சர்வதேச அளவில் 100வது கோல் அடித்த கிறிஸ்டியானா ரொனால்டோ
- ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டியில், தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்3-ல் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி உள்ளூர் அணியான சுவீடனுடன் மோதியது.
- விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 45 மற்றும் 72 வது றிமிடத்தில் கோல் அடித்த போர்ச்சுக்கல் அணி 2-0 என்ற கோல் வெற்றி பெற்றது. இந்த இரு கோல்களையும் அடித்த போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100- (165 ஆட்டம்) ஆக உயர்த்தினார்.
- மேலும் இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர் என்ற மகத்தான சாதனையை 35 வயதான ரொனால்டோ படைத்தார். உலக அளவில் ஈரான் முன்னாள் வீரர் அலி டாய் 109 கோல்கள் அடித்ததே சாதனையாக உள்ளது.
உலக தற்கொலை தடுப்பு தினம்
- உலக தற்கொலை தடுப்பு தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தற்கொலையை தடுக்கும் விழிப்புணர்வு செய்தியை மக்களுக்கு கொண்டுசெல்லும் நோக்கில் தற்கொலை செய்து கொள்பவர்கள் யார், ஏன் அந்த அந்த முடிவை எடுக்கிறார்கள் என்ற விவரங்களை தேடினோம்.
- செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களில் 23.4 சதவீதம் பேர் தினக்கூலி வேலையில் இருந்தவர்கள்.
- குறிப்பாக இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட 32,5631 தினக்கூலி தொழிலாளர்களில், 5,186 தொழிலாளர்கள் தமிழகத்தில் இறந்துள்ளனர் என பதிவாகியுள்ளது.
- தற்கொலை செய்துகொண்ட தினக்கூலி தொழிலாளர்கள் பலரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
- இந்தியாவில் சராசரியாக தினமும் 320 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்கிறது அரசாங்க அறிக்கை. அந்த 300 பேரில்தான் இந்த தினக்கூலி மக்கள் இருக்கிறார்கள்.
இந்தோ பசிபிக் பிராந்தியம் - பிரான்ஸ்., ஆஸி., உடன் இந்தியா முத்தரப்பு பேச்சுவார்த்தை
- சீன ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் புதன்கிழமை முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது.
- மெய்நிகர் முறையில் நடந்த இந்த கூட்டத்திற்கு இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் வர்தன் சிரிங்க்லா, பிரான்ஸ் வெளியுறவு செயலர், ஆஸ்திரேலிய வெளியுறவு செயலர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
- இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. அமைதி, பாதுகாப்பு, வளம் மற்றும் விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதே கூட்டத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
- அதற்காக மூன்று நாடுகளும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வலுவான இருதரப்பு உறவுகளை கட்டமைத்து வருவதாகவும், இனி ஆண்டுக்கு ஒருமுறை முத்தரப்பு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
- உலகளாவிய பொதுவான கடல் பகுதிகளில் முத்தரப்பு அளவிலும், பிராந்திய அளவிலுமான ஒத்துழைப்புகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன.