Type Here to Get Search Results !

7th JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

அரியலூரில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.347 கோடியில் கட்டிடம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
  • அரியலூர் மாவட்டம் அரியலூர் தெற்கு கிராமத்தில் 27 ஏக்கர் பரப்பில் கட்டப்படவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். 
  • இப்புதிய அரசு மருத்துவக் கல்லூரி நிறுவ, ரூ.347 கோடி அனுமதித்து நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக தமிழக அரசால் ரூ.100 கோடியும், மத்திய அரசால் ரூ.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • இம்மருத்துவக் கல்லூரி 150 எம்பிபிஎஸ் இடங்களுடன் நிறுவப்படுகிறது. மேலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ.89 கோடியே 75 லட்சம் மதிப்பில் மருத்துவக் கருவிகளை மருத்துவமனைகளின் பயன்பாட்டுக்காக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
கிருமிநாசினி தெளிக்க 50 புதிய வாகனங்கள்: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்
  • கரோனா தடுப்புப் பணிகளுக்காக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்காக ரூ.3.90 கோடி மதிப்பில் 50 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தண்ணீா் போன்று பீச்சி அடிக்கப்படும். 
  • கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் முடிந்த பிறகு, இந்த வாகனங்கள் சென்னையின் குறுகிய சாலைகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் இதர கட்டடங்களில் ஏற்படும் தீயினை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும்.
கீழடி அகழாய்வில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுப்பு
  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி உள்ளிட்ட 4 இடங்களில் நடந்து வருகிறது. கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் 4 குழிகள் தோண்டப்பட்டு 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. 
  • கடந்த மாதம் 19ம் தேதி ஒரு குழந்தையின் முழு அளவிலான எலும்புக்கூடு கண்டறியப்பட்ட நிலையில், நேற்று நடந்த அகழாய்வில், மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு முழு அளவில் கிடைத்துள்ளது. இந்த எலும்புக்கூட்டினை மரபணு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்காக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்துக்கு அனுப்ப உள்ளனர்.
ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
  • ஆசியாவின் மிக பெரியதும் உலகின் இரண்டாவது பெரியதுமான டேட்டா மையம் துவக்கப்பட்டுள்ளது. மும்பை பன்வெல் பகுதியில் தனியார் நிறுவனமான ஹிராந்தனி குழுமத்தின் சார்பில் இந்த டேட்டா மையம் துவக்கப்பட்டு உள்ளது. 
  • யோட்டா என்எம் 1 என பெயரிடப்பட்டுள்ள இந்த மையம் 210 மெகாவாட் திறன் கொண்டது. இந்த மையத்தை மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். 
கிண்டியில் 750 படுக்கைகள், நவீன வசதிகளுடன் கோவிட் மருத்துவமனை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கிண்டி கிங் நோய்த்தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 750 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு கரோனா மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.
  • அதனடிப்படையில் கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கரோனா மருத்துவமனை ரூபாய் 136.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இது 750 படுக்கை வசதிகளுடன் கூடிய அடித்தளம், தரைதளம், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல்
  • ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் நிறுவனத்தை தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்களில், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குதான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நம் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் சட்டம் இருப்பதாக தெரியவில்லை. 
  • இந்த நிலையில், தனியார் நிறுவனங்களின வேலைவாய்ப்பில் சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 75 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட வகைச் செய்யும் சட்டத்திருத்துக்கு ஹரியானா மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
முதன் முறையாக கொரோனா நோயாளிகளுக்கான பிளாஸ்மா வங்கியை திறந்த மேற்கு வங்கம்
  • முதன் முறையாக மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான பிளாஸ்மா வாங்கி அமைக்கப்பட்டுள்ளது.
  • 15க்கும் மேற்பட்ட கொரோனாவை வென்ற நோயாளிகள் தங்களது பிளாஸ்மாவையும் அளிக்க முன்வந்துள்ளானராம்.
தமிழகத்திலேயே முதன்முறையாக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெருங்கற்கால உருளை வடிவ ஈமச்சின்ன கல் கண்டுபிடிக்கப்பட்டது
  • தமிழகத்திலேயே முதன்முறையாக உருளை வடிவ ஈமச்சின்ன கல்லும் கண்டுபிடிக்கப்பட்டது. அக்காலத்தில் இறந்தவர்களை புதைத்தபின்பு கல் வட்டங்கள் வைப்பது வழக்கம். மேலும் முக்கியமானவர்களுக்கு மட்டும் புதைத்த இடத்தை அடையாளப்படுத்துவதற்காக ஈமச்சின்ன கல் வைக்கப்பட்டுள்ளது.
  • இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமச்சின்ன கற்கள் அனைத்தும் சீரற்ற வடிவத்திலேயே இருந்தன. ஆனால் புரசடைஉடைப்பில் ஒரே ஒரு ஈமச்சின்ன கல் மட்டும் உருளை வடிவில் உள்ளது. இந்த கல் 235 செ.மீ. உயரமும், 100 செ.மீ., விட்டமும் கொண்டது. பூமிக்கு வெளியே 55 செ.மீ. தெரிகிறது.
  • இந்தக் கல்லை நினைவுச் சடங்குகள் நடத்த பயன்படுத்தி இருக்கலாம். மேலும் அக்காலத்தில் முக்கியத்துவம் மிகுந்த நபருக்காக இந்த கல்லை வைத்திருக்கலாம். இதுபோன்ற ஒழுங்கு முறையான ஈமச்சின்ன கல்லை இதுவரை தமிழகத்தில் வேறு எங்கும் கண்டுபிடிக்கவில்லை, என்று தெரிவித்தனர்.
'Saksham' மொபைல் ஆப்
  • இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் 'Saksham' என்ற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியது. சுகாதார அமைச்சின் நாகேந்திர நாத் சின்ஹா இந்த ஆப்பை வெளியிட்டுள்ளார். 
  • இந்த மொபைல் ஆப்பின் மூலம், வீடியோ கான்பரன்சிங் மற்றும் நிதி விழிப்புணர்வு மூலம் சுய உதவிக்குழுக்களை வங்கிகளுடன் இணைக்க முடியும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel