'யுனிகார்ன் ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் உலகளவில் நான்காவது இடத்தில் இந்தியா
- ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், ஒரு பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில், 7,500 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்பு கொண்ட நிறுவனங்கள், 'யுனிகார்ன்' நிறுவனங்கள் என அழைக்கப்படும்.
- இத்தகைய அதிக மதிப்பு கொண்ட, 21 யுனிகார்ன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் இருப்பதாக, ஹுருன் குளோபல் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் மொத்தம், 21 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. மேலும், இது போன்ற, 40 நிறுவனங்களை இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் துவக்கி இருக்கின்றனர்.
- இந்த, 21 நிறுவனங்களின் மொத்த மதிப்பு, 73.2 பில்லியன் டாலர் அதாவது, 5.49 லட்சம் கோடி ரூபாய் ஆகும். யுனிகார்ன் நிறுவனங்கள் அதிகமிருக்கும் நாடுகளில், இந்தியா நான்காவது இடம் வகிக்கிறது.
- அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில், இந்தியா இருக்கிறது. உலகளவில் மொத்தம், 586 யுனிகார்ன் நிறுவனங்கள், 29 நாடுகளில் உள்ள, 145 நகரங்களில் அமைந்துள்ளன.
- இந்தியர்கள் துவக்கி இருக்கும், 61 யுனிகார்ன் நிறுவனங்களில், மூன்றில் இரண்டு பங்கு வெளிநாடுகளில் உள்ளன. அதிலும் அதிகமாக, அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ளன.
- வெளிநாடுகளில் இந்தியர்களால் துவக்கப்பட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பு, 7.47 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதில், பின்டெக் ராபின்ஹூட் நிறுவனம், 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் முன்னிலை வகிக்கிறது.
- இந்தியாவிலுள்ள, 21 நிறுவனங்களில், பேடிஎம், ஓயோ ரூம்ஸ், பைஜுஸ், ஓலா கேப்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள், மின்னணு வர்த்தக துறையில் இயங்குகின்றன.
- இந்தியாவில் அதிகபட்சமாக, பெங்களூருவில் மொத்தம், 8 நிறுவனங்கள் உள்ளன. யுனிகார்ன் மையமாக பெங்களூரு விளங்குகிறது. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், யுனிகார்ன் அந்தஸ்தை அடைய, அமெரிக்காவில், 6.5 ஆண்டுகளும்; சீனாவில், 5.5 ஆண்டுகளும் ஆகின்றன.
- இதுவே, இந்தியாவில், 7 ஆண்டுகள் ஆகின்றன. சீனாவில் உள்ள யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால், இந்தியாவில், பத்தில் ஒரு பங்கு தான் உள்ளது.
- சீனாவில் மொத்தம், 227 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. இந்தியர்கள் வெளிநாடுகளில், 40 நிறுவனங்களை துவக்கி இருக்கும் நிலையில், சீனா, அந்நாட்டுக்கு வெளியே, 16 நிறுவனங்களை மட்டுமே துவக்கி இருக்கிறது.
- இந்தியாவில் உள்ள, 11 யுனிகார்ன் நிறுவனங்களில், சீனாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள், அதிக முதலீடுகளை செய்துள்ளன. சீனாவை சேர்ந்த அலிபாபா, 5 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களிலும்; டென்சென்ட், 3 நிறுவனங்களிலும்; டி.எஸ்.டி., குளோபல், 3 நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளன.
- ஜப்பானை சேர்ந்த, சாப்ட்பேங்க், 9 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த, டைகர் குளோபல், 5 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
- டில்லி ஐ.ஐ.டி.,யில் இருந்து, அதிகளவிலான யுனிகார்ன் நிறுவனர்கள் உருவாகி இருக்கின்றனர். மொத்தம், 36 நிறுவனர்கள், டில்லி ஐ.ஐ.டி.,யிலிருந்து வந்தவர்கள் ஆவர். இந்திய யுனிகார்ன் நிறுவனர்களில், 104 பேர் ஆண்கள். பெண்களின் எண்ணிக்கை வெறும், 5 மட்டுமே.
ஜம்மு-காஷ்மீா் உயா்கல்வி நிறுவனங்களில் லடாக் மாணவா்களுக்கு 4% இடஒதுக்கீடு
- மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீா், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து இரு யூனியன் பிரதேசங்களும் கடந்த ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கின.
- அதைத்தொடா்ந்து ஜம்மு-காஷ்மீா் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, லடாக் யூனியன் பிரதேசத்தைச் சோந்த மாணவா்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- 'லடாக்கில் தொழில்முறைக் கல்வி நிறுவனங்கள் இல்லாததால், ஜம்மு-காஷ்மீரில் உள்ள கல்லூரிகளில் லடாக் மாணவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக பரிந்துரைகள் வழங்குவதற்கு மத்திய அரசு குழு அமைத்திருந்தது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனங்களில் லடாக் மாணவா்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அந்தக் குழு பரிந்துரைத்திருந்தது.
- அந்தப் பரிந்துரையை ஜம்மு-காஷ்மீா் தலைமைச் செயலா் பி.வி.ஆா்.சுப்ரமணியம் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில் லடாக் மாணவா்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, லடாக் மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 35 இடங்களும், பொறியியல் கல்லூரிகளில் 24 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
- மீதமுள்ள இடங்களில் ஜம்மு-காஷ்மீா் மாணவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். இந்த இடஒதுக்கீட்டு முறையானது நடப்பு 2020-21-ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும். இடஒதுக்கீடு தொடா்பாக லடாக் நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றாா்.
அசாமிற்கு பிரத்யேக முழுநேர தூர்தர்ஷன் சேனல் தொடக்கம்
- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அசாம் மாநிலத்திற்கான 24 மணி நேர பிரத்யேக சேனலான தூர்தர்ஷன் அசாம் என்பதை டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.