கிண்ணிமங்கலத்தில் கிடைத்த கல்வெட்டு நீத்தோர் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண்
- மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலம் கிராமத்தில் சில வாரங்களுக்கு முன் கிடைத்த தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் வட்டெடுத்து கல்வெட்டு ஒன்றும் கிடைத்தது. இக்கல்வெட்டுகளை முனைவர் இரா.சிவானந்தம் தலைமையில் முனைவர் சொ. சாந்தலிங்கம். முனைவர் பொ. இராசேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
- “எகன் ஆதன் கோட்டம்” என்று வாக்கியத்தின் எழுத்தமைதியை ஆராய்ந்ததில் இக்கல்வெட்டின் காலம் கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1ஆம் நூற்றாண்டு ஆக இருக்கும் என்ற ஆய்வாளர்களின் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது.
- இக்கல்வெட்டுக்கு வலு சேர்க்கும் புதிய ஆதாரங்கள் எதிர்காலத்தில் கிடைக்கும் வரை இக்கல்வெட்டு நீத்தோர் நினைவாக எழுப்பபட்ட நினைவுத்தூணாக கருதப்படும் என்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் ரூ.86,449 கோடி ஜிஎஸ்டி வசூல்: நிதி அமைச்சகம் தகவல்
- ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரே பொருட்களுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படும் நிலை மாறி, ஒரே வரியாக விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொழில்துறை முடங்கியதால் மார்ச் மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி வரி வருவாய் குறைய தொடங்கியது.
- கடந்த ஜூலையில் ரூ.87,422 கோடி வரி வசூலானது. இதில் மத்திய ஜி.எஸ்.டி ரூ.16,147 கோடி, மாநில ஜி.எஸ்.டி ரூ.21,418 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.42,592 கோடி, கூடுதல் செஸ் வரி ரூ.7,265 கோடி அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை எதிர்த்து போராடும் இந்தியாவுக்கு அவசர கடனை நீட்டித்து ஜப்பான் ரூ.3,500 கோடி கடனுதவி
- இந்தியாவில் கொரோனா நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காக சுகாதாரத் துறைக்கான அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியாக ஜப்பான் ரூ.3,500 கோடி வழங்க உள்ளது.
- ஜப்பான் அரசு கோவிட்-19 நெருக்கடி அவசரகால மறுமொழி ஆதரவுக்காக ஜப்பானின் JPY50 பில்லியனை அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி கடனாக வழங்கியுள்ளது.
- இந்திய அரசின் பொருளாதார விவகாரத் துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் இடையே கோவிட்-19 நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காக சுகாதாரத்துறை திட்டக்கடனுக்கான குறிப்புகள் பரிமாறப்பட்டன.
- குறிப்புகள் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, இந்தத் திட்டக்கடனுக்கான கடன் ஒப்பந்தம் பொருளாதார விவகாரத்துறையின் கூடுதல் செயலாளர், இந்திய அரசு நிதி அமைச்சகம் மற்றும் டெல்லி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பிரதிநிதி ஆகியோர் இடையே கையெழுத்தானது.
ஸ்ரீநகரின் முதல் பெண் சி.ஆர்.பி.எஃப் ஐஜி
- இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளில் ஸ்ரீநகரும் ஒன்று. அங்கு முதன்முறையாக ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, சி.ஆர்.பி.எஃபின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- 1996-ன் தெலங்கானா கேடரின் ஐ.பி.எஸ் அதிகாரியான சாரு சின்ஹா தான் ஸ்ரீநகர் ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாகப் பல்வேறு முறை இதே போன்ற சவாலான பணிகளில் பொறுப்பேற்றுள்ளார்.
- CRPF-ல் பீகார் செக்டரின் ஐ.ஜியாக பணிபுரிந்து நக்சல்களைக் கையாண்டுள்ளார். இவரது தலைமையின் கீழ், பல்வேறு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆஸ்திரேலிய இந்திய ஒப்பந்த தூதுவராக மேத்யூ ஹைடன் நியமனம்
- ஆஸ்திரேலியா இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களின் தூதுவராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் மற்றும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த லிசா சிங் ஆகியோரை ஆஸ்திரேலியா அரசு நியமித்துள்ளது.
- இந்தியா ஆஸ்திரேலியா கவுன்சிலின் தலைவராக அசோக் ஜேக்கப் என்பவரும், துணைத்தலைவராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த லிசா சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கீழடி அகழாய்வில் 6 அடி நீளமுள்ள சுவர் கண்டுபிடிப்பு
- சிவகங்கை மாவட்டம், கீழடியில் 5 ஆம் கட்ட அகழாய்வு நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இந்த ஆறாம் கட்ட அகழாய்வு தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வு பணிகள், இம்மாதம் 15 -ம் தேதிக்குள் நிறைவுபெறுகிறது.
- இந்த 6- ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், எடைக்கற்கள், ஓடுகள், குவளைகள், நாணயங்கள், மனித எலும்புக்கூடுகள், சங்குகள், கரிம படிமங்கள், பானைகள் என மொத்தம் மொத்தம் 1786 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- மேலும், இந்த 6- ம் கட்ட அகழாய்வில் தற்போது 6 அடி நீளமுள்ள சுவர் ஒன்றை கண்டறியப்பட்டது. அது 5 அடி ஆழத்திற்கு தோண்டிய போது அகலமான 2 செங்கல் வரிசை கொண்ட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.