Type Here to Get Search Results !

TNPSC 12th NOVEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம்

 • உலகின் மிகவும் அரிதான பர்புள் - பிங்க் நிற ரஷ்ய வைரக்கல் ஒன்று ஸ்விட்சர்லாந்தில் 26.6 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 198 கோடி ரூபாய் ஆகும்.
 • பிங்க் நிற வைரக்கற்கள் பொதுவாக 10 கேரட்களுக்குள் தான் இருக்கும். ஆனால், தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த வைரம் மிகவும் அரிதான 14.8 கேரட் வைரக்கல் ஆகும்.
 • அல்ரோசா என்ற ரஷ்ய சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான இந்த வைரக்கல்லிற்கு, ரஷ்ய - போலாந்து பாலே நடனக்கலைஞரான நிஜின்ஸ்கி என்று பெயரிடப்பட்டது.

பஹ்ரைனின் புதிய பிரதமராக ஹமீத் அல் கலீஃபா பதவி ஏற்பு

 • பஹ்ரைன் நாட்டின் பிரதமராக 50 ஆண்டு பதவி வகித்தவர் இளவரசா் காலிஃபா பின் சல்மான் அல் காலிஃபா (84). இவர் உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவா்.
 • இந்நிலையில், அமெரிக்காவில் உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இதனால், இளவரசர் சல்மான் பின் ஹமீத் அல் கலீஃபா பஹ்ரைன் நாட்டின் பிரதமராக பதவியை ஏற்றுக் கொண்டார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5-வது தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் 'வாகீர்' கப்பல் படையில் முறைப்படி இணைக்கப்பட்டது
 • பிரான்ஸ் கப்பல் படை மற்றும் டிசிஎன்எஸ் நிறுவனத்துடன் இணைந்து தாக்குதல் திறன் படைத்த கல்வரி ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. 'இந்திய கப்பல் படை புராஜெக்ட்-75' திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.
 • அதன்படி, 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே தயாரிக்க முடிவானது. தற்போது கல்வரி, கந்தேரி, கரன்ஜி, வேலா ஆகிய 4 நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய கப்பல் படையில் இணைக்கப்பட்டுள்ளன.
 • இந்நிலையில், 5-வது நீர்மூழ்கிக் கப்பல் வாகீர் முறைப்படி இந்திய கப்பல் படையில் இணைக்கப்பட்டது. மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் வாகீர் நீர்மூழ்கிக் கப்பல் இணைப்பு விழா நேற்று நடைபெற்றது. 
 • பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பாத் நாயக்கின் மனைவி விஜயா நாயக், காணொலி காட்சி மூலம் கப்பலை தொடங்கி வைத்தார். தற்போது கோவாவில் உள்ள அமைச்சர் பாத், அங்கிருந்து காணொலி காட்சி மூலம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
 • கல்வரி ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒவ்வொன்றும் பல்வேறு தாக்குதல் திறன்கள் படைத்தவை. தற்போது கப்பல் படையில் இணைக்கப்பட்டுள்ள 5-வது வாகீர் கப்பல், நீருக்குள் இருந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் உட்பட பல தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. நீரில் இருந்து நிலத்தில் உள்ள எதிரி இலக்கை தாக்குதல், பல கிலோ மீட்டர் தூரம் கண்காணித்தல், உளவு பார்த்தல் போன்ற பல வேலைகளை இந்த நீர்மூழ்கி செய்யும். இது கடலுக்கு அடியில் இயங்கும் போது ஓசை அவ்வளவாக வராது.
 • இந்திய பெருங்கடல் பகுதியின் ஆழத்தில் வாழும் 'சேண்ட்பிஷ்' என்ற மீனின் பெயரில் 'வாகீர்' என்று இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
 • இதுபோன்ற முதல் நீர்மூழ்கிக் கப்பல் கடந்த 1973-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி ரஷ்யாவில் இருந்து வாங்கி இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டது. முப்பது ஆண்டுகள் பணியாற்றிய அந்தக் கப்பல் கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
17வது ஆசியான் உச்சி மாநாடு
 • தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம், 'ஆசியான்' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
 • ஆசியான் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் நட்பு நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
 • இந்தியா - ஆசியான் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 17-வது ஆசியான் உச்சி மாநாடு 2020ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. 
 • இதில் பிரதமர் மோடி பேசியதாவது இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையேயான ஒத்துழைப்பானது, நமக்கு இடையேயான வரலாற்று, புவியியல் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். எங்களுடைய எளிதான கிழக்கு கொள்கைகளை செயல்படுத்தும் முக்கிய அமைப்பாக ஆசியான் அமைப்பு உள்ளது.
 • உலகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் தொற்று அபாயம் இருப்பதால் இந்த ஆண்டு இந்தியா -ஆசியான் மாநாடு காணொலி மூலம் நடத்தப்படுகிறது. எனவே அனைத்து நாட்டின் தலைவர்களும் ஒன்றாக நின்று இந்த ஆண்டு புகைப்படம் எடுக்க முடியாது.
 • ஒவ்வொரு துறையிலும் இந்தியா, ஆசியான் இடையே இணைப்பை அதிகப்படுத்த விரும்புகிறோம். காணொலி மூலம் மாநாடு நடைபெற்றாலும் நமக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப தேவையான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை, விவசாயிகளுக்கு உர மானியம் உட்பட 2.65 லட்சம் கோடிக்கு சலுகை திட்டம்

 • கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு சலுகை தொகுப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. 
 • இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மதியம், டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: கொரோனா தாக்கத்தில் இருந்து நாம் மீண்டு வருகிறோம். 
 • கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தில் இருந்து 4.89 லட்சமாக குறைந்து விட்டது. உயிரிழப்பு விகிதம் 1.47 சதவீதமாக குறைந்துள்ளது. பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
 • ரோஜ்கர் திட்டத்தின் கீழ், பிஎப் அமைப்பில் பதிவு செய்த நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணிக்கு எடுத்தால், 2 ஆண்டுகளுக்கு ஓய்வு நிதி பங்களிப்பை மத்திய அரசு மானியமாக வழங்கும். ஊழியர் செலுத்த வேண்டிய 12 சதவீதம், நிறுவனம் செலுத்தும் 12 சதவீதம் (மொத்தம் 24 சதவீதம்) தொகையை மத்திய அரசு செலுத்தும். 
 • இச்சலுகையை பெறுவதற்கு ஊழியர்களின் மாதச் சம்பளம் ₹15,000க்கு கீழ் இருக்க வேண்டும். கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதத்துக்குள் வேலை இழந்தவர்கள் அல்லது அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பு வேலை பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை அமலில் இருக்கும்.
 • அவசர கால கடன் உத்தரவாத திட்டம், 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதோடு, கடன் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும். இதில் மூலதன தொகையை திரும்பிச் செலுத்துவதற்கு, ஓராண்டு காலத்துக்கு தவணை ஒத்திவைப்பு சலுகையும் உண்டு.
 • இந்த திட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி 29ம் தேதியின்படி, ₹50 கோடி வரை கடன் நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள், நிலுவையில் உள்ள கடனில் 20 சதவீதம் வரையிலான தொகைக்கு கூடுதல் கடன் பெற்றுக் கொள்ளலாம். 
 • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், வர்த்தக தேவைக்காக வாங்கும் தனி நபர் கடன்கள் மற்றும் முத்ரா திட்டத்தில் கடன் வாங்குவோருக்கு இந்த திட்டத்தில் பலன் பெறுவார்கள்.
 • கட்டுமான மற்றும் உள் கட்டமைப்புக்கு, அரசு டெண்டர்களில் முன்வைப்புத் தொகை மற்றும் செயல் உத்தரவாத தொகையில் 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது முன்பு 5 முதல் 10 சத.வீதமாக இருந்தது. டெண்டர்களுக்கு முன்வைப்புத்தொகை தேவையில்லை.
 • பொருளாதார மந்தநிலை காரணமாக வீடுகளின் விலை குறைந்து விட்டது. எனவே, குடியிருப்புகளுக்கான ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது. இதற்கேற்ப வருமான வரி சட்டத்தில் உரிய திருத்தங்கள் கொண்டுவரப்படும்.
 • தேசிய முதலீடு மற்றும் உள் கட்டமைப்பு நிதி 1.10 லட்சம் கோடி. இதில் இதுவரை 2,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பங்கு முதலீடாக 6,000 கோடி மேற்கொள்ளும். எஞ்சியவை தனியார் முதலீட்டாளர்கள் மூலம் திரட்டப்படும்.
 • விவசாயத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், உர மானியமாக 65,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது எதிர்வரும் அறுவடை சீசனில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும். மானிய விலையில் உரங்கள் சப்ளை அதிகரிக்கப்படுவதால், 14 கோடி விவசாயிகள் பலன் பெறுவார்கள்.
 • கரீப் கல்யாண் ரோஜ்கார் திட்டம் மூலம் நடப்பு நதியாண்டில் 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது வேலை உறுதி திட்டம் மற்றும் கரீப் கல்யாண் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். 
