Type Here to Get Search Results !

சர்வதேச புலிகள் தினம் / International Tiger Day

 

TAMIL
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று உலகளாவிய புலிகள் தினமாக (Global/International Tiger Day) கொண்டாடப்படுகிறது. 2010-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட புலி பாதுகாப்பு தொடர்பான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தில் (Saint Petersburg Declaration) இந்த நாளைக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. 
  • புலிகள் பாதுகாப்புத் திட்டம் (1973) - இந்தியாவில் வாழும் புலிகளைப் பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973-ல் தொடங்கப்பட்டது. அப்போது 1,220 புலிகள் தான் இருந்தன. 
  • அரசு எடுத்த பல்வேறு சீரிய பாதுகாப்பு நடவடிக்கைகளால் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இந்தியாவில் தற்போது 2226-ஐ எட்டியுள்ளது. 
  • உலகில் மொத்த புலி எண்ணிக்கையில் 70% இந்தியா உள்ளது. தமிழ்நாட்டில் 4 புலிகள் காப்பகங்களில் 226 புலிகள் உள்ளன.
  • 2022-ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த ஆசிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. அதாவது, ஆண்டிற்கு 27 சதவீதம் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
  • புலிகளின் உடல் பாகங்கள் கடத்தல்: ஐக்கிய நாடுகள் சபையின் உலக வனவிலங்கு குற்ற அறிக்Tகை (UN Office on Drugs and Crime Repoit) புலிகளின் உடல் பாகங்களை மிகப் பெரிய அளவில் வழங்கும் நாடாக இந்தியா உள்ளதாக தெரிவித்துள்ளது. 
  • புலிகளின் உடல் பாகங்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவதில் 82 சதவீதம் இந்தியா மற்றும் தாய்லாந்து மூலமாக நடப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • நம் நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 200 முதல் 300 கோடி ரூபாய் செலவில், 52 புலிகள் சரணாலயங்கள் பராமரிக்கப்படுகின்றன.தமிழகத்தில் ஐந்து சரணாலயங்களில், 6,194.97 சதுர கி.மீ., புலிகளின் கோட்டையாக உள்ளது.
  • இத்தனை வசதிகள் இருந்தும், 10 ஆண்டுகளில் 1,059; கடந்த ஆண்டில், 127, இந்த ஆண்டில், 75 புலிகள் இறந்துள்ளன. வைகை, தென்னக நதிகளின் ஆதாரமான ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் சரணாலயம் நாட்டின், 51, தமிழகத்தின் ஐந்தாவது சரணாலயம்.
  • 'பாந்தெரா டைகிரிஸ்' என்ற புலியினத்தில் ஒரு வகை வங்காள புலி என்ற ராயல் பெங்கால் புலிகள். நாம் தற்போதுள்ள புலிகளை இந்த பெயரிலேயே அழைக்கிறோம்.
சர்வதேச புலி தினம் 2021 தீம்
  • Their Survival is in our hands” - "அவர்களின் பிழைப்பு எங்கள் கைகளில் உள்ளது"
சர்வதேச புலிகள் தினம் 2022 தீம்
  • 2022ஆம் ஆண்டு உலகப் புலிகள் தினத்தின் கருப்பொருள் “புலிகளின் எண்ணிக்கையை மீட்டெடுக்க இந்தியா திட்டம் புலிகளை அறிமுகப்படுத்துகிறது”. 
  • ஒரு புலியை தத்தெடுப்பது WWF மற்றும் அது செய்யும் வேலைகளுக்கு அதிசயங்களைச் செய்யலாம். 
  • புலிகளைப் பாதுகாப்பதற்கும், வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதற்கும் பிராந்திய மக்களுடன் ஒத்துழைக்கும் முயற்சிகளை இந்த அமைப்பு ஆதரிக்கிறது.
ENGLISH
  • Every year on July 29, Global Tiger Day (Global / International Tiger Day) is celebrated. It was decided to celebrate this day in the Saint Petersburg Declaration on Tiger Conservation, signed in 2010.
  • Tiger Protection Program (1973) - The Tiger Conservation Program was launched in 1973 to protect and increase the number of tigers living in India. There were only 1,220 tigers then.
  • The number of LTTE cadres in India has increased to 2226 due to various austerity measures taken by the government. India accounts for 70% of the world's tiger population. There are 226 tigers in 4 tiger reserves in Tamil Nadu.
  • Asian countries have decided to double the number of LTTE cadres by 2022. That is, it is planned to increase the number of tigers by 27 percent per year.
  • Tiger body parts smuggling: The UN Office on Drugs and Crime Repoit (UN Office on Drugs and Crime) says India is the largest supplier of LTTE body parts. The report states that 82 per cent of the LTTE's body parts are smuggled through India and Thailand.
  • In our country, 52 tiger sanctuaries are maintained at an average cost of 200 to 300 crore rupees per year. Out of the five sanctuaries in Tamil Nadu, 6,194.97 sq km is the tiger stronghold.
  • Despite all these facilities, 1,059 in 10 years; Last year, 127 and this year, 75 tigers have died. Srivilliputhur, the source of Vaigai, Southern rivers, Meghamalai Tiger Sanctuary is the fifth sanctuary in the country, 51, Tamil Nadu.
  • Royal Bengal tigers are a type of Bengal tiger in the 'Panthera tigris' species. We call the existing tigers by this name.
International Tiger Day 2021 theme
  • "Their survival is in our hands"
International Tiger Day 2022 theme
  • The theme for world tiger day 2022 “India launches Project Tiger to revive the tiger population”. 
  • Adopting a tiger might do wonders for the WWF and the work it does. The organization support initiatives that collaborate with regional people to safeguard tigers and take strong action against poaching and illegal trade.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel