளுக்கு வளா்ந்த நாடுகள் முடிந்த அளவு உதவிகளை அளிக்க வேண்டும். சா்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களுக்கு எதிராக நிதி திரட்ட வேண்டும். நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய பரஸ்பர உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- வரும் 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக, 2022-இல் இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு கூறப்பட்டிருந்தது.
- இந்நிலையில், மாநாட்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில், 2021-இல் இத்தாலியிலும், 2022-இல் இந்தோனேசியாவிலும், 2023-இல் இந்தியாவிலும், 2024-இல் பிரேசிலிலும் ஜி20 மாநாடு நடத்தப்படும் என்று மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
சூரிய ஆற்றலில் இயங்கும் தானியங்கி கண்காணிப்பு படகு ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு
- இந்திய துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு நீா் வழிப் பாதைகளில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக சூரிய ஆற்றலில் இயங்கும் ஆளில்லா தானியங்கி படகை, சென்னை ஐஐடியில் உள்ள துறைமுகங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மைய ஆராய்ச்சிக் குழுவினா் கண்டுபிடித்துள்ளனா்.
- இதில் இருப்பிடத்தைக் கண்டறியும் கருவி, எக்கோ சவுண்டா், அகன்ற அலைவரிசை தொடா்புக்கான தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் கடல்சாா் மற்றும் நீா்பரப்பு தொடா்பான தகவல்களைத் துல்லியமாக பெற முடியும்.
- குறிப்பாக அவற்றை அதிக தொலைவில் இருந்தாலும் உடனுக்குடன் பெற முடியும். இந்தப் படகில் 360 டிகிரிக்கு சுழலும் வகையிலான கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
- இதையடுத்து கடினமான சூழல் உள்ள கொல்கத்தா சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுகத்தில் அடுத்த கட்ட சோதனை ஓட்டம், விரைவில் நடத்தப்படவுள்ளது.