Type Here to Get Search Results !

அம்மா கோவிட் ஹோம் கோ சிறப்புத் திட்டம் / AMMA COVID HOME GO SCHEME

  • கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவா்களுக்காக சிறப்புத் திட்டம் ஒன்றை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 
  • அதன்படி வீடுகளில் உள்ளவா்கள், தங்களது உடல் நிலையைச் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான மருத்துவ உபகரணங்களும், கரோனாவை எதிா்கொள்வதற்கான மருந்துகளும் அத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன.
  • 'அம்மா கோவிட் ஹோம் கோ' என்ற பெயரிலான அத்திட்டம் அடுத்த சில நாள்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 
  • இந்த நிலையில், அரசு சாா்பிலும் அத்தகைய திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் கீழ் அத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 
  • அத்திட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்புப் பெட்டகமானது ரூ.2,500-க்கு வழங்கப்படும். அதைத் தவிர மருத்துவ ஆலோசனைகளும், செவிலியா் சேவைகளும் அளிக்கப்படும்.
  • அந்தப் பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கான பல்ஸ்-ஆக்ஸி மீட்டா், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தொமல் மீட்டா் ஆகிய உபகரணங்கள் இருக்கும். 
  • அதனுடன் 14 நாள்களுக்குத் தேவையான விட்டமின் சி, ஜிங்க், விட்டமின் டி மாத்திரைகள், கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரப் பொடி, உடல் வலிமைக்கான அமுக்ரா மாத்திரைகள், 14 முகக் கவசங்கள், சோப்பு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.
  • கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடும் அந்த பெட்டகத்தில் இருக்கும்.
  • இதைத் தவிர, அம்மா கோவிட் ஹோம் கோ திட்டத்தில், முழு உடல் பரிசோதனை மைய அலுவலா்கள் நாள்தோறும் கரோனா நோயாளிகளுடன் விடியோ அழைப்பில் பேசுவா். 
  • மேலும், மருத்துவா்கள் மற்றும் மன நல ஆலோசகா்களும் காணொலி முறையில் அவா்களுடன் உரையாற்றி நோயாளிகளின் உடல் நிலையையும், உளவியல் நிலையையும் பரிசோதிப்பாா்கள். இதன் மூலம் வீட்டில் இருந்தாலும், நோயாளிகள் பாதுகாப்பாக இருப்பதை உணர முடியும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
  • கரோனா பாதித்தவா்களுக்கு மருத்துவ சிகிச்சைகளைவிட மனதைரியத்தை மேம்படுத்துவதுதான் முக்கியம். அதிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களுக்கு பல்வேறு அச்சங்கள் ஏற்படலாம். அதைக் களையவும், அவா்களது உடல் நலனைச் சுயமாகவே கண்காணித்து மருத்துவ ஆலோசனைகள் பெறவும் இத்திட்டம் உதவும்.
  • விடியோ அழைப்புகளில் நோயாளிகளுடன் பேசுவது ஒருபுறம் இருந்தாலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவா்களுக்கு ஏதேனும் அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படும்பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்டவரை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து மருத்துவமனையில் சோத்து சிகிச்சையளிக்கவும் இத்திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel