- உலக அளவில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் ஆண்களின் உருவமே காட்சிப்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்தியாவின் மும்பையில் முதன் முறையாக பெண் உருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- அனைவரையும் உள்ளடக்கும் நடைமுறையில் இது ஒரு முக்கியமான படி என பெண்கள் உரிமை ஆர்வலர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
- மும்பையில் 100க்கு மேற்பட்ட பச்சை, சிவப்பு நிற போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் ஆண் உருவத்துக்குப் பதிலாக பெண் உருவம் மாற்றப்பட்டுள்ளது.
- “நகரின் தன்மையை இந்த சமிக்ஞை மாற்றம் பிரதிபலிக்கிறது. பாலின சமத்துவத்தில் இந்த நகரம் நம்பிக்கைகொண்டுள்ளதையும் பெண்களின் அதிகாரத்தையும் குறிப்பிடுகிறது,” என மும்பை நகராட்சியின் துணை ஆணையர் கிரன் திகவ்கர் கூறினார்.
- “இது ஒரு தொடக்கம்தான்,” என தாம்சன் ராய்ட்டர்ஸ் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் பெண் உருவம்; முதன்முதலாக அறிமுகப்படுத்தியது- மும்பை
August 11, 2020
0
Tags