Type Here to Get Search Results !

22nd JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கரோனா பாதிப்பு முதல்வா் நிவாரண நிதிக்குச் சோந்த தொகை ரூ.394.14 கோடி
  • கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு தீவிர தடுப்புப் பணிகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
  • இந்தப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியா்கள், அரசு சாா் நிறுவன ஊழியா்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து கடந்த மே 14-ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் ரூ.367.05 கோடி நிதி வரப்பெற்றுள்ளது.
  • இதன் தொடா்ச்சியாக பலரும் நிதி அளித்து வருகின்றனா். அதன்படி, ஜூலை 21-ஆம் தேதி வரையில் ரூ.394.14 கோடி நிதி வரப்பெற்றுள்ளது. அதில், தமிழ்நாடு மின்விசை மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், மின்சாரத் துறை ஊழியா்கள், வேளாண்மை பல்கலைக்கழக ஊழியா்கள், லட்சுமி விலாஸ் வங்கி, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், குடிநீா் மற்றும் வடிகால் வாரிய ஓய்வூதியதாரா்கள் உள்ளிட்ட பலரும் நிதிகளை அளித்துள்ளோா் பட்டியலில் அடங்குவா்.
  • ஜூலை 21-ஆம் தேதி நிலவரப்படி மட்டும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக பெறப்பட்ட தொகை ரூ.394 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331 ஆகும்.
சிங்கப்பூா் இந்திய வம்சாவளி செவிலியருக்கு அதிபா் விருது
  • கரோனா நோய்த்தொற்று சூழலில் சிங்கப்பூரில் முன்களப் பணியாளராக சிறந்து பணியாற்றி வருவதற்காக இந்திய வம்சாவளியைச் சோந்த செவிலியா் கலா நாராயணசுவாமிக்கு (59) அந்நாட்டு அதிபா் விருது வழங்கப்படுகிறது.
  • கலாவுடன் சோத்து மொத்தம் 5 செவிலியா்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக சிங்கப்பூா் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விருது பெறுவோருக்கு கோப்பை, அதிபா் ஹலிமா யாகோப் கையெழுத்திட்ட சான்றிதழ், சுமாா் ரூ.5.40 லட்சம் ரொக்கம் வழங்கப்படுகிறது.
  • சிங்கப்பூரில் உள்ள உட்லாண்ட்ஸ் சுகாதார மையத்தில் துணை இயக்குநராக இருக்கும் கலா நாராயணசுவாமி, நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வர்த்தக கவுன்சில் மாநாடு
  • இந்திய வர்த்தக கவுன்சிலின், 45ம் ஆண்டு நிறைவையொட்டி, அமெரிக்க - - இந்திய வர்த்தக கவுன்சில் மாநாடு, நடந்தது. 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடந்த இந்த மாநாடு, 'சிறந்த எதிர்காலத்தை கட்டமைத்தல்' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.
  • இதில், பிரதமர், நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது: உலகிற்கு சிறப்பான எதிர்காலம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் ஒருங்கிணைந்து, வடிவம் கொடுக்க வேண்டும்.
  • நம் எண்ணம், சிந்தனை அனைத்தும், ஏழைகளின் நலன்களை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். தொழில் செய்ய வேண்டியதை எளிதாக்க வேண்டியது அவசியம். உலக பொருளாதார நிலையை எதிர்கொள்ள, உள்ளூர் பொருளாதாரம் வலுவடைய வேண்டும். 
  • அரசு நிர்வாகத்தில், இந்தியா வெளிப்படை தன்மையை கடைப்பிடித்து வருகிறது. இன்று உலகளவில் பரவியுள்ள தொற்று நோய், நம் திறமைக்கு சவால் விடுத்துள்ளது.
  • ஒரு விதத்தில், இந்த தொற்று, இந்தியாவுக்கு, சர்வதேச அளவில் வாய்ப்புகளையும் தந்துள்ளது. வாய்ப்புகள் நிறைந்த நாடாக, இந்தியா உருவாகியுள்ளது. 
  • தற்சார்பு திட்டத்தின் மூலம், இந்தியா, உலகுக்கு பெரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தி தந்துள்ளது. 'டிஜிட்டல்' மயமாக்குதல், ஆரோக்கியமான போட்டியை உருவாக்குதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம்.
  • இந்தியாவில், இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, முதல்முறையாக, நகரங்களை விட கிராமங்களில் அதிகரித்துள்ளது.
  • நாட்டில், விவசாயத் துறையில் முதலீடு செய்ய, அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. சுகாதாரத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆண்டுக்கு, 22 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 
  • இத்துறையில் முதலீடு செய்ய, இந்தியா அழைப்பு விடுக்கிறது. வேகமான வளர்ச்சி மருந்து உற்பத்தி துறையில், இந்தியாவும், அமெரிக்காவும் நெருக்கமான நட்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
  • இந்தியாவில், சுகாதாரத்துறையில் முதலீடு செய்ய, இதுவே சிறப்பான நேரம். இந்தியா, இயற்கை எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால், இதில் முதலீடு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. 
  • அதேபோல், விமான போக்குவரத்து துறையும் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.இதிலும், முதலீடு செய்யலாம். ராணுவத்துறையிலும் முதலீடு செய்ய பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
  • கொரோனா தொற்று காலத்திலும், ஏப்ரல் - மே மாதத்தில், இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி என்றால், அது வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள வாய்ப்புகளுக்கான வளர்ச்சியாக இருக்கும். 
  • சர்வதேச அளவில், முதலீடு செய்வதற்கு நம்பிக்கையுள்ள நாடாக, இந்தியா திகழ்கிறது. இங்கே முதலீடு செய்ய, இதை விட சிறந்த காலம் இருக்க முடியாது என, அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். 
  • உலக வங்கி பட்டியலில் எளிதாக தொழில் தொடங்க கூடிய நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியா முன்னேறி உள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் கொண்டுள்ளார். 
  • கடந்த ஆண்டு அக்டோபரில் உலக வங்கியின் ஈஸி ஆஃப் டூயிங் பிசினஸ் தரவரிசையில் 190 நாடுகளில் இந்தியா 14 இடங்கள் தாண்டி 63 வது இடத்தைப் பிடித்தது. 50 வது இடத்தை அரசாங்கம் குறிவைத்து வருகிறது.
  • ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் அந்நிய நேரடி முதலீட்டில் சாதனை அளவை எட்டி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட கணிசமாக அதிகமாக உள்ளது" என்று அவர் கூறினார், 
  • எடுத்துக்காட்டுகளை அளித்து, 2019-20ல் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டை $74 பில்லியன் டாலர் என்று அவர் கூறினார். "இது அதற்கு முந்தைய ஆண்டை விட 20 சதவீத அதிகரிப்பு. இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி போகிறது என மோடி குறிப்பிட்டுள்ளார்.
  • இந்தியாவில் சமீபத்தில் பேஸ்புக் கூகுள் அமேசான் இன்டல் போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் உள்ள காக்ராபர் அணு மின் நிலையத்தின் 700 மெ.வா. திறனுள்ள 3-வது அணு உலையில் மின் உற்பத்தி துவங்கியதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து
  • மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, குஜராத்தில் உள்ள காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3-வது அணு உலையில் அணு மின் உற்பத்தி துவக்கப்பட்டுள்ளதற்கு விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 700 மெ.வா. திறன் கொண்ட இந்த அணு உலை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது.
  • “இன்று இந்திய அணு சக்தி வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும். இந்த மிகச் சிறந்த சாதனைக்காக ஒட்டு மொத்த தேசமும் நமது விஞ்ஞானிகளுக்கு மரியாதை செலுத்துகிறது” என்று திரு. அமித் ஷா கூறியுள்ளார்.
  • “பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அவரது தொலைநோக்கு இலக்கான தற்சார்பு இந்தியாவை அடைய புதிய இந்தியா வெற்றி நடை போடுகிறது“ என்று மத்திய உள்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜூலை 22, 2020:
  • “விக்ஷரோபன் அபியான்” உள்துறை அமைச்சரால் தொடங்கப்பட உள்ளது
  • NPCI UPI ஆட்டோ பே அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.
  • 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் அலாஸ்காவைத் தாக்கியது; சுனாமி எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன.
  • "துருவாஸ்ட்ரா" வழிகாட்டுதல் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக சோதிக்கிறது
  • சந்தேகத்திற்கிடமான பெரிய பரிவர்த்தனைகளை சரிபார்க்க வருமான வரித் துறையிலிருந்து பான் தரவைப் பெற FIU
  • உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் இந்தியாவுடன் விரிவாக்க சீனாவை வலியுறுத்தும் ஒரு சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றுகிறது
  • இந்தியா-ரஷ்யா ஆண்டு இறுதிக்குள் பாதுகாப்பு தளவாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன
  • கக்ரப்பர் அணு மின் நிலையம் விமர்சனத்தை அடைகிறது
  • சிபிடிடி மற்றும் சிபிஐசி தரவு பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன
  • காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் 1 மில்லியன் யூரோ குல்பென்கியன் பரிசை வழங்கினார்
  • இந்தியா பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகம் வழியாக வடகிழக்கு டிரான்ஸ் ஷிப்மென்ட்களைத் தொடங்குகிறது
  • இந்தியாவில்-மாலத்தீவுகள் ஆணில் “அவசர மருத்துவ சேவைகளை” நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
  • டெக்சாமெதாசோனை COVID-19 சிகிச்சையாக ஜப்பான் அங்கீகரிக்கிறது
  • ஜி 20 டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா கலந்து கொள்ள உள்ளது
  • நோய்க்கான தேசிய மையத்தால் டெல்லியில் நடத்தப்பட்ட செரோ-பரவல் ஆய்வு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel