முதல் 50 இடங்களில் ஏறத்தாழ அனைத்துப் பிரிவுகளிலும் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களுடன் தமிழ்நாடு மாநிலமானது இந்திய உயர் கல்வியில் அதிகப் பங்களிக்கும் ஒரு முன்னிலை மாநிலமாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாடு மாநிலமானது இந்தியாவின் முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் ஐந்தில் ஒரு பங்கு கல்லூரிகளுடன் பொறியியல் கல்லூரிப் பட்டியலில் ஒரு தலைமை மாநிலமாகத் திகழ்கின்றது.
2020 ஆம் ஆண்டின் தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்புத் தரவரிசையின்படி, (NIRF – National Institutional Ranking Framework) நாட்டின் முன்னிலையில் உள்ள 100 பொறியியல் கல்லூரிகளில் 18 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாகும்.
தொடர்ந்து 5வது முறையாக நாட்டின் சிறந்த பொறியியல் கல்லூரி என்ற அங்கீகாரத்துடன் நாட்டின் முன்னிலையில் உள்ள ஒரு கல்வி நிறுவனமாக ஐஐடி-மதராஸ் திகழ்கின்றது.
திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 10 இதர பொறியியல் கல்லூரிகளிடையே 9வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
கல்லூரிகளின் தரவரிசையில் இந்தியாவில் உள்ள முதல் 100 மானுடவியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றில் ஒரு பங்கு கல்லூரிகளைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு தரவரிசையில், தமிழ்நாட்டில் இருந்து 35 கல்லூரிகள் இடம் பெற்றன. இந்த ஆண்டில் மொத்தமுள்ள 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாகும்.
முதன்முறையாக இந்த ஆண்டின் முன்னிலை பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் மதராஸ் மருத்துவக் கல்லூரியானது 12வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டு உள்ளது.