மனித மூலதன குறியீடு பட்டியல் / HUMAN CAPITAL INDEX 2020
TNPSCSHOUTERSSeptember 18, 2020
0
உலக வங்கி, 174 நாடுகளில், கல்வியறிவு பெற்ற குழந்தைகள், அவர்களின் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில், ஆண்டுதோறும், மனித மூலதன குறியீட்டு பட்டியலை வெளியிடுகிறது.
மனித மூலதன குறியீட்டில், இந்தாண்டு இந்தியாவின் பங்கு, 0.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2018ல், ௦.44 சதவீதமாக இருந்தது. இந்த வகையில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாடுகளில், இந்தியா, 116வது இடத்தை பிடித்து உள்ளது.
கடந்த ஆண்டு, 115வது இடத்தில் இருந்தது.கொரோனா பாதிப்புக்கு முன், குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் கூட, படித்த, ஆரோக்கியமான குழந்தைகளின் சதவீதம் அதிகரித்திருந்தது.