Type Here to Get Search Results !

TNPSC 18th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

சீர்மிகு நகர திட்டப்பணிகளை செயல்ப்படுத்துவதற்கான தரவரிசை பட்டியல் 

  • கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசின் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில், சீர்மிகு நகர திட்டத்துக்கு சேலம், கோவை, சென்னை உள்பட 100 நகரங்களை தேர்வு செய்தனர். அதில் தமிழகத்தில் உள்ள 11 மாநகராட்சிகள் சீர்மிகு நகர வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
  • அதில் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்தியதை வைத்தும், திட்டப்பணிகளை நிறைவேற்றியதை வைத்தும் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது .
  • இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி வெளியான தரவரிசைப்பட்டியலில் , 70.7 புள்ளிகளுடன் சேலம் மாநகராட்சி தமிழகத்தில் முதலிடத்தையும், இந்திய அளவில் எட்டாமிடத்தையும் பிடித்துள்ளது . கடந்தாண்டு வெளியான தரவரிசை பட்டியலில் சேலம் மாநகராட்சி 50 நகரங்களுக்கு பின்னடைவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • சேலம் மாநகராட்சி 2016-ல் திட்டப்பணிகளை தொடங்கி 965.87 கோடி ரூபாய் செலவில் 81 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அது முடிவடையவே இரண்டு ஆண்டுகளுக்கு மேலானது. 
  • அதனையடுத்து கடந்தாண்டு திட்டப்பணிகள் விரைவாக செயல்படுத்தப்பட்டு வந்தது. அதனையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக தடை செய்யப்பட்ட பணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டது. 
  • அதனையடுத்து தொங்கும் பூங்கா உட்பட ஸ்மார்ட் சாலை என பல வளர்ச்சி திட்டப் பணிகளை பல கோடி செலவில் சேலம் மாநகராட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
  • மேலும் இந்த தரவரிசை பட்டியலில் அகமதாபாத் , சூரத், இந்தூர் ஆகிய மூன்று நகரங்கள் முதல் மூன்று இடத்தை அகில இந்திய அளவில் பிடித்துள்ளது . மேலும் இந்த தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் உள்ள ஈரோடு 18வது இடத்தையும், திருப்பூர் மாநகராட்சி 24வது இடத்தையும், திருச்சி மாநகராட்சி 60வது இடத்தையும் பிடித்துள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக பசுக்களுக்கு தனி அமைச்சரவை குழு மபி.யில் முதல்வர் சவுகான்

  • மத்தியப் பிரதேசத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக பிரத்யேக அமைச்சரவை குழு உருவாக்கப்படும் என முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். 
  • மத்தியப் பிரதேசத்தில் பாஜ ஆட்சி செய்கிறது. இம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்ட தனது பதிவில், 'பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக பிரத்யேக அமைச்சகம் உருவாக்கப்படும். கால்நடை வளர்ப்பு, காடு, பஞ்சாயத்து, கிராம மேம்பாடு, வருவாய், வீடு மற்றும் விவசாயிகள் நல துறைகள் பசு அமைச்சரவையின் ஒரு பகுதியாக இருக்கும்.
  • இந்த அமைச்சரவையின் முதல் கூட்டம் வரும் 22ம் தேதி அகர் மால்வா மாவட்டத்தின் சலரியாவில் உள்ள பசுக்கள் சரணாலயத்தில் நடைபெறும்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
  • நாட்டில் இதுவரை எந்த மாநிலத்திலும் பசுக்கள் மேம்பாட்டிற்காக பிரத்யேக அமைச்சரவை குழு உருவாக்கப்பட்டது இல்லை. நாட்டிலேயே முதல் முறையாக மத்தியப்பிரதேசத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்யாறு அருகே சோழர் கால கொற்றவை சிலை கண்டெடுப்பு

  • திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த செங்காடு கிராமத்தில் செங்கையம்மன் கோயில் மதில் சுவற்றின் அருகே வண்ண சுண்ணாம்பு பூசப்பட்ட நிலையில் கொற்றவை சிலையை தொல்லியல் ஆர்வலரும், வரலாற்று ஆய்வாளருமான ஆசிரியர் எறும்பூர் கை.செல்வகுமார் கண்டெடுத்துள்ளார். 
  • பண்டைய தமிழகத்தில் கொற்றவை எனும் துர்க்கை வழிபாடு இருந்ததற்கு வரலாற்று சான்றுகள் பல உள்ளன. நாட்டை ஆண்ட அரசன் கொற்றவன் என்றும், வெற்றி தருபவள் கொற்றவை ஆவாள். 
  • போர் தெய்வமாகிய கொற்றவைக்கு சோழ மன்னர்கள் போருக்கு செல்லும் முன் வாள், வளரி, ஈட்டி உள்ளிட்ட போர் ஆயுதங்களை வைத்து படையல் இட்டு வழிபட்டு போருக்கு சென்று வந்துள்ளனர்.
  • அந்த வகையில் இந்த கொற்றவை சிலையை துர்க்கை, காளி, அம்மன் என்று அழைக்கின்றனர். இந்த சிலை கி.பி 9ம் நூற்றாண்டு முதல் கி.பி 11ம் நூற்றாண்டு வரையான இடைப்பட்ட காலகட்டத்தில் சோழர் காலத்தில் செதுக்கப்பட்டு இருக்கலாம். 
  • இதே கால கட்டத்தில் செதுக்கப்பட்ட கொற்றவை சிலை ஒன்று எறும்பூர் பாஞ்சாலியம்மன் கோவில் அருகில் திறந்த வெளியில் உள்ளது. தமிழில் கொற்றவையே தொன்மையான தெய்வம். 
  • இந்த சிலை அழகிய முகத்துடன் எட்டு கரங்களுடன் சங்கு, சக்கரம், வில், அம்பு, கேடயம், வாள், வளரி, ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அபயகர முத்திரையுடன் எருமையின் தலையில் மேல் நின்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சிலை காணப்படுகிறது.
  • இதே காலகட்டத்தில் ஆயிரமாண்டு ஒரே பெயரில் இருக்கும் எழும்பூர் ராஜராஜன் சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு, சோழர் காலத்தில் பட்டீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 
  • ஆகவே சோழர் காலத்து கொற்றவை சிலையாக இருக்குமோ என கருத வேண்டியுள்ளது. மேலும் செங்காடு காத்த அம்மன் நாளடைவில் செங்காத்தம்மனாக மாரி அக்கா, தங்கை என சின்ன செங்காடு, பெரிய செங்காடு என வெவ்வேறு இடங்களில் வழிபாட்டு தலமாக தொன்றுதொட்டு அமைந்திருக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel