Type Here to Get Search Results !

3rd JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • தில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வேளாண்துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
  • 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி, தானிய வகைகள், எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதிலும் இருப்பு வைப்பதிலும் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது.
  • இதன் மூலம் தங்களது நடவடிக்கைகளில் கண்காணிப்பு அமைப்புகள் அதிக குறுக்கீடுகளை ஏற்படுத்துமோ என்ற அச்சமின்றி தனியாா் முதலீட்டாளா்கள் செயல்பட முடியும்.
  • அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல்: விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்வதில் உள்ள தடைகளைக் களையும் பொருட்டு 'வேளாண் உற்பத்திப் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம், 2020'-க்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • இதன் மூலம் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை மாநிலத்துக்குள்ளும் மாநிலங்களுக்கு இடையேயும் தடைகளின்றி விற்பனை செய்ய வழிவகை ஏற்படும்.
  • மொத்த மற்றும் சில்லறை வணிகா்கள், ஏற்றுமதியாளா்கள் உள்ளிட்டோருடன் விவசாயிகள் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் 'விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம், 2020'-க்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் விவசாயிகள் சுரண்டப்படுவது தடுக்கப்படும்.
  • இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு துறைகளின் செயலா்கள் அடங்கிய உயா்நிலைக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தா துறைமுகத்தை 'சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுகம்' என்று பெயா் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • கொல்கத்தா துறைமுக அறக்கட்டளை 1870-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு கடந்த 150 ஆண்டுகளாக கொல்கத்தா துறைமுகம் முக்கியப் பங்காற்றி வருகிறது. 
  • கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையை 'சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுகம்' என்று பெயா் மாற்றம் செய்ய கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அறக்கட்டளையின் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பூடான் இடையே ஒப்பந்தம்
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கில் இந்தியா-பூடான் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
  • காற்றின் தரம், திடக்கழிவு மேலாண்மை, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இந்தியாவும் பூடானும் ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • ஒப்பந்தம் கையெழுத்தாகும் தினத்திலிருந்து 10 ஆண்டுகளுக்கு அது நடைமுறையில் இருக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான சிறந்த நடைமுறைகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள இந்த ஒப்பந்தம் உதவும். 
  • ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு இரு நாடுகளின் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மருந்துகள் ஆய்வகம் மற்றும் ஹோமியோபதி மருந்துகள் ஆய்வகங்கள் ஒன்றிணைப்பு
  • இந்திய மருந்துகள் ஆய்வகம் மற்றும் ஹோமியோபதி மருந்துகள் ஆய்வகம் ஆகியவற்றை ஒன்றிணைத்து இந்திய மற்றும் ஹோமியோபதி மருந்துகள் ஆணையத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தலைமை செயலாளர் பதவிக்காலம் மேலும் 3 மாதம் நீட்டிப்புக்கு அனுமதி
  • தமிழக அரசின் தலைமை செயலாளராக பதவி வகித்த கிரிஜா வைத்தியநாதன் 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார். 
  • இதையடுத்து புதிய தலைமை செயலாளராக தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகத்தையே தலைமை செயலாளராக நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சண்முகம் தலைமை செயலாளராக பதவியேற்றார். 
  • இந்த நிலையில் வருகிற ஜூலை மாதம் 31ம் தேதியுடன் தலைமை செயலாளர் சண்முகம் பதவிக்காலம் முடிவடைய இருந்தது. அவருக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் வைத்தது.
  • இதையடுத்து அவரது பதவிக்காலத்தை மேலும் 3 மாதம் நீட்டித்து நேற்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் நலத்துறை சார்பு செயலாளர் தமிழக அரசுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதம் நீட்டிக்க வேண்டும் என்று கடந்த மாதம் தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது. 
  • இது சம்பந்தமாக ஆய்வு செய்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி தமிழக தலைமை செயலாளர் 31.7.2020 ஓய்வு பெறும் காலத்தை, 1-8-2020 முதல் 31-10-2020 வரை மேலும் 3 மாதம் காலம் வரை நீட்டிப்பு வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது. 
  • தமிழகத்தில் கடந்த 3 மாதமாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கீழடி அகழாய்வில் விலங்கின் எலும்பு கூடு
  • சிவகங்கை மாவட்டம்கீழடியில் 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின்பெரிய அளவிலான எலும்பு கூடு கண்டறியப்பட்டுள்ளது.பண்டைய தமிழரின் நாகரீகத்தை அறியும் பொருட்டு கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. தற்போது விலங்கின் பெரிய அளவிலான எலும்பு கூடு கண்டறியப்பட்டு உள்ளது.
  • முதுகெலும்பு மற்றும் விலா எலும்பு கண்டறியப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில் தோண்டப்பட்ட குழியில் ஏற்கனவே பானைகள், பானை ஓடுகள் கண்டறியப்பட்டன.
  • அதன் கீழே இந்த எலும்பு கூடு கிடைத்துள்ளது. 5ம் கட்ட அகழாய்வில் திமிலுடன் கூடிய காளை மாட்டின் எலும்பு கூடு கண்டறியப்பட்டது. இதுவரை கிடைத்த எலும்புகள் அனைத்தும் சிறு சிறு துண்டுகளாகவே கிடைத்துள்ளன.
  • தற்போது தான் பெரிய அளவிலான எலும்பு கூடு கிடைத்துள்ளது. பண்டைய தமிழர்கள் விலங்குகளை பழக்கி தங்களின் பாதுகாப்பிற்கு வைத்துள்ளனர் என ஆய்வாளர்கள் கருதி வரும் வேளையில் பெரிய அளவிலான எலும்பு கிடைத்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.
  • கீழடிக்கு அருகேமணலுாரில், அகழாய்வில், 1 மீட்டர் நீளம், 50 செ.மீ., அகலத்துடன் அரை வட்ட வடிவ, உலைக் கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொந்தகையில், நடைபெறும் அகழாய்வில், ஈமக்காடு இருந்ததற்கான தடயங்களாக, 10 முதுமக்கள் தாழிகள் கிடைத்துஉள்ளன.
சிஐஐ தலைவராக உதய் கோட்டக் பொறுப்பேற்பு
  • இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவராக (சிஐஐ) கோட்டக் மகிந்திரா வங்கியின் நிா்வாக இயக்குநா் உதய் கோட்டக் பொறுப்பேற்றாா்.
  • சிஐஐ தலைவராக கிா்லோஸ்கா் நிறுவன தலைவரும், நிா்வாக இயக்குநருமான விக்ரம் கிா்லோஸ்கா் பதவி வகித்து வந்தாா். இந்நிலையில் 2020-21-ஆம் ஆண்டுக்கான சிஐஐ தலைவராக கோட்டக் மகிந்திரா வங்கியின் நிா்வாக இயக்குநா் உதய் கோட்டக் பொறுப்பேற்றாா். 
  • நிகழாண்டுக்கான சிஐஐ நியமன தலைவராக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான டி.வி.நரேந்திரன் பொறுப்பேற்றாா். பஜாஜ் ஃபின்சா்வ் நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான சஞ்சீவ் பஜாஜ், இவ்வாண்டின் சிஐஐ துணைத் தலைவராக பொறுப்பேற்றாா் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்லாந்து தூதராக ரவீஷ் குமாா் நியமனம்
  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தித்தொடா்பாளா் ரவீஷ் குமாா், பின்லாந்துக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டாா்.
  • இந்திய வெளியுறவுப் பணியின் 1995-ஆம் ஆண்டு பிரிவு அதிகாரியான ரவீஷ் குமாா், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சத்தின் செய்தித்தொடா்பாளராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நிகழாண்டு ஏப்ரல் மாதம் வரை பணியாற்றினாா். 
  • செய்தித்தொடா்பாளராக தான் பணியாற்றிய காலத்தில், பாலாகோட் தாக்குதல், ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு திறம்பட எடுத்துரைத்தாா். 
  • வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடா்பாளராக பணிபுரிவதற்கு முன், ஜொமனிக்கான இந்திய துணை தூதராக அவா் பணியாற்றினாா்.
பாா்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்துக்கு புதிய தலைமை நிதி அதிகாரி நியமனம்
  • பாா்தி இன்ஃப்ராடெல் தொலைதொடா்பு உள்கட்டமைப்பு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றிய பாலசுப்ரமணியன், அந்த நிறுவனத்தில் இருந்து விலகினாா். 
  • இதையடுத்து அந்த நிறுவனத்தின் சேவைகள் பங்கீட்டு பிரிவு தலைவராக உள்ள பூஜா ஜெயின், தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது நியமனத்துக்கு நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல் வழங்கியது. 
  • பாா்தி இன்ஃப்ராடெல் நிறுவனத்தில் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பூஜா ஜெயின், பட்டயக் கணக்காளா் ஆவாா். இவா் பாா்தி ஏா்டெல் நிறுவனத்திலும் 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளாா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel