பட்டியலின பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள்இடஒதுக்கீடு செல்லும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
- தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பட்டிய லினப் பிரிவினருக்கு வழங்கப் படும் இடஒதுக்கீட்டில், அருந்ததி யினருக்கு 3 சதவீத உள்இடஒதுக் கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவு கடந்த 2009-ம் ஆண்டில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- இதை எதிர்த்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
- இதே பிரச்சினை தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்தது. அதனால், கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சேலத்தைச் சேர்ந்த யசோதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மாற்றல் மனு தாக்கல் செய்திருந்தார்.
- அதன்படி, இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதேபோல அருந்ததியினருக்கான உள்ஒதுக்கீட்டை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இருந்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
- இந்த வழக்குகள் மீதான விசா ரணை, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர் வில் நடந்துவந்தது.
- பட்டியலினப் பிரிவினருக்கு வழங்கப்படும் 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி மாநில அரசு கொண்டு வந்துள்ள சட்டம் செல்லும். இவ்வாறு பட்டியலினப் பிரிவினரில் பின்தங்கிய வகுப்பினரை முன்னேற்றும் வகையில் உள்இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
- அதேநேரம் கடந்த 2005-ம் ஆண்டு இ.வி.சின்னையா வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில், அந்த வழக்கில் இந்திரா ஷகானி என்பவரது வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் முறையாக கருத்தில் கொள்ளவில்லை.
- எனவே, இந்த உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இறுதி முடிவு எடுப்பதற்காகவும் விரிவாக விசாரிப்பதற்காகவும் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம்.
ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுகட்ட மாநில அரசுகள் இருவழியில் கடன் பெற்றுக் கொள்ள சிறப்பு திட்டம்
- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள், நிதித்துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.
- அப்போது, 2019-20ம் ஆண்டில் மாநிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் 95 ஆயிரத்து 444 கோடி மட்டும் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்தார்.
- நடப்பாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு விகிதம் இரண்டு லட்சத்து 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் ஏற்படும் இழப்பீடு பற்றாக்குறை 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
- இதனை ஈடுகட்ட மாநில அரசுகள் இருவழியில் கடன் பெற்றுக் கொள்ள நடப்பு ஆண்டில் மட்டும் சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலாவதாக ரிசர்வ் வங்கியில் இருந்து 97 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுக் கொள்ளலாம். நியாயமான வட்டியுடன் இந்த கடன் தொகையை ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.
- மேலும், மாநில அரசுகள் கடன் பெறும் வரம்பை பூஜியம் புள்ளி 5 விழுக்காடாக உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது என இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இதில், ஏதாவது ஒரு வாய்ப்பை தேர்ந்தடுக்கும்படியும், அடுத்த ஒருவாரத்திற்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்க புதிய செயலி ! தொடங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்
- நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் , கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
- இதன் விளைவாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக படங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்க செல்போன் செயலி ( Directorate General National Cadet Corps Mobile Training App ) ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில் தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி வழங்கும் செல்போன் செயலியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.
200 பில்லியன் சொத்துக்கள் சேர்த்து உலகில் முதல் பணக்காரரான அமேசான் நிறுவனர்
- உலக அளவில் கொரோனா வைரஸ் பரவிவருவதால், பல நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிந்துகொண்டே வருகிறது. ஆனால், அமேசான் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், அமேசான் நிறுவனத்தின் பங்குகள், 2.5 சதவீதமாக அதிகரித்தது.
- 56 வயதாகும் ஜெப் பெஸோஸின் நிகர மதிப்பு, ஜனவரி 1- ம் தேதி 115 பில்லியன் டாலராக இருந்தது. தற்பொழுது அவரின் சொத்து மதிப்பு, தற்பொழுது 205 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.