Type Here to Get Search Results !

31th JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


சர்வதேச நட்பு தினம் (International Day of Friendship) - ஜூலை 30 
  • நபர்கள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் (World Day against Trafficking in Persons) - ஜூலை 30, 2020 நபர்கள் கடத்தலுக்கு எதிரான உலக தின மையக்கருத்து: “Committed to the Cause: Working on the Frontline to End Human Trafficking”.
தமிழ்நாடு மருத்துவமனை தினம் - ஜூலை 30
  • இந்தியாவின் முதல் பெண் டாக்டரான முத்துலட்சுமி அவர்களின் பிறந்த நாளான ஜூலை 30-அன்று, மருத்துவமனை தினமாக தமிழ்நாடு அரசால் 2019-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. 
இலங்கையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ இந்தியா திட்டம்
  • சர்வதேச சூரிய கூட்டணி (ISA), இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான NTPC உடன் இணைந்து, இலங்கையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் "பெல்ட் அண்ட் ரோடு" முயற்சிக்கெதிரான இந்தியாவினஅ நாடுகளை ஈர்க்கும் முயற்சி இதுவாகும்.
  • சர்வதேச சூரிய கூட்டணி (ஐஎஸ்ஏ) அமைப்பின் தலைமையகம் ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் அமைந்துள்ளது.
மாலத்தீவில் இந்திய நிதியுதவியுடன் "உயர் தாக்க சமூக அபிவிருத்தி திட்டங்கள்"
  • இந்திய அரசின் 5.6 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மானியத்தின் கீழ் "9 மேம்பாட்டுத் திட்டங்கள்" (HICDP) மாலத்தீவுகள் நாட்டில் ஜூலை 28-அன்று தொடங்கப்பட்டன
  • அட்டு சிட்டியின் மாவட்டங்களில் கெய்தோஷு மாஸ் ஆலை மீன் பதப்படுத்தும் ஆலை மற்றும் சுற்றுலா மண்டலங்கள் பாட்டில் நீர் ஆலை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
  • HICDP: High Impact Community Development Projects.
இந்தியா-ஜிம்பாப்வே "பாரம்பரிய, ஹோமியோபதி மருத்துவ" ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜூலை 29-அன்று நடந்த மத்திய அமைச்சரவை, பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவிற்கும் ஜிம்பாப்வேவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மை அடிப்படையில் இரு நாடுகளுக்கு இடையே பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதியை மேம்படுத்துவதாகும்.
புதிய கல்விக் கொள்கை - மத்திய அமைச்சரவை ஒப்புதல் 
  • இந்தியாவில் கடந்த 1986-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கையில் (National Policy on Education 1986), பின்னர் 1992-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது.
  • மறைந்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட "புதிய கல்விக் கொள்கையின் பரிணாமக் குழு" (T.S.R. Subramanian Committee), 2016 மே மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், அமைச்சகம் 2016-ஆம் ஆண்டு வரைவு தேசிய கல்வி கொள்கைக்கு சில உள்ளீடுகளை தயாரித்தது. 
  • இதனைத் தொடர்ந்து, புதிய கல்வி கொள்கை உருவாக்குவதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு (Dr K. Kasturirangan Committee) ஒன்று 2017-இல் அமைக்கப்பட்டது. இந்த குழு புதிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை தயாரித்து, 2020 மே 31-ந் தேதி மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்கிரியாலிடம் வழங்கியது. இந்த குழு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 1-ல் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வெளியிட்டது.
  • புதிய கல்விக் கொள்கை 2020-க்கு (National Education Policy), பிரதமர் மோடி தலைமையில் 2020 ஜூலை 29-அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய விவரங்கள்:
  • இனி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் மாற்றப்பட்டு, மத்திய கல்வித்துறை அமைச்சகம் (MHRD as Ministry of Education-MoE). என்று அழைக்கப்பட உள்ளது.
  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) மதிப்பில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படும்
  • தற்போது 8-ம் வகுப்பு வரை உள்ள இலவச கட்டாயக் கல்வி திட்டம் 12-ம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுகிறது.
