காஷ்மீரின் உதம்பூரில் மிகப்பெரிய யோகா மையம்
- ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள மந்தலையில் மிகப்பெரிய யோகா மையம் அமைய உள்ளது. இது தேசிய கட்டுமான கழகத்தால் (National Projects Construction Corporation (NPCC)) கட்டப்பட்டு 2021 ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த மையம் அமைப்பதற்காக ஆகும் செலவு ரூ. 9,782 லட்சம் என கூறப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் தீரேந்திர பிரம்மச்சாரியின் யோகா மையமான அபர்ணாவிற்கு பிரபலமானது.
- அதன் பாழடைந்த கட்டிடம் இன்னும் அங்கே உள்ளது. முன்னாள் பிரதமர் இந்திராவின் யோகா ஆசிரியராக திரேந்திர பிரம்மச்சாரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மந்தலையில் பிரமிட் வடிவ மெகா அமைப்பு கட்டப்பட்டு வருகிறது. இது தவிர, சுற்றுலாப் பயணிகளுக்கான வீடுகள், ஹெலிபேட், டின்னிங் பிளாக் ஆகியவை வரவிருக்கும் சில திட்டங்களாகும்.
- மந்தலை, சுத் மகாதேவ் மற்றும் பட்னி டாப் ஆகியவற்றில் சுற்றுலா தலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி படி, யோகா மையம் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். சுத் மகாதேவில் ஒரு சிற்றுண்டி சாலை கட்டப்பட்டு வருகிறது.
சிவகங்கை அருகே 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
- சக்கந்தியில் அரண்மனை சசிவர்ணம் அவரது தம்பி மலைராஜ் மற்று ராமநாதபுரம் மாரி ஆகியோர் சாய்ந்து மண் மூடிக்கிடந்த கல் ஒன்றில் எழுத்து இருப்பதைக் கண்டு அதை நட்டுவைத்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு கள ஆய்வு செய்தபோது 464 ஆண்டு பழமையான 16-ம் நூற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பெற்றது.
- சக்கந்தியில் பிற்காலப் பாண்டியர்களின் சிவன் கோயில் ஒன்று இருந்து அழிந்து போயிருக்கலாம். அதற்கான எச்சங்கள் காணக்கிடைக்கின்றன.
- சக்கந்தி கண்மாய்க்கரையில் நந்தி சிலையொன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. மேலும், சக்கந்தி ஊரினுள் அரண்மனை என்று அழைக்கபடுகிற இடத்தின் எதிரே உள்ள பொட்டலில் கோயில் இடிபாட்டில் மிச்சப்பட்ட முப்படைக் குமுதகத் துண்டுக் கல்வெட்டு வரிகளில் செழியத்தரைய மற்றும் இன்னாயினாருக்கு என வருகிறது.
- இதில் செழியத்தரைய என்பது பாண்டியர் கால அரசு அலுவலரைக் குறிப்பதாகவும் இன்னாயினாருக்கு என்பது கடவுள் பெயரைக் குறிப்பதாகவும்.
- இக்கல்வெட்டு இறையிலி தானம் வழங்கிய செய்தியைச் சொல்வதாகக் கொள்ளலாம். எழுத்தமைதி பதிமூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம். இப்பகுதியில் சிவன் கோயில் இருந்து அழிந்ததாக செவிவழிச் செய்திகளும் வழங்கப்படுகின்றன.
தென்ஆப்பிரிக்க முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேக் காலீசை கவுரவித்த ஐசிசி
- சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐசிசி) 'ஹால் ஆப் பேம்' என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து கவுரவிக்கிறது.
- தற்போது இந்த பட்டியலில் புதிதாக தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். தென்ஆப்பரிக்க அணி சார்பில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,289 ரன்னும், ஒரு நாள் போட்டியில் 11,579 ரன்னும், 250 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறந்த ஆல ரவுண்டராக விளங்கினார்.
- தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்புக்குரியவர் ஜாக் காலிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.