பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
- பார்லிமென்டில், மூன்று வேளாண் திருத்த மசோதாக்கள், சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன. 'விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தடையின்றி எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்வதற்கு, இந்த மசோதா வழி வகுக்கும்' என, மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
- இந்த மசோதாக்கள், பார்லிமென்ட் விதிமுறைகளை மீறி நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி, இவற்றுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக்கூடாது என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த மசோதாக்களை எதிர்த்து, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இருந்து, பஞ்சாபின் சிரோன்மணி அகாலி தளம் கட்சி விலகியது.
- இந்நிலையில், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் திருத்த மசோதாக்களுக்கும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ளன.
சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிகம் பேரை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர்
- ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே இவ்விரு ஆட்டங்களிலும் சேர்த்து 2 கேட்ச், 2 ஸ்டம்பிங் செய்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் அவரின் விக்கெட் எண்ணிக்கை 92 ஆக (114 ஆட்டத்தில் 42 கேட்ச், 50 ஸ்டம்பிங்) உயர்ந்தது.
- இதன் மூலம் ஒட்டுமொத்த சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிகம் பேரை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் டோனியிடம் இருந்து தட்டிப்பறித்தார். சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் தோனி விக்கெட் கீப்பிங்கில் 91 பேரை (98 ஆட்டத்தில் 57 கேட்ச் மற்றும் 34 ஸ்டம்பிங்) ஆட்டம் இழக்கச் செய்துள்ளார்.
- ஜம்மு-காஷ்மீரில் ஏற்கெனவே ஆங்கிலமும், உருதுவும் அலுவல் மொழிகளாக உள்ளன. தற்போது, மேலும் 3 மொழிகள் அலுவல்கள் மொழிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
- இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இது அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.