
உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைகளை ரஷ்யா வெற்றிகரமாக முடித்துள்ளது
- COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது.
- ரஷ்யாவை சேர்ந்த செசோனோவ் பல்கலைக்கழகம் (Sechenov University) கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறிவதில் வெற்றி பெற்று விட்டதாக அறிவித்துள்ளது.
- மேலும், ஜூன் மாதம் 18 ஆம் தேதி இந்த சோதனைகள் தொடங்கப்பட்டதாகவும், இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்து முதல் குழுவினர் வரும் புதன்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அடுத்த குழுவினர் வருகின்ற 20 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
- இந்த தடுப்பூசியை ரஷ்யாவில் உள்ள Gamalei Institute of Epidemiology and Microbiology நிறுவனம் தயாரித்துள்ளது.
- இதன் மூலம் உலகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை சோதனை அடிப்படையில் மனிதர்கள் மீது செலுத்தி அதில் வெற்றி பெற்ற 'முதல் நாடு' என்ற பெருமை ரஷ்யாவுக்கு கிடைத்துள்ளது.
அமெரிக்க கடற்படையில் முதல் கருப்பின பெண் பைலட்
- அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல் முறையாக, போர் விமானத்தை இயக்குவதற்கு கருப்பின பெண் பைலட் தேர்வாகி இருக்கிறார். உலகின் மிகச்சிறந்த விமானப்படையை கொண்டுள்ள அமெரிக்காவில், கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் முதல் முறையாக ரோஸ்மேரி மெரினர் என்ற பெண் பைலட், போர் விமானத்தை இயக்க தேர்வு செய்யப்பட்டார்.
- இதன் மூலம், அமெரிக்காவின் முதல் பெண்போர் விமானி என்ற பெருமையை அவர் பெற்றார். இந்நிலையில், அமெரிக்க கடற்படையில் முதல் முறையாக போர் விமானத்தை இயக்குவதற்கு கருப்பினத்தை சேர்ந்த முதல் பெண் பைலட்டாக, ஜே.ஜி.மெடலின் ஸ்விக்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள பர்கே என்ற இடத்தை சேர்ந்தவர்.
இந்திய ரயில்வே முதல் முறையாக தேசிய எல்லைகளுக்கு அப்பால் சிறப்பு சரக்கு ரயிலை இயக்கி உள்ளது
- ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் மிளக்காய் வத்தலுக்கு பெயர் பெற்றது. இந்திய ரயில்வே முதன்முறையாக நாட்டின் எல்லைக்கு அப்பால் சிறப்பு சரக்கு ரயிலை இயக்கி, இங்கிருந்து மிளகாய் வத்தலை பங்களாதேஷின் பெனாபோலுக்கு கொண்டு சென்றது
- இந்த சரக்கு ரயிலில், 19.9 டன் எடை கொண்ட 466 மிளகாய் வத்தல் மூட்டைகள் எல்லை கடந்து கொண்டு செல்லப்பட்டன.
ஜியோவில் குவால்காம் நிறுவனம் 730 கோடி ரூபாய் முதலீடு
- உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. அந்த வகையில், பேஸ்புக், சில்வர் லேக்,. விஸ்டா இக்யூட்டி, ஜெனரல் அட்லாண்டிக், முபடாலா உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்தன.
- இந்த வரிசையில் 13-வது நிறுவனமாக அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனம் 730 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அதன்மூலம் ஜியோ நிறுவனத்தின் 0.15 சதவீதப் பங்குகளை வாங்கியுள்ளது.
- கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோவில் 43,574 கோடி ரூபாய் முதலீடு செய்ததன் மூலம் 9.99 சதவீதப் பங்குகளை வாங்கியது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஏப்ரல் 22ம் தேதி தொடங்கி இதுவரை 25.20 விழுக்காடு பங்குகளை விற்றதன் மூலம் ஒரு லட்சத்து 18,318 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
- குவால்காம் நிறுவனத்தின் ஸ்நாப்ட்ரேகன் ராம் அதிகமான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.