புதிய செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா
- சீனா தனது புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜியுவான் ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 10:27 க்கு செயற்கைக்கோளை சீனா விண்ணில் ஏவியுள்ளது.
- ஏற்கனவே காபன்9 05 என்ற செயற்கைகோள் கடந்த மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நில அளவீடுகள், நகரத் திட்டமிடல், சாலைகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு பேரழிவு தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கு தற்போது அனுப்பியுள்ள இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் நீளமான ரோப் கார் வழித்தடம் அசாமில் திறப்பு
- அசாமின் மத்திய கவுகாத்தி நகரில் இருந்து வடக்கு கவுகாத்திக்கு செல்வதற்கு மக்கள் பிரம்மபுத்திரா ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இதற்கு படகை பயன்படுத்தினர். ஆனால் பருவமழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தடை ஏற்பட்டது.
- இதையடுத்து ஆற்றின் குறுக்கே ரோப் வழித்தடம் அமைக்க 2006ல் ரூ. 28 கோடி மதிப்பீட்டில் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்கியது. 2009 டிசம்பரில் பணி தொடங்கியது. இடையே ஒரு தீவு உள்ளதால் 2011ல் இதற்கு தொல்லியல் துறை எதிர்ப்பு தெரிவித்தது.பின் அதன் அனுமதி பெற்று 2017ல் மீண்டும் தொடங்கி முடிக்கப் பட்டது.
- மொத்த செலவு ரூ. 56 கோடி.1.8 கி.மீ. துாரத்துக்கு அமைக்கப்பட்ட ரோப்கார் வழித் தடத்தை மாநில பொதுப்பணி துறை அமைச்சர் பிஸ்வா சர்மா வளர்ச்சி துறை அமைச்சர் சித்தார்த்தா பட்டாச்சார்யா எம்.பி. குயின் ஓஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.இதன் மூலம் ஆற்றை 8 நிமிடங்களில் கடக்கலாம்.
- ஒவ்வொரு ரோப் காரிலும் 30 பயணிகள் 2 ஆப்பரேட்டர்கள் அமரலாம். ஒரு மணி நேரத்துக்கு 250 பயணிகள் ஆற்றைக் கடக்கலாம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஒரு ரோப் காரில் 15 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு வழித்தடத்துக்கு ரூ. 60 இரு வழித்தடத்துக்கு ரூ. 100 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜீவன ரக்ஷா பதக் விருது
- தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் உள்ள வெள்ளையன் ஏரியில் குளிக்க சென்ற 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர்.
- அப்போது, அவ்வழியாக சென்ற ஸ்ரீதர் 6 பேரையும் காப்பாற்றினார். இவ்வீர, தீர செயலுக்காக தமிழக அரசு 2019ம் ஆண்டுக்கான 'ஜீவன ரக்ஷா பதக்' என்ற விருதுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
- இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். எனவே தமிழக முதல்வர் ஸ்ரீதருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.
- ஸ்ரீதர், 2019ம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது, தமிழக அரசின் வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் 6ம் முறையாக பேயர்ன் மியூனிக் சாம்பியன்
- போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் உள்ள லஸ் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில் ஜெர்மனியின் பண்டெஸ்லிகா சாம்பியன் பேயர்ன் மியூனிக், பிரான்சின் லீக் ஒன் சாம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணிகள் மோதின.
- யுஇஎப்ஏ வரலாற்றில் முதல்முறையாக பைனலுக்கு முன்னேறிய பிஎஸ்ஜி அணி, 5 முறை சாம்பியனும் 11வது முறையாக பைனலில் விளையாடும் பேயர்ன் மியூனிக்கின் சவாலை எதிர்கொண்டது. பெரும்பாலான நேரம் பந்து பேயர்ன் வீரர்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கோல் அடிக்க முடியவில்லை.
- விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பேயர்ன் மியூனிக் வெற்றிப் பெற்றது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோற்காத அணி, தொடர்ந்து 11 போட்டிகளில் வென்ற அணி என்ற பெருமையுடன் பேயர்ன் அணி 6வது முறையாக கோப்பையையும் கைப்பற்றியது.
- ஆட்ட நாயகனாக கிங்ஸ்லி தேர்வு செய்யப்பட்டார். அரையிறுதியில் விளையாடாத கிங்ஸ்லி காமன், பைனலில் களமிறங்கி வெற்றி கோல் அடித்தது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் ஏற்கனவே பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி இருக்கிறார்.