புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக்கில் நாட்டின் மிக உயரமான வணிக ஏரோட்ரோம் லே விமான நிலையத்தின் பாதுகாப்பை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) 05/08/20 -ஏற்றுக்கொண்டது.
- கடல் மட்டத்திலிருந்து 3,256 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மூலோபாய மற்றும் "ஹைபர்சென்சிட்டிவ்" விமான நிலையத்திற்கு 185 சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் ஒரு குழு கடிகார, ஆயுத பாதுகாப்பை வழங்கும் என்று துணை ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) இயக்கப்படும் குஷோக் பாகுலா ரிம்போச்சி விமான நிலையம் சிஐஎஸ்எஃப் மறைவின் கீழ் கொண்டுவரப்படும் 64 வது சிவில் விமான நிலையமாகும். இது வரை உள்ளூர் போலீசாரால் பாதுகாக்கப்பட்டு வந்தது.
- இந்த வருடத்திய நியூயார்க்- இந்திய திரைப்பட விழா விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நிவின்பாலி நடித்த 'மூத்தோன்' சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் நடித்ததற்காக நிவின்பாலிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் இதில் சிறுவன் வேடத்தில் நடித்த நடித்த சிறுமி சஞ்சனா திபுவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்கிற விருதும் என இந்தப்படம் மொத்தம் மூன்று விருதுகளை அள்ளியுள்ளது.
- கடந்த நவம்பர் மாதம் மலையாளம் மற்றும் இந்தியில் வெளியான இந்த படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியிருந்தார். கேரளா மற்றும் மும்பை பின்னணியில் அமைந்திருந்த இந்த படத்தின் கதைக்களமும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த நிவின்பாலியின் கதாபாத்திரமும், இந்த படம் கமர்சியல் வெற்றிக்கு ஏற்ற படம் அல்ல என்பதையும், அதேசமயம் விருதுகள் பெறுவதற்கு தகுதியான படம் என்றும் நிரூபித்தது.
- மற்ற நடிகர்கள் நடிக்க தயங்கும் ஹோமோசெக்சுவல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நிவின்பாலி. நிவின்பாலியின் நடிப்புக்கு நிச்சயம் பல விருதுகள் கிடைக்கும் என படம் வெளியானபோதே விமர்சகர்கள் பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஐ.நா. வளா்ச்சி கூட்டு நிதியத்துக்கு இந்தியா ரூ.115.95 கோடி பங்களிப்பு
- கரோனா பாதிப்பால் உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிா்கொண்டிருக்கும் நிலையில், வளரும் நாடுகளின் வளா்ச்சித் திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்திய-ஐ.நா. வளா்ச்சி கூட்டு நிதியத்துக்கு இந்தியா ரூ.115.95 கோடி பங்களிப்பு செய்துள்ளது.
- இதற்கான காசோலையை ஐ.நா. அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு ஒத்துழைப்புக்கான ஐ.நா. அலுவலக இயக்குநா் ஜாா்ஜ் செடிக்கிடம் ஐ.நா.தூதருக்கான இந்தியாவின் நிரந்திர பிரதிநிதி டி.எஸ்.திருமூா்த்தி வழங்கினாா்.
- இந்திய-ஐ.நா. வளா்ச்சி கூட்டு நிதியம் தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான ஐ.நா. அலுவலகத்தால் நிா்வகிக்கப்படுகிறது. இந்த நிதியத்தில் அங்கம் வகிக்கும் வளரும் நாடுகளின் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள், ஐ.நா. அமைப்பின் நிதி மற்றும் திட்டங்களை வலுப்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
- இதில், இந்தியாவின் பங்களிப்பாக இப்போது அளிக்கப்பட்டிருக்கும் ரூ.115.95 கோடியில், ரூ.45 கோடி இதில் அங்கம் வகிக்கும் அனைத்து வளரும் நாடுகளின் வளா்ச்சித் திட்டங்களுக்காகவும், ரூ.70.95 கோடி காமன்வெல்த் நாடுகளின் வளா்ச்சித் திட்டங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டினார் மோடி
- உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி அனுமதி வழங்கியது.
- அதன் உத்தரவுப்படி, கோயில் கட்டுவதற்காக அரசியல் சார்பற்ற 'ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா' என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன் சார்பில், கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
- ராம ஜென்ம பூமியில் 67 ஏக்கரில் 10 ஏக்கர் பரப்பளவில் 5 மண்டபங்கள், ராஜ கோபுரம் என நாகரா கட்டிட பணி கலையில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்ட திட்டம் வகுக்கப்பட்டது.
- இதையடுத்து, கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து ஹெலிகாப்டரில் அயோத்தி வந்த பிரதமர் மோடியை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
- கொரோனா பாதிப்பால், சாதுக்கள், ராமர் கோயில் கட்டுவதற்காக 30 ஆண்டாக போராடியவர்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. பாஜ மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் விழாவில் பங்கேற்றனர்.
- அடிக்கல் நாட்டு விழாவுக்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அனைத்து வீடுகள், கடைகள் மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் ஜொலித்தன.