 • ஊரக வேலை வாய்ப்பை பொறுத்தவரை பிரதமரின் கரீப் கல்யாண் ரோஜ்கார் திட்டம் நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் கரீப் கல்யான் ரோஜ்கார் திட்டத்துக்கு கூடுதலாக 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும்.
 • மூலதனம் மற்றும் இதர தொழில்துறை ஊக்குவிப்பு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் 10,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தொழில் துறை ஊக்குவிப்பு, உள் கட்டமைப்பு மேம்பாடு, பசுமை எரிசக்தி ஆகியனவும் அடங்கும். இந்திய மேம்பாடு மற்றும் பொருளாதார உதவி திட்டத்தின் கீழ், இந்திய அரசுக்கான கடன் வாங்கும் வரம்பை எக்சிம் வங்கி அதிகரித்துள்ளது. இதன்படி இந்த வங்கி 3,000 கோடி வழங்க உள்ளது. மொத்தமாக, நேற்று மட்டும் 2,65,080 கோடிக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 • கொரோனாவுக்கு 900 கோடி நிர்மலா சீதாராமன் மேலும் சில துறைகளுக்கு அறிவித்துள்ள நிதி ஒதுக்கீடு விவரங்கள் வருமாறு:
 • ஊரக வேலை வாய்ப்பை அதிகரிக்க 10,000 கோடி.
 • அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு 18,000 கோடி.
 • கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கு 900 கோடி.
 • தொழில்துறை உள் கட்டமைப்புகளுக்கு 10,200 கோடி.
 • உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு 1,45,980 கோடி.
 • உர மானியத்துக்கு 65,000 கோடி.
டெல்லி ஜே.என்.யூ.பல்கலைக்கழக வளாகத்தில் சுவாமி விவேகானந்தர் சிலையை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார் 
 • டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். 
 • ஜே.என்.யுவில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் மற்றும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த சுவாமிஜி சிலையை பார்க்கும் அனைவருக்கும் தேசத்தின் மீதான பக்தியையும் தீவிரமான அன்பையும் கற்பிக்கும் என்று நம்புகிறேன்.
 • சுவாமி விவேகானந்தர் கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மெச்சிகன் பல்கலைக்கழகத்திற்குச் சென்ற போது இந்த நூற்றாண்டு உங்களுடையது என்றாலும், அடுத்த நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்று கூறியிருந்தார்.
 • இந்த வார்த்தையும், எதிர்காலபார்வையையும் உணர வேண்டியது நமது பொறுப்பு ஆகும். அவரது சிலை அனைவருக்கும் தேசத்தின் மீதான பக்தியையும் தீவிரமான அன்பையும் கற்பிக்கிறது என்று நம்புகிறேன். 
 • இது விவேகானந்தர் வாழ்க்கையின் மிக உயர்ந்த செய்தி. ஒற்றுமை குறித்த பார்வையில் இது நாட்டிற்கு ஊக்கமளிக்கட்டும். தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
புதுச்சேரியில் கருணாநிதி பெயரில் காலைச் சிற்றுண்டி திட்டம், துவங்கப்பட்டுள்ளது
 • புதுச்சேரியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் ஒன்று "டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டம்" என்ற பெயரில் நவம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சட்டப்பேரவையில் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அறிவித்திருந்தார்.
 • அதன்படி, 12-11-2020 காலை 9.00 மணி அளவில், புதுச்சேரி அரசின், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதுச்சேரி, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் "டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலைச் சிற்றுண்டித் திட்டத் தொடக்க விழா", புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில், கல்வி அமைச்சர் இரா.கமலக்கண்ணன் முன்னிலை வகிக்க, கழக அமைப்புச் செயலாளரும் - நாடாளுமன்ற மாநிலங்களவை கழக உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றியதுடன், பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி துவக்கி வைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel