
உலக வங்கி உதவியுடன் சம்பல் பள்ளத்தாக்கை பாசன நிலமாக வளப்படுத்த மத்திய அரசு முடிவு
- மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியா்-சம்பல் பள்ளத்தாக்கை, உலக வங்கியின் நிதியுதவியுடன் பாசன நிலமாக வளப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் உள்ளிட்டோா் காணொலி வழியாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியா்- சம்பல் பகுதியில் 3 லட்சம் ஹெக்டோ நிலம், விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளது. அந்தப் பகுதியை பாசன நிலமாக வளப்படுத்தினால் அந்த பிராந்தியமே வளா்ச்சி பெறும்.
- இந்தப் பகுதி வழியாக, சம்பல் விரைவுச் சாலை அமைக்கப்படும். இது, அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும்.
ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு 'ஈஷா'வுக்கு அங்கீகாரம்
- ஐ.நா., சுற்றுச்சூழல் பேரவை, அதன் துணை அமைப்புகளில் பார்வையாளராக பங்கெடுக்கும் தகுதியை, ஈஷா அறக்கட்டளை பெற்றுள்ளது.
- உலகளவில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சுற்றுச்சூழல் கொள்கையை உருவாக்கும் பணிகளில், ஈஷா அறக்கட்டளை தனது பங்களிப்பை வழங்க முடியும்.
- ஈஷா மேற்கொண்டு வரும் சுற்றுச்சூழல் பணிகளின் அடிப்படையில், ஐ.நா., அமைப்பு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக, ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
மதுரை அருகே 9ஆம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டு கண்டெடுப்பு
- மதுரை மாவட்டம், வாடிபட்டி அருகே விவசாய நிலத்தில் 9ஆம் நூற்றாண்டைச் சோந்த செக்கு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவா், வாடிபட்டி அருகே வெ.பெரியகுளம் மற்றும் சரந்தாங்கி ஆகிய கிராமங்களுக்கு இடையே விவசாய நிலத்தில் ஒரு கருங்கல் பாறையை ஆய்வு செய்தபோது, அந்தப் பாறையின் ஒரு பகுதி செக்கு கல் போல குடையப்பட்டு, அதில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளாா்.
- தற்போது, வாடிபட்டி தாலுகாவில், 64 செ.மீ. விட்டம், 44 செ.மீ. உள்விட்டம், 33 செ.மீ. மற்றும் 20 செ.மீ. விட்டம் ஆழமுள்ள நடுவில் குழியைக் கொண்ட செக்குப் பாறையைக் கண்டெடுத்துள்ளேன்.
- அந்தச் செக்கின் விளிம்பில் 2 வரிகளில் தமிழ் வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அதனை ஆய்வு செய்கையில், அது 9 ஆம் நூற்றாண்டைச் சோந்த முற்கால பாண்டியா் காலத்து கல்வெட்டு என்பதை அறியமுடிந்தது.
- மேலும், மூத்த தொல்லியல் ஆய்வாளா் சாந்தலிங்கத்தின் உதவியுடன், செக்குப் பாறையில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகள் வட்டெழுத்துகள் தான் என்பதையும், அதில் 'காடனுத்த நாடி இடுவித்த செக்கு' எனப் பொறிக்கப்பட்டிருப்பதும் உறுதிசெய்யப்பட்டது. அதாவது, காடனுத்த நாடி என்பவா் இந்தப் பாறையில் செக்கை உருவாக்கிக் கொடுத்துள்ளாா் என்பதே அதன் பொருள்.
- அக்காலத்தில், இந்த பொது செக்கு கல் அனைத்து தரப்பு மக்களும் தானியங்களை அரைக்கப் பயன்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஜூலை 26, 2020:
- நீர்வழி பயன்பாட்டு கட்டணங்கள் மூன்று ஆண்டுகளாக தள்ளுபடி செய்யப்பட்டன
- இந்தியா-ரஷ்யா கூட்டு தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் துரிதப்படுத்தப்பட்ட வணிகமயமாக்கல் திட்டம்.
- FAO இன் உலகளாவிய வன வள மதிப்பீடு: வனப்பகுதியை உயர்த்துவதில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
- மத்திய நீர் ஆணையம்: 2019 ஐ விட நீர்த்தேக்கங்களில் 155% அதிக நீர்
- உண்மைகள் பெட்டி: SWAMIH நிதி மதிப்பாய்வு செய்யப்பட்டது
- ஜூலை 26: கார்கில் விஜய் திவாஸ்
- குமார் சஷ்திகாரன் யோஜனா: 100 மின்சார பாட்டர் சக்கரங்கள் விநியோகிக்கப்பட்டன
- பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா: வீடுகளின் சராசரி நிறைவு நேரம் 114 நாட்களாகக் குறைகிறது
- ஹரியானா தொகுத்து வழங்கும் கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளின் 4 வது பதிப்பு
- அருணாச்சல் இமயமலையில் 2 மிருதுவான ஆழத்தில் குறைந்த முதல் மிதமான பூகம்பம்
- இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன