Tuesday, 28 July 2020

27th JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


சென்னையில் ரூ.18 கோடியில் ஆரம்ப சுகாதார மையங்கள் திறப்பு, திருத்தணியில் ரூ.109 கோடியில் குடிநீர் மேம்பாட்டு திட்டம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
 • திருத்தணி நகராட்சியில் ரூ.109.68 கோடி மதிப்பிலான குடிநீர் மேம்பாட்டு திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சென்னையில் ரூ.18.24 கோடியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார மையக் கட்டிடங்கள், சிறப்பு காப்பகங்களையும் திறந்து வைத்தார்.
 • சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் மண்டலத்தில் திருவொற்றியூர் பிரதான சாலை, தண்டையார்பேட்டை மண்டலத்தில் வி.ஆர்.நகர், திரு.வி.க. நகர் மண்டலத்தில் புளியந்தோப்பு, ஜிகேஎம் காலனி, பெருங்குடி மண்டலத்தில் மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் ரூ.6.38 கோடி மதிப்பில் 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
 • மணலி விரைவு சாலையில் ரூ.9.70 கோடி மதிப்பில் 100 படுக்கைவசதிகள் கொண்ட நகர்ப்புற சமுதாய மையம், ராயபுரம் மண்டலத்தில் எழும்பூர், வேப்பேரி, என்எஸ்சி போஸ் சாலை ஆகிய இடங்களில் ரூ.2.16 கோடி மதிப்பில் 3 சிறப்பு காப்பகங்கள் என ரூ.18.24 கோடி மதிப்பிலான கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
 • சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 210சிறிய குளங்கள், ஏரிகள், நீரோடைகளில் உள்ள ஆகாயத் தாமரைகள்,மிதக்கும் கழிவுகளை அகற்றி கொசுஉற்பத்தியை தடுக்க மாநகராட்சி சார்பில் ரூ.1.69 கோடியில் மினி ஆம்ஃபிபியன் உபகரணம் வாங்கப்பட்டுள்ளது. 
 • 3.5 மீட்டருக்கும் குறைவான அகலம் உள்ள கால்வாய்களில் ஆகாயத் தாமரைகள், மிதக்கும் கழிவுகளை அகற்ற ரூ.6.49 கோடியில் ரோபோட்டிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் உபகரணம் வாங்கப்பட்டுள்ளது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆா்) ஜவாஹா்லால் நேரு விருது
 • ஐசிஏஆா் சாா்பில் கடந்த 1969ஆம் ஆண்டு முதல் வேளாண்மை அறிவியலில் சிறந்த முனைவா் பட்ட ஆராய்ச்சி அறிக்கைக்கு ஜவாஹா்லால் நேரு விருது வழங்கப்பட்டு வருகிறது. 
 • பயிா் அறிவியல், விலங்கு அறிவியல், இயற்கை வள மேலாண்மை, பயிா் பாதுகாப்பு, மண்வளம், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், சமூக அறிவியல், உயிரி தொழில்நுட்பவியல் ஆகிய 9 துறைகளில் சிறந்த ஆராய்ச்சியாளா்களைத் தோவு செய்து துறைக்கு 2 விருதுகள் வீதம் 18 விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 • இந்த விருதானது ஆவணம், சான்றிதழ், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு அடங்கியது.
 • இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான விருது மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தலைமையில், வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநா் திரிலோசன் மொஹபத்ரா முன்னிலையில் அண்மையில் அறிவிக்கப்பட்டது. 
 • இதில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பயிா் நோயியல் துறை பேராசிரியா் சே.நக்கீரனை ஆலோசனைக் குழுத் தலைவராகக் கொண்டு பயின்ற வினோத்குமாா் செல்வராஜின், பருத்தியில் புகையிலை கீறல் நச்சுயிரி நோய்த் தொற்று - அதன் அறிகுறிகள் வெளிப்பாடு, பரவும் முறை, மேலாண்மை என்ற ஆய்வறிக்கைக்கு ஜவாஹா்லால் நேரு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 • விருதுக்குத் தோவாகியுள்ள ஆராய்ச்சியாளா் வினோத்குமாா் செல்வராஜ், சா்வதேச இதழ்களில் தனது இரு கட்டுரைகளை சமா்ப்பித்துள்ளாா். 
ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசு சட்டம் இயற்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பு
 • மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, அதிமுக, திமுக, திக, விசிக, பாமக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
 • இந்த வழக்கு விசாரணையில், பதில் மனு தாக்கல் செய்த இந்திய மருத்துவ கவுன்சில், இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்று கூறியிருந்தது.
 • இந்த நிலையில், இன்று தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்ட நிலையில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
 • “உச்ச நீதிமன்றம் மட்டுமே முடிவெடுக்க முடியும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கத்தை ஏற்கமுடியாது. முப்பது ஆண்டுகள் முன்னர் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு வழங்குவத்ற்கான மத்திய அரசு ரிசர்வ்வேசன் குறித்த சட்டத்தை கொண்டு வர முடியும்.
 • அகில இந்திய மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். மாநிலங்கள் சமர்ப்பித்த இடங்களை பெற்றபோது, அவற்றில் மத்திய கல்வி நிலையங்களில் அமல்படுத்த ஆட்சேபனை தெரிவிக்காத மருத்துவ கவுன்சில், மத்திய கல்வி நிறுவனங்கள் இல்லாத பிற நிறுவனங்களில் ஆட்சேபிக்க முடியாது.
மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., இழப்பீடு ரூ. 1,65,302 கோடி விடுவித்தது மத்திய அரசு
 • மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஜி.எஸ்.டி., இழப்பீடாக, ரூ. 1,65,302 கோடி ஜி.எஸ்.டி., விடுவித்தது.கடந்த, 2017, ஜூலை,1ல், ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டது. 
 • இந்த வரி விதிப்பால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பு, ஐந்து ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 • அதன்படி, நடப்பு, 2019-20- ம் நிதியாண்டில், முதல்கட்டமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 15 ஆயிரத்து, 340 கோடி ரூபாய், ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்கப்பட்டது.
 • இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மாநிலங்களுக்கு ரூ.1,65,302 கோடி ஜி.எஸ்.டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கி உள்ளது.இதில் தமிழகத்துக்கு மட்டும் ரூ. 12,305 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 
 • அதேபோல் புதுச்சேரிக்கு ரூ. 1057கோடி ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு வழங்கியது. இந்த இழப்பீட்டுத் தொகையானது கொரோனா பாதிப்புகள் இருக்கும் சமயத்தில் தக்க சமயத்தில் மாநில அரசுகளுக்குக் கிடைத்துள்ளது.
நியாயவிலைக் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் முதல்வா் பழனிசாமி தொடங்கி வைத்தாா்
 • தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாகவும், உயிா் இழப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் உள்ளது.
 • மத்திய அரசின் கரோனா நோய்த் தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளில், பொது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 • தமிழக அரசின் அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் மாநிலத்தில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரா்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினா்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு விலையில்லாத தரமான மறுபயன்பாட்டு முகக் கவசங்கள் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளன. 
 • முதல்கட்டமாக, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் 69.09 லட்சம் குடும்பங்களுக்கு 4.44 கோடி விலையில்லாத முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த முகக் கவசங்கள் ரூ.30.07 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
 • இந்தத் திட்டத்தை முதல்வா் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் அமைச்சா்கள் ஆா்.காமராஜ், சி.விஜயபாஸ்கா், ஆா்.பி.உதயகுமாா், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிப்பதற்காக 'மௌசம்' என்ற புதிய செயலி
 • புவி அறிவியல் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் இந்த செயலியின் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினாா். இந்த செயலி மூலமாக நகா்பகுதிகளின் வானிலை முன்னறிவிப்புகள் உடனுக்குடன் ஒளிபரப்பப்பட்டு, அதன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படும்.
 • இச்செயலியை வட வெப்ப மண்டலங்களுக்கான சா்வதேச பயிா் ஆராய்ச்சி நிறுவனம், புணேயிலுள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம், இந்திய வானிலை ஆய்வுத்துறை ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன. 'மௌசம்' செயலி பல்வேறு பயன்பாடுகளையும் சேவைகளாக வழங்கும்.
 • இந்த செயலி நாட்டின் 200 நகரங்களின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம், திசை உள்ளிட்ட தற்போதைய வானிலைத் தகவல்களை உடனுக்குடன் வழங்கும். 
 • நாள்தோறும் 8 முறை தகவல்கள் புதுப்பிக்கப்படும். உள்ளூா் வானிலை நிகழ்வுகள் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை வெளியிடப்படும். அவசரகால வானிலை குறித்த அறிவிப்பும், அதன் தாக்கம் தொடா்பாகவும் முன்கூட்டியே எச்சரிக்கையாக ஒளிபரப்பப்படும். 
 • இந்த பயன்பாடு அடுத்த 7 நாள்களுக்கு இந்தியாவின் சுமாா் 450 நகரங்களுக்கு வானிலை முன்னறிவிப்பை வழங்கும். அதேபோல கடந்த 24 மணிநேர வானிலைத் தகவல்களும் பயன்பாட்டில் கிடைக்கும். 
இத்தாலி சீரி ஏ 2020 கால்பந்து ஜுவென்டஸ் சாம்பியன்
 • சீரி ஏ கால்பந்து தொடரில், ஜுவென்டஸ் அணி தொடர்ந்து 9 வது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்துள்ளது. 
 • இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் ஜுவென்டஸ் 83 புள்ளிகளை பெற்றுள்ளது (36போட்டி, 26வெற்றி, 5 டிரா, 5 தோல்வி).
 • இத்தாலி சீரி ஏ கோப்பையை தொடர்ந்து 9வது முறையாக ஜுவென்டஸ் அணி வென்றுள்ளது. அந்த அணி 2011-12 சீசன் முதல் தொடர்ந்து கோப்பையை வென்று வருகிறது. 
 • அதாவது ஹாட்ரிக் சாதனையை தொடர்ச்சியாக 3 முறை நிகழ்த்திய பெருமையை வசப்படுத்தி உள்ளது. மேலும், அந்த அணி 36 முறை சீரி ஏ கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதுதவிர 21முறை 2வது இடத்தை பிடித்துள்ளது.
 • ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியில் இருந்த கிறிஸ்டியனோ ரொனால்டோ (போர்ச்சுகல்), கடந்த 2 ஆண்டுகளாக இத்தாலியின் ஜூவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது சீரிய ஆட்டத்தின் உதவியுடன் ஜூவென்டஸ் 2 முறை கோப்பையை வென்றுள்ளது.
கொல்கத்தா, மும்பை, நொய்டாவில் உயர் செயல்திறன் கோவிட் பரிசோதனை நிலையங்கள் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
 • உயர் செயல்திறன் உள்ள மூன்று கோவிட்-19 மருத்துவப் பரிசோதனை மையங்களை பிரதமர் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இவை கொல்கத்தா, மும்பை மற்றும் நொய்டாவில் உள்ள ஐ.சி.எம்.ஆர்இன் தேசிய மையங்களில் அமைந்துள்ளன.
 • இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் தினமும் சுமார் 10 ஆயிரம் மருத்துவப் பரிசோதனைகளை செய்யும் அதிநவீன, உயர் தொழில்நுட்ப வசதிகள் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 
 • அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்வதால், நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். அதன் மூலம் நோய் பரவாமல் தடுக்க உதவிகரமாக இருக்கும்.
 • இந்த மூன்று உயர் செயல்திறன் மிக்க மருத்துவப் பரிசோதனை மையங்கள் ஐசிஎம்ஆர்- தேசிய புற்றுநோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம், நொய்டா; ஐ.சி.எம்.ஆர். கருத்தரிப்பு சிகிச்சை ஆராய்ச்சிக்கான தேசிய மையம், மும்பை; மற்றும் ஐ.சி.எம்.ஆர்.- காலரா மற்றும் குடல்சார்ந்த நோய்கள் சிகிச்சை தேசிய மையம், கொல்கத்தா ஆகியவை தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தும் வசதிகளைக் கொண்டவையாக உள்ளன. 
 • பரிசோதனைக்கான நேரத்தை இந்த பரிசோதனை நிலையங்கள் குறைத்துவிடும். ஆய்வக அலுவலர்களுடன் தொடர்பில் இருக்கும் நேரம், மருத்துவ உபகரணங்களின் அருகில் இருக்கும் நேரம் ஆகியவையும் குறைவாகவே இருக்கும். 
 • கோவிட் அல்லாத நோய்களின் பரிசோதனை வசதிகளும் இந்த ஆய்வகங்களில் உள்ளது. எனவே நோய் பரவல் காலம் முடிந்த பிறகு ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி., காசநோய், சி.எம்.வி. பாதிப்பு, பாலியல் நோய்கள், நெய்செரியா, டெங்கு போன்ற நோய்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள முடியும்.
வங்கதேசத்திற்கு 10 டீசல் ரயில் என்ஜின்களை இந்தியா வழங்கியது
 • வங்கதேசத்திற்கு 10 டீசல் ரயில் என்ஜின்களை இந்தியா வழங்கியது. இதையொட்டி டில்லியில் நடந்த காணொளிகாட்சியில் இந்தியாவின் சார்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் மற்றும் வங்கதேச வெளியுறவு அமைச்சர் மற்றும் அந்நாட்டு ரயில்வே அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
 • சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்உதவி திட்டத்தின் கீழ் வங்கதேசத்தில் 17 ரயில்வே திட்டங்களுக்கு இந்தியா முன்வந்துள்ளது. பாலங்கள், சிக்னல் அமைப்புகள், அகலரயில் பாதை டீசல் என்ஜின்கள் உள்ளிட்ட 9 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 
 • இதன் ஒரு கட்டமாக மேற்குவங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள கெடே என்ற ரயில்நிலையத்திலிருந்து 10 டீசல் ரயில் என்ஜின்களும் ஒன்றன்பின் ஒன்றாக வங்கதேசத்தில் உள்ள தர்ஷனா ரயில்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு டீசல் ரயில் என்ஜினும் 28 வருடங்கள் ஓடக் கூடியது.
 • அவை WDM-3D வகை என்ஜின், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் என்ஜின், 3,300 ஹார்ஸ் பவர் என்ஜின்கள், மணிக்கு 120 கி.மீ., வேகம் வரை ஓடக்கூடியவை. இந்த ரயில் என்ஜின்கள் மூலம் இந்திய மற்றும் வங்கதேசத்திற்கு இடையே ரயில் போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 27, 2020
 • எல்.ஐ.சி நிற்கும் இடையில் இந்திய இராணுவம் பொதுமக்களுக்காக சியாச்சின் பள்ளத்தாக்கைத் திறக்கிறது
 • ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக இந்தியா வியட்நாமில் தனது சொந்த பருத்தி கிடங்கை அமைக்க உள்ளது
 • ஐக்கிய நாடுகள் சபையின் உலக வனவிலங்கு குற்ற அறிக்கை: புலி உடல் பாகங்களை மிகப் பெரிய அளவில் வழங்குபவர் இந்தியா
 • ரபேல் ஜெட்ஸின் முதல் தொகுதி இந்தியாவுக்கு வந்து சேரும்
 • இந்தியா 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வட கொரியாவுக்கு நீட்டிக்கிறது
 • சீனாவின் செங்டு தூதரகம் மூடப்பட்டது
 • ஐபிபிஐ: “எம்எஸ்எம்இகளுக்கான சிறப்பு நொடித்துத் தீர்க்கும் கட்டமைப்பு”
 • ஜூலை 27: சிஆர்பிஎஃப் வளர்ப்பு நாள்
 • இந்திய கணக்கியல் தரநிலைகள் திருத்தப்பட்டன
 • கோவிஷீல்ட்: ஆக்ஸ்ஃபோர்ட் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை இந்தியா மேற்கொள்ள உள்ளது
 • COVID-19 க்கு சிகிச்சையளிப்பதில் இடோலிசுமாப் சேர்க்கப்படுவதை எதிர்த்து GoI முடிவு செய்கிறது

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment