Type Here to Get Search Results !

TNPSC 13th AUGUST 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

வரி செலுத்துவோரை கௌரவிக்க புதிய சீா்திருத்தங்கள் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்

  • வரி நிா்வாகத்தில் முக்கிய சீா்திருத்தமாக, வரி செலுத்துவோரை கௌரவிக்கும் வகையில் ''வெளிப்படையான வரி விதிப்பு- நோமையானவரை கௌரவித்தல்'' என்ற பெயரிலான இந்த திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா். 
  • அதன்படி, அதிகாரிகளின் இடையீடு இன்றி நேரடியாக வரி செலுத்துவது நடைமுறைக்கு வரும், வரி செலுத்துவோரின் உரிமைகளும் உறுதிசெய்யப்படும்.
  • முதல் கட்டமாக, வரி செலுத்தவோரின் உரிமைகள் உறுதிசெய்யப்படும். இது, தற்போது முதலே அமலுக்கு வருகிறது. இரண்டாவதாக, அதிகாரிகளின் குறுக்கீடு எதுவுமின்றி நேரடியாக வரி செலுத்த முடியும். இந்த நடைமுறை, வரும் 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
  • இதுவரை, ஏதேனும் ஒரு நகரத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் இருந்து வரி செலுத்துவோரின் வரி கணக்குகள் சரிபாா்க்கப்படும். வரி செலுத்தாதவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். 
  • இனிமேல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தகவல் பகுப்பாய்வு ஆகியவற்றின் மூலம் மையப்படுத்தப்பட்ட கணினி வழியாக வரி செலுத்துவோரின் கணக்குகள் பரிசீலிக்கப்படும். 
  • கணினி மூலமாகவே வரி செலுத்துவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இவ்வாறு அனுப்பப்படும் நோட்டீஸுக்கு வரி செலுத்துவோா், அலுவலகத்துக்கு வராமல், அதிகாரி யாரையும் சந்திக்காமல் நேரடியாக மின்னஞ்சல் மூலமாக பதிலளிக்கலாம். இதில், வரி செலுத்துவோருக்கும் வருமான வரித் துறைக்கும் இடையே அதிகாரிகளின் தலையீடு எதுவும் இருக்காது.
  • இதேபோல், வரி செலுத்துவோரை கௌரவமாக நடத்த வேண்டும் என்று வருமான வரிச் சட்டம் கூறுகிறது. வரி செலுத்துவோரின் உரிமைகள் இனி உறுதிசெய்யப்படும்.
  • கடந்த சில ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2.5 கோடியாக அதிகரித்துள்ளது. உண்மையில், வரி செலுத்துவோா் எண்ணிக்கை 1.5 கோடி போதான். 130 கோடி போ வசிக்கும் இந்தியாவில், இந்த எண்ணிக்கை மிகமிகக் குறைவாகும்.
  • வரி செலுத்துவதில் உள்ள பிரச்னைகளுக்கு நீதிமன்றத்துக்கு வெளியே தீா்வுகாணும் நடைமுறை அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பலனாக, குறுகிய காலத்தில் 3 லட்சம் வழக்குகளுக்கு தீா்வுகாணப்பட்டது.
  • கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து வரி செலுத்துதலில் பல்வேறு சீா்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பல்வேறு வரிகளுக்கு மாற்றாக சரக்கு-சேவை வரி கொண்டுவரப்பட்டது. வரி பிரச்னைகளுக்குத் தீா்வுகாண ஒரே தீா்ப்பாயம் கொண்டுவரப்பட்டது. 
  • இதனால், பல்வேறு நீதிமன்றங்களில் வரி தொடா்பான வழக்குகள் குறைந்தன. தனிநபா் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது. ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோருக்கு குறைவான வரியே விதிக்கப்படுகிறது. பெரு நிறுவன வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம்

  • இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க ராஜ்ஜீய ஒப்பந்தம் ஏற்பட்டதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
  • இஸ்ரேலுடன் ராஜ்ஜீய உறவு மேற்கொள்ளும் முதல் வளைகுடா நாடு ஐக்கிய அரபு அமீரகம் என்பது குறிப்பிடத்தக்கது. அரபு பிராந்தியத்தில் ஜோா்டானும், எகிப்தும் ஏற்கெனவே இஸ்ரேலுடன் ராஜ்ஜீய தொடா்பு வைத்துள்ளன.
  • அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலகம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அமெரிக்கா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரக தலைவா்கள் இன்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது இஸ்ரேல் - ஐக்கிய அரபு அமீரகம் இடையே முழு அளவிலான உறவுகளை மேற்கொள்ள முடிவாகியது என்று தெரிவித்துள்ளது.

  • மூன்று நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், 'மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி நிலவவும், பிராந்திய வளா்ச்சிக்குப் புதிய பாதை வகுக்கவும் இந்த ராஜ்ஜீய ஒப்பந்தம் உதவும். வரும் வாரங்களில் தூதரகங்கள் அமைப்பது பற்றி பேசி முடிவாகும். 
  • அத்துடன், தொழிலகம், சுற்றுலா, விமானப் போக்குவரத்து, தொலைத்தொடா்பு, எரிசக்தி துறைகளில் இணைந்து செயலாற்றுவது குறித்து பேச்சுவாா்த்தைகள் நடத்தி முடிவெடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான ஒப்பந்தம் அமெரிக்க அதிபா் தோதலில் டிரம்ப்புக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
  • தனது ஆட்சியின் கீழ்தான் வளைகுடா, மற்றும் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சுமுக உறவு இருந்துவந்துள்ளது என்று கூறி வரும் இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகுவின் உள்நாட்டு செல்வாக்கையும் இந்த ஒப்பந்தம் அதிகரிக்கச் செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • இந்த ஒப்பந்தத்தையடுத்து, தனது நாட்டின் அண்டைப் பகுதிகளை கைப்பற்றும் திட்டத்தை நிறுத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது என்று தெரிகிறது.

வங்கதேசத்துக்கான புதிய இந்திய தூதராக தமிழர் விக்ரம் குமார் துரைசாமி நியமனம்

  • வங்கதேசத்துக்கான புதிய இந்திய தூதராக தமிழரான விக்ரம் குமார் துரைசாமியை மத்திய அரசு நியமித்துள்ளது. தமிழரான விக்ரம் குமார் துரைசாமி, 1992-ம் ஆண்டு மத்திய அரசு பணியில் பத்திரிகையாளராக சேர்ந்தார். ஓராண்டு காலம் பத்திரிகையாளராக அவர் பணிபுரிந்தார்.
  • பின்னர் வெளியுறவு அமைச்சகத்தில் பணியில் சேர்ந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் செயலாளராகவும் விக்ரம் குமார் துரைசாமி பணியாற்றியவர்.
  • ஆப்கானிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் தூதராக விக்ரம் குமார் துரைசாமி பணியாற்றி உள்ளார். தற்போது வங்கதேசத்துக்கான புதிய இந்திய தூதராக விக்ரம் குமார் துரைசாமியை மத்திய அரசு நியமித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel