- வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், வேலைவாய்ப்பு பெறும் வகையில், மத்திய அரசு, புதிய திட்டத்தைத் துவக்கியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக, வெளிநாடுகளில் சிக்கிய மற்றும் வேலைவாய்ப்புகளை இழந்த இந்தியர்கள், சிறப்பு விமானங்கள் மூலம், தாயகம் திரும்பி வருகின்றனர்.
- ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மட்டும், 80 ஆயிரம் இந்தியர்கள், திரும்பியுள்ளனர். எண்ணெய், எரிவாயு, சுற்றுலா, கட்டுமானம், தானியங்கி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இவர்கள் பணிபுரிந்து வந்தனர்.
- அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் பலர் வேலையிழந்து திரும்பியுள்ளனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் திறன் வாய்ந்த பணியாளர் விபரங்களை, வேலைவாய்ப்பு தருவதற்காக திரட்டும், 'ஸ்வதேஸ்' எனப்படும் திட்டத்தை, மத்திய அரசு துவக்கியுள்ளது.
ஸ்வதேஸ் திட்டம் (SWADES - Skilled Workers Arrival Database for Employment Support)
June 05, 2020
0