சர்வதேச புலிகள் தினம் - ஜூலை 29-Global/International Tiger Day

 
  • ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29-அன்று உலகளாவிய புலிகள் தினமாக (Global/International Tiger Day) கொண்டாடப்படுகிறது. 2010-ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட புலி பாதுகாப்பு தொடர்பான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தில் (Saint Petersburg Declaration) இந்த நாளைக் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. 
  • புலிகள் பாதுகாப்புத் திட்டம் (1973): இந்தியாவில் வாழும் புலிகளைப் பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க புலிகள் பாதுகாப்புத் திட்டம் 1973-ல் தொடங்கப்பட்டது. அப்போது 1,220 புலிகள் தான் இருந்தன. 
  • அரசு எடுத்த பல்வேறு சீரிய பாதுகாப்பு நடவடிக்கைகளால் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இந்தியாவில் தற்போது 2226-ஐ எட்டியுள்ளது. 
  • உலகில் மொத்த புலி எண்ணிக்கையில் 70% இந்தியா உள்ளது. தமிழ்நாட்டில் 4 புலிகள் காப்பகங்களில் 226 புலிகள் உள்ளன.
  • 2022-ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த ஆசிய நாடுகள் முடிவெடுத்துள்ளன. அதாவது, ஆண்டிற்கு 27 சதவீதம் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
  • புலிகளின் உடல் பாகங்கள் கடத்தல்: ஐக்கிய நாடுகள் சபையின் உலக வனவிலங்கு குற்ற அறிக்கை (UN Office on Drugs and Crime Repoit) புலிகளின் உடல் பாகங்களை மிகப் பெரிய அளவில் வழங்கும் நாடாக இந்தியா உள்ளதாக தெரிவித்துள்ளது. புலிகளின் உடல் பாகங்கள் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படுவதில் 82 சதவீதம் இந்தியா மற்றும் தாய்லாந்து மூலமாக நடப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

0 Comments