  • 2030-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை 
  • 15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.
  • எம்.பில் படிப்புகள் நிறுத்தபடுகிறது.
  • தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படுகிறது.
  • நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவிகிதத்தை கல்விக்கு ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
  • 5+3+3+4 என்ற முறையில் பள்ளி வகுப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கப்படும். பள்ளிக்கு வராமல் இருக்கும் 2 கோடி குழந்தைகள் 2020-ம் ஆண்டுக்குள் பள்ளியில் சேர்க்க புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது.
  • மருத்துவம், சட்டம் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர்கல்வியையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும்.
  • தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும். தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பு (என்.இ.டி.எப்.) உருவாக்கப்படும்.
  • உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio) 2030-க்குள் 50% ஆக உயர்த்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2018-ல் 26.8% ஆக இருந்தது.
'எனது அரசு' திட்டம் - ஆறு ஆண்டுகள் நிறைவு
  • அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்து, அரசு நிர்வாகப் பணிகள் மற்றும் கொள்கை விவாகரங்களில் மக்களையும் பங்கேற்கச் செய்யும் வகையில் 'எனது அரசு' திட்டத்தை 2014ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்தது. 
  • அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் பல்வேறு தீா்மானங்களை நிறைவேற்றுவதில் 'எனது அரசு' திட்டம் முக்கியப் பங்காற்றி வருகிறது.
  • இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2020 ஜூலை 26 அன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவுபெற்றது.  
BIS-Care செல்போன் செயலி - அறிமுகம்
  • ஐ.எஸ்.ஐ மற்றும் ஹால்மார்க் தர சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், ‘பிஐஎஸ்-கேர்’ (BIS-Care App) என்ற செல்போன் செயலி பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார்
  • நுகர்வோருக்காக தரநிலைப்படுத்தல், இணக்க மதிப்பீடு மற்றும் பயிற்சிக்கான மூன்றஉ e-BIS இணையதளங்களை (www.manakonline.in) தொடங்கிவைத்தார்.
44 புதிய "வந்தே பாரத்" எக்ஸ்பிரஸை இரயில்கள் 
  • இந்தியாவின் முதல் அதிவேக ரெயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை, கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த இரயிலின் வெற்றிகாரமான பயணத்தை தொடர்ந்து, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 44 புதிய "வந்தே பாரத்" எக்ஸ்பிரஸை இரயில்களை அறிமுகப்படுத்த ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இடம் பெறும் கல்வான் வீரர்களின் பெயர்கள்
  • இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்னை காரணமாக கிழக்கு லடாக் பகுதி.யில் உள்ள கல்வானில் 2020 ஜூன் 15 ந்தேதி இந்திய-சீன நாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள்  20 பேர் வீரமரணம் எய்தினர். வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் டெல்லியில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் "இந்தோ-இஸ்லாமிய கலாசார பவுண்டேசன்" அறக்கட்டளை அமைப்பு
  • அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், மசூதி கட்டுவதற்காக அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்கி தருமாறு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அயோத்தியில் தானிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கியது.
  • தற்பொது அந்த இடத்தில் மசூதி கட்டும் பணியை மேற்பார்வையிட சன்னி வக்பு வாரியம் "இந்தோ-இஸ்லாமிய கலாசார பவுண்டேசன்" என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை அமைத்துள்ளது என இந்த வாரியத்தின் தலைவர் சுபர் அகமது பரூக்கி ஜூலை 30-அன்று அறிவித்தார்.
மாவட்டங்களுக்கான "டெல்டா தரவரிசை" பிப்ரவரி-ஜூன் 2020 - பிஜப்பூர் முதலிடம்
  • நிதி ஆயோக் அமைப்பின் மாவட்டங்களுக்கான அபிலாஷை திட்டத்தின் 2020 பிப்ரவரி-ஜூன் மாதம் வரையிலான டெல்டா தரவரிசையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் முதலிடம் பெற்றுள்ளது
  • ரி-போய் (மேகாலயா) மற்றும் பஹ்ரைச் (உத்தரபிரதேசம்) ஆகியவை முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை வகிக்கின்றன.
  • 2018 ஜனவரியில் தொடங்கப்பட்ட அபிலாஷை மாவட்டங்கள் திட்டம், முக்கிய சமூக பகுதிகளில் ஒப்பீட்டளவில் குறைந்த முன்னேற்றம் பெற்றுள்ள மாவட்டங்களை வளர்ச்சி பெற்றவையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
  • சுகாதாரம்-ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை-நீர்வளம், நிதி உள்ளடக்கம்-திறன் மேம்பாடு மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு ஆகிய ஐந்து வளர்ச்சி பகுதிகளில் அதிகரிக்கும் முன்னேற்றத்தைக் கொண்டு அபிலாஷை மாவட்டங்களுக்கான டெல்டா தரவரிசை (Delta ranking of Aspirational districts) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரெயில்வே இணையப் பாதுகாப்பு மையம் - திறப்பு
  • இணையப் பயணச் சீட்டில் வரும் மோசடிகளை விரைவாக கண்டறிந்து விசாரிப்பதை உறுதி செய்வதற்காக புவனேஷ்வர் நகரில் உள்ள கிழக்கு கடற்கரை ரயில்வே தலைமையகத்தில் இணையப் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டது. வெள்ளை காலர் குற்றங்களை சிறப்பாகக் கண்டறிந்து வழக்குத் தொடர இணையப் பாதுகாப்பு மையம் உதவும்.
ஆந்திராவில் பிளாஸ்மா தானம் - ரூ.5,000 ஊக்கத் தொகை
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரானா தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஓபிசி கிரீமி லேயர் - ரூ.15 லட்சமாக உயர்த்த பரிந்துரை
  • இதர பிற்படுத்தப்பட்டோரில் மேல்நிலையினருக்கு (OBC Non-Creamy Layer) இடஒதுக்கீடு வழங்க, அவர்களது வருமான வரம்பை ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது.
  • சதானந்தன் ஆணையம்: சமூக ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 
  • இப்பிரிவில் வசதியானவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்து உருவானதன் அடிப்படையில் 1971-இல் சதானந்தன் ஆணையம் பொருளாதார ரீதியாக வசதியாக உள்ளவர்களை மேல்நிலையினராக (கிரீமி லேயர்) வகைப்படுத்தி, அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டியதில்லை என்று ஆணையம் பரிந்துரைத்தது. அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றமும் 1993-இல் இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தது. 
  • ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வருமானம் உள்ள இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டுச் சலுகைகள் நிறுத்தப்பட்டன. 
  • இந்த வருமான வரம்பு 2013-இல் ரூ. 6 லட்சமாகவும், 2017-இல் ரூ. 8 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
மிசோரமில் கிரீன்-ஏஜி திட்டம் - தொடக்கம்
  • உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி அமைப்பின் (Global Environment Facility), நிதியளிக்கும் திட்டமான பசுமை-வேளாண்மை (Green-Ag), இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் ஜூலை 29-அன்று தொடங்கப்பட்டது. 
  • இந்த திட்டம், மிசோரம் உள்ளிட்ட மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. 
  • கிரீன்-ஏஜ் திட்டங்கள் (Green-Agriculture), கிரீன்லாண்ட் மேலாண்மை நடைமுறைகள், பல்லுயிர் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் இந்திய வேளாண் துறையை தேசிய மற்றும் சர்வதேச நன்மைகளை பெறுவதை நோக்கமாகக் கொண்டது.  
  • இந்த திட்டம் கிரீன்-ஏஜ் விவசாய நடைமுறைகள் மூலம் 49 மில்லியன் கார்பன் டை ஆக்சைடு சமமான நிலை (CO2eq) குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
குவஹாத்தி நகரில் "பாண்டிகூட்" தானியங்கி கழிவுநீர் சுத்தம் செய்யும் சாதனம் 
  • அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரின் முதல் மேன்ஹோல் துப்புரவு ரோபோவான “பாண்டிகூட்”(BANDICOOT) என்ற தானியங்கி கழிவுநீர் சுத்தம் செய்யும் சாதனம் ஜூலை 28-அன்று தொடங்கி வைக்கப்பட்டது. வடகிழக்கு பிராந்தியத்தில் மேன்ஹோல் துப்புரவு ரோபோவைப் பெற்ற முதல் நகரமாக குவாஹாட்டி விளங்குகிறது.
இந்தியா வந்தடைந்த "இரஃபேல் போர் விமானங்கள்" 
  • இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம்  (Dassault Aviation) இருந்து, 36 இரஃபேல் போர் விமானங்களை (Rafael Jets) வாங்க ரூ.60,000 கோடியில் மத்திய அரசு 2016-ல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, முதற்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் 2020 ஜூலை 29-அன்று இந்தியா வந்தடைந்தன.
  • பிரான்ஸின் போர்டியாக்ஸ் நகரிலுள்ள டசால்ட் விமானத் தளத்திலிருந்து குரூப் கேப்டன் ஹர்கிரத்சிங் தலைமையில் இந்தியா நோக்கி 5 ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை 27-அன்று புறப்பட்டன, பயணத்தின் இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. 30 ஆயிரம் அடி உயரத்தில் அவை பறந்தபோது, நடுவானில் பிரான்ஸ் டேங்கர் விமானத்தில் இருந்து எரிபொருள் நிரப்பிக்கொண்டன.
  • ஜூலை 29-ஆம் தேதி ஹரியாணா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை (Ambala air base No. 17 Squadron) வந்தடைந்தன. 
  • விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா விமானங்களை பெற்றுக்கொண்டார். இவை தங்க அம்புகள் (Golden Arrows) பிரிவில் இணைக்கப்படுகின்றன.
  • 1997-ம் ஆண்டு ரஷ்யாவின் சுகோய் -30 ரக விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மற்றோரு வெளிநாட்டு போர் விமானமாக ரஃபேல் இந்திய விமானப்படையில் இணைந்தது
  • ரஃபேல் விமானத்தை முதலில் ஓட்டிய இந்திய விமானி காஷ்மீரை சேர்ந்த ஹிலால் அகமது ரதார் ஆவார்.
  • இரஃபேல்: தொழில்நுட்ப விவரக்குறிப்புகள்: இரஃபேல் ஒரு பல்-வகை திறன் கொண்ட போர் விமானம் ஆகும். எந்தவொரு தற்காப்பு மற்றும் திடீர் தாக்குகலை மேற்கொள்ளும் (Sortie Mission) நடத்தும் திறன் கொண்டது. அதாவது இடைமறிப்பு, வான்வழி உளவு, விமான மேலாதிக்கம், நெருங்கமாக வரும் விமானங்ரகளுக்கு ஆதரவு, தரை ஆதரவு, கப்பல் எதிர்ப்பு மற்றும் அணுசக்தி தடுப்பு பணிகள் ஆகும்.
  • எரிபொருள் திறன்: ஒற்றை இருக்கைக்கு 4,700 கிலோகிராம் மற்றும் இரட்டை இருக்கைக்கு கிலோகிராம் கிலோ. 
  • மேற்கொள்ளும் போர் வரம்பு: 1,850 கி.மீ.
  • அதிகபட்ச வேகம்: மாக் 1.8 (மாக் எண் (Mach number) என்பது ஒரு விமானத்தின் வேகத்தின் ஒலியின் வேகத்தின் விகிதம்).
  • இவை நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவை. இரண்டு என்ஜின்கள் மூலம் இயங்கும் தன்மை கொண்டது. மணிக்கு அதிகபட்சமாக 2222 கிலோ மீட்டர் வேகத்தில் 50 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. 10.3 மீட்டர் நீளம் கொண்ட இந்த விமானம், அதிகபட்சமாக 24,500 கிலோ எடை கொண்டது. 9500 கிலோ எடை வரை ஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது.
  • பல்முனைத் தன்மை கொண்ட ரேடார் வசதி இருப்பதால் 100 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரே நேரத்தில் 40 இலக்குகளை கண்டறிந்து தாக்க இயலும். 600 கிலோ மீட்டர் தூரம் தாக்க வள்ளது.
  • பிரான்ஸ்,எகிப்து, கத்தார் ஆகியவற்றை தொடர்ந்து ரபேலை வைத்துள்ள 4 ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 
செவ்வாய் கிரக ஆய்விற்கான "பிரிசெர்வென்ஸ்" விண்கலம்
  • அமெரிக்காவின் NASA விண்வெளி நிறுவனம், புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கானவேரல் ஏவுதளத்தில் இருந்து செவ்வாய் கிரக ஆய்விற்கான "பிரிசெர்வென்ஸ்" என்று பெயரிடப்பட்டுள்ள விண்கலத்தை அட்லாஸ் 5 என்ற ராக்கெட் மூலம் ஏவி உள்ளது.
  • இந்த மாதம் செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதால், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவும் தனது விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தி உள்ளது.
  • விண்கலத்துடன், 6 சக்கர வாகனமும், சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்திற்கு  அனுப்பப்பட்டுள்ளது. 2021 பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை இது சென்றடையும். இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை 687 நாட்கள் வரை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதுடன் மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வர உள்ளது.
குஸ்டாவ் ட்ரூவ் விருது - இந்தியாவின் முதல் சூரிய சக்தி மின்படகு "ஆதித்யா"
  • ஜூலை 26, 2020 அன்று, பிளக்க்போட்ஸ்.காம் இணையதளத்தின் முதலாவது  குஸ்டாவ் ட்ரூவ் விருது (Gustave Trouvé Award) எனப்படும் ‘குஸ்ஸீஸ்’ மின்சார படகுகள் விருது, இந்தியாவின் முதல் மற்றும் மிகப் பெரிய சூரிய சக்தி படகான "ஆதித்யா"விற்கு (Aditya) வழங்கப்பட்டுள்ளது.
  • கொச்சி கடற்படை தளத்தால் கட்டப்பட்ட ஆதித்யா மின்படகு (India’s First Solar Powered Ferry Bags), கேரள மாநில நீர் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்குகிறது.
சிங்கப்பூரின் முதலாவது எதிர்க்கட்சி தலைவர் "பிரீத்தம் சிங்"
  • சிங்கப்பூர் நாட்டு பாராளுமன்ற வரலாற்றில், முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர் ஜூலை 28-அன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த, வழக்கறிஞர் பிரீத்தம் சிங் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், ஜூலை 10-அன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்று ஜூலை 27-அன்று ஆட்சி அமைத்தது. 
  • இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், வழக்கறிஞருமான பிரீத்தம் சிங்  (வயது 43) பொதுச்செயலராக உள்ள தொழிலாளர் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக மாறியது. 
  • சிங்கப்பூர் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் பார்லி., விவகாரங்கள் குறித்த வழிகாட்டுதல்களில், எதிர்கட்சி தலைவர் நியமனம் குறித்த நிலைப்பாடு ஏதும் இல்லை.
சுற்றுச்சூழல் விதிகள் நிபுணர் மதிப்பீட்டுக்குழு உறுப்பினராக "அனில் குமார் ஜா" நியமனம்
  • சுற்றுச்சூழல் விதிகளை மீறுவது குறித்து கையாளும் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் (EAC) உறுப்பினராக கோல் இந்தியா லிமிடெட்  முன்னாள் தலைவர் அனில் குமார் ஜா அவர்களை அரசாங்கம் ஜூலை 28-அன்று நியமித்துள்ளது.
  • EAC: Expert Appraisal Committee.
டெல்லியில் நைட்ரஜன் டையாக்சைடு 70% குறைவு
  • கொரானா பரவலை தடுக்க பிறப்பித்த ஊரடங்கால், டில்லியில், காற்றில் உள்ள மாசு வாயுவான, நைட்ரஜன் டையாக்சைடு (nitrogen dioxide), 70 சதவீதம் குறைந்துள்ளது. இதை தக்க வைக்கும் கொள்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என, ஐ.நா., வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகளை பாதி்க்கும் ஈய உலோகப் பயன்பாட்டு - யுனிசெஃப் அறிக்கை
  • சர்வதேச இலாப நோக்கற்ற அமைப்பான தூய பூமி அமைப்பு (Pure Earth), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் ஆகியவை ஈய உலோகப் பயன்பாட்டால் ஏற்படும் நச்சு, உலகம் முழுவதும் ஏராளமான குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது என்ற சுகாதார நெருக்கடி குறித்த முதல் வகை  அறிக்கையை ஜூலை 30-அன்று, வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, "நச்சு உண்மை: ஈய மாசுபாடு குழந்தைகளின் எதிர்கால தலைமுறையின் வெளிப்பாட்டு சாத்தியக்கூறகளை  குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" (The Toxic Truth: Children’s Exposure to Lead Pollution Undermines a Generation of Future Potential) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
பாடி பவஜலலு - எஸ். ஜெய்பால் ரெட்டி
  • எம் வெங்கய்ய நாயுடு கிட்டத்தட்ட வெளியிடப்பட்டது, மறைந்த எஸ் ஜெய்பால் ரெட்டியின் பத்து யோசனைகள் புத்தகத்தின் தெலுங்கு பதிப்பு "பாடி பவஜலலு"  
  • (Padi Bhavajaalalu) என்ற பெயரிலான புத்தகத்தை, ஜூலை 28, 2020 அன்று, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு மெய்நிகர் தளம் மூலம்  வெளியிட்டார்,  
"ஈழுவா, தீயா" வகுப்பினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு
  • தமிழ்நாடு முழுதும் வாழும், 'ஈழுவா, தீயா' வகுப்பினரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான ஆணைகளை, தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
விஸ்டன் கோப்பை 2020 - "இங்கிலாந்து அணி" சாம்பியன்
  • இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையே இங்கிலாந்தில் நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என வெற்றி பெற்று இங்கிலாந்து அணி விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றியது
  • இந்த போட்டித்தொடர் இடையே, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் தனது 140-வது டெஸ்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலகின் 7-வது பந்து வீச்சாளர் என்ற சிறப்பைப் பெற்றார்.
எழுத்தாளர் "சா.கந்தசாமி" - காலமானார் 
  • தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் சா. காந்தசாமி (வயது 80) ஜூலை 31-அன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவர், 
  • 1940-ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தார். 1968-ல் வெளியான “சாயாவனம்” நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு சா.கந்தசாமி அறிமுகமானார். இந்த நாவலை தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. 
  • 1998ல் விசாரணைக் கமிசன் என்ற நாவலுக்காக, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. மேலும் இவர் எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
சென்ட்ரல், கோயம்பேடு மெட்ரோவுக்கு எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா பெயா்; ஆலந்தூருக்கு அண்ணா பெயா்:முதல்வா் பழனிசாமி உத்தரவு
  • சென்னையின் பிரதான மெட்ரோ ரயில் நிலையங்களான சென்ட்ரல், கோயம்பேடு மற்றும் ஆலந்தூருக்கு முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் பெயா்கள் சூட்டப்பட்டுள்ளன. 
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில் ஆலந்தூா், சென்ட்ரல், புகா் பேருந்து நிலைய மெட்ரோ நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், பயணிகள் அதிகளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. இந்த மெட்ரோ நிலையங்களுக்கு முன்னாள் முதல்வா்கள் அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் பெயா்களைச் சூட்டலாம் என உயா்நிலைக் குழு பரிந்துரை செய்தது.
  • இதேபோன்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, புரட்சித்தலைவா் டாக்டா் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயா் வைத்ததைப் போன்று, சென்ட்ரல் மெட்ரோ என்பது புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ என அழைக்கப்படும்.
தமிழகத்தில் ரூ.280 கோடியில் புதிய திட்டங்கள் முதல்வா் பழனிசாமி அடிக்கல்
  • தடுப்பணைகள், கால்வாய் சீரமைப்பு என ரூ.280 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. 
  • கடலூா் மாவட்டம் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட உள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீா் செறிவூட்டப்பட்டு, அதன் மட்டம் வெகுவாக உயரும். இதனால், விவசாய உற்பத்தி அதிகரிப்பதோடு குடிநீரின் தரமும் அதிகரிக்கும். இந்தத் திட்டத்தால் அந்தப் பகுதியிலுள்ள 728 ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 2 ஆயிரத்து 912 ஏக்கா் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
  • இதேபோன்று, நெல்லை மாவட்டம் நம்பியாற்றின் குறுக்கே தடுப்பணை, ஈரோடு அரக்கன்கோட்டை கால்வாய் சீரமைப்பு, திண்டுக்கல் மாவட்டம் காட்டுப் பெரியகுளம் அணைக்கட்டு, நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை, புதுக்கோட்டை பேராம்பூா்வாரியின் குறுக்கே அணைக்கட்டு, திருவாரூா் திருக்கண்ணமங்கை வாய்க்கால் புனரமைப்பு, விருதுநகா் அா்ஜூனா நதியின் குறுக்கே தடுப்பணை, கோவை மாவட்டம் பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் மறுசீரமைப்புப் பணி ஆகியவற்றையும் முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கினாா். இந்தத் திட்டப் பணிகளின் மொத்த மதிப்பு ரூ.280.90 கோடியாகும். இந்த நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
உள்நாட்டு தயாரிப்பு பொருள்களை வாங்க காதியுடன் ஐடிபிபி ஒப்பந்தம்
  • இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்பு காவல்(ஐடிபிபி) படையினருக்கு விநியோகிப்பதற்காக நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குவதற்கு காதி கிராம தொழிற்சாலை ஆணையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 1.73 கோடி மதிப்பிலான 1,200 குவிண்டால் கடுகு எண்ணெய் உள்பட ஆடை, கைத்துண்டுகள், போா்வைகள் ஆகிய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருள்களை காதி ஆணையம் ஐடிபிபிக்கு அளிக்கும் என்றும் இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் ஐடிபிபி செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.
  • உள்நாட்டு தயாரிப்பு பொருள்களை வாங்க துணை ராணுவப் படைப்பிரிவில் ஐடிபிபி-தான் முதல் முறையாக காதி ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
காந்தி - மார்டின் லூதர் கிங் ஜூனியர் மசோதா
  • மகாத்மா காந்தி, மார்டின் லுாதர் கிங் ஜூனியர் ஆகியோரின் கொள்கைகள், சித்தாந்தங்கள் ஆகியவற்றை பரப்புவதற்கான மசோதாவுக்கு, அமெரிக்க வெளியுறவு விவகாரங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியா - அமெரிக்கா இடையே, மகாத்மா காந்தி, மார்டின் லுாதர் கிங் ஜூனியர் ஆகியோரின் கொள்கைகள், செயல்பாடுகள் குறித்து பரஸ்பர ஆய்வு செய்ய, காந்தி - கிங் பரிவர்த்தனை சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவில் 3 தலைநகரங்கள்: கவர்னர் ஒப்புதல்
  • ஆந்திராவில் தற்போது அமராவதி தலைநகரமாக விளங்குகிறது.  இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றதும், ஆந்திராவில் 3 தலைநகரங்கள் இருக்கும் என்று அறிவித்தார். 
  • அதன்படி, அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும் (தலைமைச் செயலகம்), கர்னூலை நீதித்துறைத் தலைநகராகவும் (உயர் நீதிமன்றம்) உருவாக்கி, மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களும் சம வளர்ச்சி அடைவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்தார்.
  • இந்நிலையில், இந்த மூன்று தலைநகர் மசோதா சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. தற்போது ஆந்திர மாநில கவர்னர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து 3 தலைநகர் நிர்வாகப் பணிகளை இனி ஆந்திர அரசு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய விளையாட்டு விருதுகள் தேர்வுக்குழுவில் விரேந்திர சேவாக்
  • இந்திய ஹாக்கியின் லெஜண்ட் தயான் சந்த் பிறந்த தினமான ஆகஸ்ட் 29ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு இந்த விளையாட்டு விருதுகளுக்காக விளையாட்டுத் துறை அமைச்சர் 12 உறுப்பினர் தேர்வுக்குழுவை நியமித்துள்ளது.
  • இந்தக் குழுவில் இந்திய முன்னாள் தொடக்க வீரரும் இரண்டு முச்சத நாயகனுமான விரேந்திர சேவாக் சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் ஹாக்கி வீரர் சர்தார் சிங்கும் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
  • இந்தத் தேர்வுக்குழுவுக்குத் தலைமை வகிப்பவர் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா. இந்தக் குழுவில் பாராலிம்பிக் வெள்ளி வீராங்கனை தீபா மாலிக்கும் இடம்பெற்றுள்ளார்.
  • பல கமிட்டிகளை அமைத்தால் சர்ச்சைகள் ஏற்படுகிறது என்பதற்காக ஒரே தேர்வுக்குழுவை நியமித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இந்தக் குழுவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு முன்னாள் வீரர் மோனாலிசா பருவா மேத்தா, குத்துச் சண்டை வீரர் வெங்கடேசன் தேவராஜன், விளையாட்டு வர்ணனையாளர் மணீஷ் படாவியா, பத்திரிகையாளர் அலோக் சின்ஹா, மற்றும் நீரு பாட்டியா ஆகியோர் உள்ளனர்.
  • விளையாட்டுத்துறை அமைச்சகத்திலிருந்தும் இந்தக் குழுவில் பிரதிநிதித்துவம் இருக்கிறது. இந்திய விளையாட்டு ஆணையம் தலைமை இயக்குநர் சந்தீப் பிரதான். ஸ்போர்ட்ஸ் டெவெலப்மெண்ட் இணைச் செயலர் எல்.எஸ்.சிங், டார்கெட் ஒலிம்பிக் போடியம் சி.இ.ஓ. ராஜேஷ் ராஜகோபாலன் ஆகியோர் உள்ளனர்.
பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட செயலாளராக ஹார்டிக் சதீஷ்சந்திர ஷா நியமனம்
  • பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹார்டிக் சதீசந்திர ஷா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு பிரதமர் அலுவலகத்தின் துணை செயலாளராக இருந்தார். 
  • ஹார்டிக் சதீஷ்சந்திர ஷா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி, கடந்த 2017 ஆம் சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் டேவின் தனிப்பட்ட செயலாளராக இருந்தார். 
  • பின்னர், கடந்த ஆண்டு பிரதமர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 31, 2020
  • தேசிய விளையாட்டு விருதுகள் 2020 க்கான விளையாட்டுக் குழுவை மையம் கொண்டு வருகிறது-2020 ஆம் ஆண்டிற்கான பல்வேறு விளையாட்டு விருதுகளுக்கான விருதுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் குழுவை மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெள்ளிக்கிழமை கொண்டு வந்தது.
  • 6 வது பிரிக்ஸ் சுற்றுச்சூழல் கூட்டம் ரஷ்யாவில் நடைபெற்றது
  • துருவ கரடிகள் 2100 க்குள் அழிவின் விளிம்பில் உள்ளன
  • அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான பேஸ்புக் மற்றும் கூகிள் செய்தி வெளியீட்டாளர்களுக்கு பணம் செலுத்துமாறு ஆஸ்திரேலியா கட்டாயப்படுத்தியது
  • மொரீஷியஸின் உச்ச நீதிமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  • சர்வதேச நட்பு தினம்
  • வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை அரசு நீட்டிக்கிறது
  • COVID-19 தணிப்புத் தொகுப்பிற்கான CSIR தொழில்நுட்பங்கள்
  • இந்தியாவின் COVID-19 மறுமொழியில் இந்தியா-ஐ.நா. அபிவிருத்தி கூட்டு நிதியத்தின் பங்கு
  • ஆரவல்லி பிராந்தியத்தில் வான்வழி விதைப்பு: முக்கிய உண்மைகள்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel