Type Here to Get Search Results !

TNPSC 16th OCTOBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நீலகிரி படுக மக்களை பூர்வகுடியினருக்கான பட்டியலில் சேர்த்தது, ஐ.நா., மலைகளுக்கான கூட்டமைப்பு

  • ஐக்கிய நாடுகளின், மலைகளுக்கான கூட்டமைப்பு, உலக பூர்வகுடியினருக்கான பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. 
  • 'நீலகிரி ஆவண மைய காப்பகம்' சார்பில், நீலகிரி படுக சமுதாயம், உலக பூர்வகுடியினருக்கான பட்டியலில் இடம்பெற வேண்டி, அனைத்து ஆவணங்களுடன், விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகளின் மலைகளுக்கான கூட்டமைப்பு, விண்ணப்பத்தை ஏற்று, அக்., 12ல், படுகர் சமுதாயத்தை உலக பூர்வ குடியினர் பட்டியலில் இடம்பெற செய்தது. அதற்கான அறிவிப்பு சான்றிதழை, படுகர் இன தலைவர் அய்யாரு, நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வழங்கினர்.

கடந்த 30 ஆண்டுகளில் அடையாத உச்சபட்சமாக 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து சாதனை: தமிழக அரசு அறிவிப்பு

  • தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளில் அடையாத உச்சபட்சமாக 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. 
  • இந்த வருடம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 300 ஏக்கரில் திருந்திய நெல்சாகுபடி மேற்ெகாள்ளப்பட்டது மற்றும் முதன்முதலாக குறுவை பருவத்தில் நேரடி நெல் விதைப்பு முறை ஊக்குவிக்கப்பட்டு 32 ஆயிரத்து 367 ஏக்கரில் சாகுபடி மேற்ெகாள்ளப்பட்டது. 
  • ஆயிரத்து 167 வருவாய் கிராமங்களுடன் கூடுதலாக 270 வருவாய் கிராமங்கள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்டு இதுவரை ஒரு லட்சத்து 68 ஆயிரம் ஏக்கரில் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் இதுவரை டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 18 லட்சத்து 60 ஆயிரத்து 600 ஏக்கரில் நெல்சாகுபடி மேற்ெகாள்ளப்பட்டது. இதுநாள் வரை டெல்டா மாவட்டங்களில் சுமார் 3லட்சம் ஏக்கர் பரப்பில் அறுவடை முடிக்கப்பட்டுள்ளது. 
  • இதனால் குறுவை சாகுபடி மூலம் டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 6 லட்சத்து 44 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டின் உயரிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருது ராம் ஜகதி
  • 90களில் கால்நடைகளுக்கு வழங்கப்பட்ட மருந்தின் காரணமாக பாதிக்கப்பட்ட கழுகு இனத்தைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டார். அவரது பணியைப் பாராட்டி இங்கிலாந்து நாட்டின் உயரிய சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
  • ஆர்எஸ்பிபி எனப்படும் அந்த அமைப்பு, பறவைகளின் பாதுகாப்புக்காக இயங்கிவருகிறது. கால்நடைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத மருந்துகள், கழுகுகளுக்குப் பேரழிவைத் தாக்கக்கூடிய அளவுக்கு இருந்தது. அந்த மருந்தின் காரணமாக கழுகுகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைந்துவந்தது.
  • பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மருந்தை தடை செய்ய போராடிய ராம் ஜெகதி, கழுகுகளுக்கான இனப்பெருக்க மையங்களையும் ஏற்படுத்தினார். இந்தியாவில் முதன்முறையாக, ஆபத்தான எட்டு வெள்ளைக் கழுகுகள், அவற்றில் ஆறு சிறைபிடிக்கப்பட்டவை, கடந்த வாரத்தில் மீண்டும் காட்டுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • ஆசிய கழுகு பாதுகாப்புத் திட்டம் கடந்த இருபது ஆண்டுகளாக வனவுயிர் பாதுகாப்புக்கான மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel