Type Here to Get Search Results !

சர்வதேச யானைகள் தினம் / World Elephant Day


TAMIL

சர்வதேச யானை தினம் உருவானது எப்படி?
 • முதல் சர்வதேச யானை தினம் ஆகஸ்ட் 12, 2012 அன்று கொண்டாடப்பட்டது. வில்லியம் ஷாட்னர் எடுத்த 'ரிட்டர்ன் டு தி பாரஸ்ட்' என்ற திரைப்படத்தில் சிறைபிடிக்கப்பட்ட ஆசிய யானையினை மீண்டும் காட்டில் கொண்டு விடப்படுவதுபோன்ற கதை அம்சம் உள்ளது. 
 • அந்த படம் 12.8.12 அன்று வெளியிடப்பட்டதால் அந்த தினத்தில் அதாவது ஆகஸ்ட் 12ல் ஒவ்வொரு வருடமும் உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
 • சர்வதேச யானைகள் தினம் ஒவ்வாரு ஆண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். 
 • யானைகளின் சராசரி ஆயுட்காலம் ஏறக்குறைய, 70 ஆண்டுகள். இதன் தும்பிக்கை, 40 ஆயிரம் தசைகளால் ஆனது. இதன் மூலம், 1.5 கி.மீ., தொலைவிலுள்ள மனிதனின் நடமாட்டத்தைக்கூட யானையால் அறிய முடியும். யானையின் இரு தந்தங்களும், 90 கிலோ வரை எடையிருக்கும். ஆப்ரிக்கா பெண் யானைகளுக்கு தந்தம் உண்டு. 
 • யானைக்கு மூளையின் அளவு பெரியது என்பதால் நினைவாற்றல் அதிகமுண்டு. இதனால் பரந்த காட்டில் வழித்தடம் மாறாமல் சென்று திரும்புகின்றன. 
 • யானையின் பற்கள், ஐந்து கிலோ எடை கொண்டவை. யானைகள், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். அவை, 100 கிலோ எடை வரை இருக்கும். பெண் யானைகளுக்கு மதம் பிடிக்காது. 
 • கூட்டத்தில் இருக்கும் முதுமை அடைந்த யானை, தான் இறப்பது ஊறுதி என்று தெரிந்தால், கூட்டத்தில் இருந்து பிரிந்து உண்ணா நோன்பு இருந்து தன் சாவை தானே தேடிக்கொள்ளும்.
தற்போது யானைகள் பாதுகாக்கப்படுகிறதா? 
 • யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பால் அவை வாழ்விடத்தை இழந்து வருகின்றன. காடுகளில் போதிய உணவின்றி அவை உயிரிழக்கின்றன. சில நேரங்களில் யானைகள் அதன் தந்தத்திற்காக அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. 
 • கோவை வனக்கோட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களினால் 80 யானைகள் உயிரிழந்துள்ளன. அதிகபட்சமாக கடந்த 2016-ல் 22 யானைகள் உயிரிழந்துள்ளன. நடப்பாண்டில், தற்போது வரை 17 யானைகள் இறந்துள்ளன.
 • உயிரிழந்த 80 யானைகளில் 71 யானைகள் உடல்நலக்குறைவு உள்ளிட்ட இயற்கை காரணங்களாலும், 9 யானைகள் விவசாயிகள் தங்களின் நிலத்தை பாதுகாக்க வைத்த மின்வேலி போன்ற செயல்களினாலும் உயிரிழந்துள்ளன.
 • குறிப்பாக, ஆசிய யானைகளின் வாழ்விடங்கள் துண்டு துண்டாக்கப்பட்டு யானைகள் தனிமைப்படுத்தப்படுவதால் அதன் இனப்பெருக்கம் மிகவும் பாதிப்படைகிறது. வேட்டைக்காரர்கள் யானைகளை கண்டுபிடித்து பொறிகளை எளிதில் அமைக்க ஏதுவாகிறது. 
 • ஆசிய யானைகள் கிட்டத்தட்ட 30 முதல் 40 சதவீதம் வாழ்விடங்களை இழந்துள்ளன. காடுகளில் அந்நிய தாவரங்களின் ஊடுருவல் யானைகளுக்கு தீனியாக அமைந்த தாவரங்களை அப்புறப்படுத்துவதால் யானைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. 
 • தற்போது மனித-யானை மோதலும் ஒரு பிரச்னையாக உள்ளது. மனித மக்கள்தொகை அதிகரிப்பது மற்றும் வனப்பகுதி குறைந்து வருவது, யானைகளை மனித குடியிருப்புகளுடன் நெருக்கமாக கட்டாயப்படுத்துகிறது.
 • ஆண்டிற்கு யானை குடும்பம் 500 சதுர கிலோமீட்டர் காட்டினை பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகிறது. அவற்றுக்கு தினமும் 250 கிலோ உணவு தேவையுள்ளது.
 • யானைகள் தங்களின் வலசை பாதையைத்தான் பயன்படுத்தும். கடந்த 100 ஆண்டுகளாக வலசை பாதையை மக்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்தியாவில், 27 ஆயிரம் யானை உள்ளதாக கூறப்படுகிறது. 
 • வனப்பகுதிகளில் சாலைகள், அணைக்கட்டுகள், மின்சார பாதை போன்றவையால் காடுகள் பிரிக்கப்பட்டுள்ளது. யானை நடமாட்டமும், யானையின் வாழ்விடமும் சுருங்கியுள்ளது. அவை வாழும் இடத்திலும் போதிய உணவு இல்லை.
சட்ட விரோதமாக யானை வேட்டை
 • சீனாவில் அதிகமான யானை தந்தங்கள் தேவையுள்ளது. இதற்காக ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள் சட்ட விரோதமாக வேட்டையாடப்படுகின்றன. 
 • உலகின் மிகப்பெரிய யானைகளில் ஒன்றான சடாவோ சமீபத்தில் அதன் சின்னமான தந்தங்களுக்காக கொல்லப்பட்டது. கென்யாவின் மற்றொரு யானையான மவுண்டன் புல்லும் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது.
காட்டை உருவாக்கும் 
 • ஒரு யானையை பாதுகாப்பது, 18 லட்சம் விதைகளை விதைப்பதற்கு சமம். நாளொன்றுக்கு யானை, 200 முதல், 250 கிலோ உணவை சாப்பிடும். 
 • அதில், 10 கிலோ விதைகளும், குச்சிகளும் திரும்பவும் மண்ணில் விதைக்கப்படும். ஒரு யானை மாதத்துக்கு, 3,000 விதைகள் வீதம் ஆண்டிற்கு, 36 ஆயிரத்து, 500 விதைகளை விதைத்து, தன் வாழ்நாளில், 18 லட்சத்து, 25 ஆயிரம் மரங்கள் வளர காரணமாகின்றன.
உலகில் இரண்டாவது இடம் 
 • அதிக யானைகள் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. 
 • உலகிலிருந்த, 24 வகை யானைகளில், 22 வகை இனங்கள் அழிந்து, உலகில் ஆப்பிரிக்க, ஆசிய வகை யானைகள் மட்டுமே உள்ளன. 
 • கடந்த, 2017 கணக்கெடுப்பின்படி, ஆசியாவிலுள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கையில் இந்தியாவில், 44 சதவீதம் அதாவது, 27 ஆயிரத்து, 312 யானைகள் உள்ளன. தற்போது யானைகள், அரியவகை விலங்குகள் பட்டியலில் உள்ளன.
உலக யானைகள் தினம் 2022 தீம்
 • இன்று உலக யானைகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலக யானைகள் தினம் 12 ஆகஸ்ட் 2012 அன்று தொடங்கியது. 
 • யானைகள் தினத்தை கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் உலகம் முழுவதும் யானைகள் பற்றிய விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதாகும். 
 • யானை தேசிய பாரம்பரிய விலங்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் யானைகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
 • உலக யானைகள் தினம் 2022 தீம் - யானைகளுக்கு உதவ உலகை ஒன்றிணைத்தல்
ENGLISH
  How did International Elephant Day come about?
  • The first International Elephant Day was celebrated on August 12, 2012. In William Shatner's film 'Return to the Forest', there is a story element of a captive Asian elephant being released back into the wild.
  • As the film was released on 12.8.12, World Elephant Day is celebrated on that day i.e. 12th August every year. International Elephant Day is celebrated on 12th August every year. The purpose of this day is to protect elephants.
  • The average lifespan of elephants is about 70 years. Its trunk is made up of 40,000 muscles. With this, an elephant can detect the movement of a human even at a distance of 1.5 km. Both elephant tusks can weigh up to 90 kg. African female elephants have tusks.
  • Elephants have a large brain and have a great memory. Thus they go back and forth without changing their route in the vast forest. An elephant's tusks weigh five kilograms. Elephants give birth only once in four years. They weigh up to 100 kg. Female elephants don't like religion.
  • If an old elephant in a herd knows that it is doomed to die, it will break away from the herd and seek its own death by fasting and eating.
  Are elephants protected now?
  • Elephants are losing their habitat due to the encroachment of their routes. They die in the wild without enough food. Sometimes elephants are heavily poached for their tusks.
  • 80 elephants have died in Coimbatore Forest Reserve in the last 5 years due to various reasons. Maximum 22 elephants died in 2016. So far this year, 17 elephants have died.
  • Out of the 80 elephants who died, 71 elephants died due to natural causes including ill health, and 9 elephants died due to activities such as electric fences put up by farmers to protect their land.
  • In particular, the fragmentation of the Asian elephant's habitat and the isolation of the elephants have greatly affected their reproduction. It makes it easier for poachers to find elephants and set traps.
  • Asian elephants have lost nearly 30 to 40 percent of their habitat. Invasion of forests by alien plants is causing food shortages for elephants due to the removal of food plants.
  • Human-elephant conflict is also a problem now. Increasing human population and decreasing forest cover are forcing elephants closer to human settlements.
  • Studies suggest that elephant families use 500 square kilometers of forest per year. They require 250 kg of food daily.
  • Elephants use their own crawling path. Over the past 100 years, people have damaged the Walasay track. In India, there are said to be 27 thousand elephants.
  • Forests are divided by roads, embankments, power lines, etc. Elephant movement and habitat has shrunk. There is not enough food where they live.
  Illegal elephant poaching
  • China needs more ivory. For this, African and Asian elephants are poached illegally. Sadao, one of the world's largest elephants, was recently killed for its iconic tusks. Another Kenyan elephant, the mountain bull, was also killed by poachers.
  Create a forest
  • Protecting one elephant is equivalent to planting 18 lakh seeds. An elephant eats 200 to 250 kg of food per day.
  • Out of which, 10 kg of seeds and sticks will be sown in the soil again. An elephant sows 36,500 seeds at a rate of 3,000 seeds per month and causes 18,25,000 trees to grow in its lifetime.
  Second place in the world
  • India has the second highest number of elephants in the world. In particular, the Nilgiris district has the largest number of elephants.
  • Out of 24 species of elephants in the world, 22 species are extinct and only African and Asian species of elephants remain in the world.
  • According to the last census of 2017, India has 44 percent of the total number of elephants in Asia, i.e. 27 thousand 312 elephants. Currently, elephants are listed as rare animals.
  World Elephant Day 2022 theme
  • Today World Elephant Day is celebrated all over the world. World Elephant Day started on 12 August 2012. The main objective of celebrating Elephant Day is to promote awareness and conservation of elephants around the world.
  • Elephant has also been declared a national heritage animal. In such a situation it is the duty of every citizen to protect elephants.
  • World Elephant Day 2022 Theme - Uniting the World to Help Elephants

  Post a Comment

  0 Comments
  * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

  Top Post Ad

  Below Post Ad

  Hollywood Movies

  close

  Join TNPSC SHOUTERS Telegram Channel

  Join TNPSC SHOUTERS

  Join Telegram Channel