- முக்கிய சாலைகளில் மரிக்கொழுந்து பூக்கள் தோரணத்துடன் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்கப்பட்டனர். ராமர் கோயில் மாதிரிகள் வரையப்பட்டு, குழந்தை ராமரின் படங்கள் சுவர்களில் வரையப்பட்டிருந்தன.
- ராம ஜென்ம பூமிக்கு செல்லும் முன்பாக பிரதமர் மோடியும், ஆதித்யாநாத்தும் அனுமன் கர்கி கோயிலுக்கு சென்று அனுமனிடம் ஆசீர்வாதம் பெற்று திரும்பினர்.
- பின்னர், ராம ஜென்ம பூமியில் பூமி பூஜை நடக்கும் மேடைக்கு பிரதமர் வந்தார். அவருடன் ஆதித்யநாத், உபி ஆளுநர் ஆனந்தி பென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மகந்த் நிருத்திய கோபால் தாஸ் ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.
- அனைவரும் முகக்கவசத்துடன் சமூக இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அடிக்கல் நாட்டும் இடத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க பூஜையை நடத்தினர்.
- பின்னர், வேதமந்திரங்கள் முழங்க, கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இந்த பூமி பூஜை மந்திரங்கள் நகரமெங்கும் ஒலிக்கும் வகையில் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் பஜனைகள் நடைபெற்றன.
- நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் டிவி, இணையதளங்கள் மூலமாக பூமி பூஜையை நேரடியாக கண்டுகளித்தனர். அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் பூமி பூஜை நடந்த சமயத்தில் வீடுகளில் ராமரை பூஜித்து வழிபட்டனர். அங்குள்ள பல இந்து கோயில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.
- இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு பூமி பூஜை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பூமி பூஜையைத் தொடர்ந்து, ராமர் கோயில் கட்டும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட உள்ளன.
- இதன் மூலம், மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்ற 30 ஆண்டுகால வாக்குறுதியை பாஜ நிறைவேற்றி உள்ளது.
- கற்கள்: ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து கொண்டு வரப்படும். இவை, 'கற்களின் ராஜா' என்ற பெருமைக்குரியவை. ராமர் கோயில் கட்டுவதற்கான நாடு முழுவதிலும் இருந்து அனுப்பப்பட்ட லட்சக்கணக்கான செங்கற்களும் பயன்படுத்தப்படும்.
39 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் அடங்கிய கிட்: ஆந்திர முதல்வர் அறிவிப்பு
- ஆந்திராவில் 39 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள், பை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் அடங்கிய கிட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
- ஜெகனண்ணா கனுகா திட்டத்தின் கீழ் இந்த கிட் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 15,715 பள்ளிகளிலும், 2-வது கட்டத்தில் 14,585 பள்ளிகளிலும் 3-ம் கட்டத்தில் 16,489 பள்ளிகளிலும் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
- இது குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அனைத்துப் பள்ளிகளிலும் மினரல் வாட்டர் வசதி ஏற்படுத்தும் வகையில் தயாரிப்பு ஆலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
- நவம்பர் 14-ம் தேதி முதல் தொடங்கும் கல்வி உபகரணங்கள் கிட் வழங்கும் நிகழ்வு, மார்ச் 31 2022ல் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
- மேலும் அரசு வழங்கும் பள்ளிப் பொருட்களின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் இருக்கக் கூடாது என்றும் முறையான சுகாதாரத்தை பராமரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- இதுமட்டுமல்லாமல், ஐஐடி மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவி நடுவர் நோ-பால் அளிக்கும் முறை அறிமுகம்
- கிரிக்கெட்டில் எத்தனையோ முறை நடுவர்கள் பவுலரின் முன் கால் கிரீசை தாண்டி செல்லும் நோ-பால்களைப் பார்க்காமல் விட்டுள்ளனர், இதனால் பேட்ஸ்மென்கள் பலர் அநியாயமாக ஆட்டமிழந்து சென்றுள்ளனர்.
- இத்தகைய தன்முனைப்பற்ற அநீதியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இன்று தொடங்கிய இங்கிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் டிவி நடுவர் நோ-பால் அளிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு இந்தியா-மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்த முறை பரிசோதிக்கப்பட்டது. உலக மகளிர் டி20 கோப்பைப் போட்டிகளிலும் முயற்சி செய்யப்பட்டது, ஆனால் டெஸ்ட் போட்டிகளில் இதுவே முதல் முறை.
பெய்ரூட் நகரத்தை உலுக்கிய இரண்டு பெரிய வெடிப்புகளில் 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 4,000 பேர் காயமடைந்தனர் என்று லெபனான் செஞ்சிலுவை சங்கம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
- இந்த குண்டுவெடிப்பு செவ்வாய்க்கிழமை மாலை (உள்ளூர் நேரப்படி மாலை 6.10 மணியளவில்) நடந்தது, நகரம் முழுவதும் கட்டிடங்களை உலுக்கியது, அதே நேரத்தில் கடுமையான சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.