இந்தியாவின் முதல் தனியார் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace), தனது முதல் மேல் நிலை ராக்கெட் எஞ்சின் (Upper Stage Rocket Engine) "ராமன்" (“Raman”) ஐ வெற்றிகரமாக 8-8-2020 அன்று பரிசோதித்துள்ளது . இந்த ராக்கெட் எஞ்சினுக்கு நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் சர் சி.வி.ராமனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இது ஒரு உள்நாட்டு ராக்கெட் இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கி சோதனை செய்த இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி ஏவுகணை வாகன தயாரிப்பாளராக ஸ்கைரூட் திகழ்கிறது.