Type Here to Get Search Results !

TNPSC 13th SEPTEMBER 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தீம்

  • ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெவேரை எதிர்த்து ஆடிய டொமினிக் முதல் இரண்டு செட்களையும் 4-6, 2-6 என இழந்தார்.
  • மூன்றாவது செட்டில் உத்வேகம் பெற்ற டொமினிக் 6-6, 6-3, 7-6 என தொடர்ந்து புள்ளிகளை அள்ளி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றுள்ளார்.
  • இந்த போட்டி மொத்தமாக 4 மணி நேரம் நடைபெற்றது. முன்னதாக காலிறுதியில் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் பந்தை நடுவரை நோக்கி அடித்தமைக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
  • ரோஜர் ஃபெடரர் மாற்றம் நடால் இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற நவோமி ஒசாகா

    • இறுதிப் போட்டியில், பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவுடன் (31 வயது, 27வது ரேங்க்) மோதிய நவோமி ஒசாகா (22 வயது, 9வது ரேங்க்) 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். 
    • இரண்டாவது செட்டிலும் அசரென்கா 2-0 என முன்னிலை பெற்றதுடன் அதை 3-0 ஆக அதிகரிக்க கேம் பாயின்ட் சர்வீஸ் போட்ட நிலையில், அவர் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
    • எனினும், பதற்றமின்றி விளையாடிய ஒசாகா தனது வியூகங்களை மாற்றி அசரென்காவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
    • ஒசாகாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அசரென்கா திணற, தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்த ஒசாகா 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் 1 மணி, 53 நிமிடம் போராடி வென்று 2வது முறையாக யுஎஸ் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 
    • முன்னதாக, 2018ல் அவர் இங்கு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இது அவரது 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் அவர் தனது 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
    பெட்ரோலித்துறை தொடர்பான 3 முக்கிய திட்டங்கள் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்தார்
    • இந்த திட்டங்களில் துர்காபூர்-பாங்கா பிரிவு உட்பட பரதீப்-ஹால்டியா-துர்காபூர் பைப்லைன் இணைப்பு திட்டம் மற்றும் இரண்டு எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் நிரப்பும் ஆலைகளும் அடங்கும். 
    • இவற்றை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் மற்றும் எச்பிசிஎல் நிறுவனங்கள் அமைக்கின்றன.இந்நிகழ்ச்சியில் பிஹார் முதல்வரும் கலந்து கொண்டார்.
    • பரதீப்-ஹால்டியா-துர்காபூர் பைப்லைன் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 193 கி.மீ தூரத்துக்கு தூர்காபூர் பாங்கா பைப்லைன் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அமைத்துள்ளது. இத்திட்டத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி அடிக்கல் நாட்டினார்.
    • பீகாரில் அதிகரித்து வரும் எல்பிஜி சிலிண்டர் தேவையை, பாங்காவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்பிஜி சிலிண்டர் ஆலை நிறைவேற்றும். இந்த ஆலை ரூ.131.75 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் சிலிண்டர்களில் கேஸ் நிரப்ப முடியும். இந்த ஆலை மூலம் பீகாரில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு ஏற்படும்.
    • பிஹாரின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில், ரூ.136.4 கோடி மதிப்பீட்டில் இந்த எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் ஆலையை எச்பிசிஎல் நிறுவனம் அமைத்துள்ளது. இதற்கு பிரதமர் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி அடிக்கல் நாட்டினார். பிஹாரின் பல மாவட்டங்களின் எல்பிஜி சிலிண்டர் தேவைகளை இந்த ஆலை நிறைவேற்றும்.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel