Type Here to Get Search Results !

30th JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

மத்திய அரசுக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக ஆர்.சங்கரநாராயணன் நியமனம்
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கான புதிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த ஜி.ராஜகோபாலனின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து அவருக்குப் பதில் புதிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.சங்கரநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் பொருட்கள் : பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு
  • கொரோனாவுக்கு எதிரான இந்த பெரும் போரில் நாட்டு மக்களை வழிநடத்துவதற்காக பிரதமர் மோடி அவ்வப்போது தொலைக்காட்சி வழியாக உரையாற்றி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். அந்த வரிசையில் 4-வது முறையாக நேற்று மாலை 4 மணிக்கு மக்களுக்கு உரையாற்றினார்.
  • உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனாவால் இறப்பவர்கள் எண்ணிக்கையை இந்தியா கட்டுப்படுத்தி இருக்கிறது. 
  • உரிய நேரத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் எடுக்கப்பட்ட பிற முக்கியமான முடிவுகள் நம் நாட்டின் லட்சக்கணக்கான குடிமக்களின் உயிர்களை காப்பாற்றி உள்ளது.
  • ஊரடங்கின் முதல் கட்ட தளர்வின் போது கடைப்பிடித்ததை விட தற்போது மேலும் அதிகமான கவனம் தேவைப்படுகிறது. மாநில அரசுகள், உள்ளூர் நிர்வாகங்கள், குடிமக்கள் அதே அளவு தீவிர விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஊரடங்கு அறிவித்தவுடன் அரசு, 'பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தை' அறிவித்தது.
  • 3 மாதங்களுக்கு 80 கோடி மக்களுக்கு இலவசமாக ரேஷன் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த 3 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 கிலோ பருப்பு ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
  • வருகிற நாட்கள் விழாக்களின் காலமாக உள்ளது. ஜூலை 5-ந் தேதி குரு பூர்ணிமாவும் அதைத்தொடர்ந்து ஆவணி மாதமும் துவங்குகிறது. பின்னர் ரக்‌ஷா பந்தன், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகிய பண்டிகைகள் தொடருகின்றன. இவை தவிர கட்டி பிஹூ, நவராத்திரி, துர்கா பூஜை, தசரா, தீபாவளி, சாத் பூஜா ஆகியவையும் வருகின்றன. இந்த விழாக்காலம் மக்களின் தேவைகளையும், செலவினங்களையும் அதிகரிக்கின்றது.
  • இதை கருத்தில் கொண்டு பிரதம மந்திரி ஏழைகள் நலவாழ்வு உணவு திட்டத்தை நவம்பர் மாத இறுதி வரை நீட்டிப்பது என்று முடிவு எடுத்து இருக்கிறோம். அதாவது இந்த திட்டத்தின் மூலம் 80 கோடி மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச ரேஷன் பொருட்கள், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரை தொடரும்.
  • ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு மாதத்துக்கு 5 கிலோ கடலைப்பருப்பு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கொடுமணலில் குஜராத் கல் பவளமணி கண்டெடுப்பு
  • ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே நொய்யல் நதிக்கரை கிராமமான கொடுமணலில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. 
  • தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் 30 நாள்களுக்கும் மேலாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். இதில், பல்வேறு சான்றுகள், சின்னங்கள், பொருள்கள் கிடைத்து வருகின்றன. சில நாள்களுக்கு முன் பச்சை கற்கள், பாசி மணிகள் உள்பட பல பொருள்கள் கிடைத்தன.
  • பெருங்கற்கால ஈமச் சின்னம் எனப்படும் கல்லறை பகுதியில் அகழாய்வு செய்தபோது, சடங்குகள் செய்வதற்கான 10 கிண்ணங்கள், ஐந்து மண் ஜாடிகள், 41 பானைகள், ஒரு இரும்பு வாள், அம்பு முனைபோல் காணப்படும் ஐந்து இரும்புகள், மூன்று சிறிய கத்திகள் கிடைத்துள்ளன.
  • ஒவ்வொரு கல்லறையிலும் வெவ்வேறான பொருள்கள் கிடைக்கின்றன. இதனால், வசதிக்கு தகுந்தாற்போல் இறுதிச் சடங்குகள் செய்திருக்கலாம்.
  • தொழிற்சாலைகள் இருந்த பகுதியில் நடைபெற்ற அகழாய்வில், இரண்டு தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய கறுப்பு, சிவப்பு நிறத்தில் ஒரு பானை, ஒரு வெள்ளி, நான்கு செம்பு நாணயங்கள், 69 கல்பவள மணிகள், கற்களை உடைக்கும் ஒரு கல் சுத்தியல், அணிகலன்கள் செய்வதற்கான சுடு மண்ணால் தயாரான ஒரு பானை, ஏராளமான உடைந்த ஓடுகள் கிடைத்துள்ளன.
  • இங்கு கிடைத்த கல் பவளமணிகள் குஜராத் மாநிலத்தில் மட்டுமே கிடைப்பதால் இங்கிருந்து வணிகத் தொடா்பு குஜராத் வரை இருந்திருக்கலாம். வரும் செப்டம்பா் மாதம் வரை அகழாய்வுப் பணி நடைபெறும் என்றனா்.
தமிழக வீட்டுவசதி, வாழ்விட மேம்பாட்டுக்கு உலக வங்கி ரூ.1,892 கோடி கடன்: மத்திய அரசு ஒப்பந்தம்
  • குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு ஏதுவான விலையில் வீடுகளை பெறுவதற்கு உதவும் வகையில் தமிழக அரசின் சாா்பில் மத்திய அரசும் உலக வங்கியும் கையெழுத்திட்டன. வாழ்விட மேம்பாட்டுத்திட்டதுக்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசின் பிரதிநிதியும் உலகவங்கியும் என இந்த இரு சட்டபூா்வமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டது.
  • 'முதலாவது தமிழக வீட்டுவசதி வலுப்படுத்தல்' என்கிற இந்த திட்டத்திற்கு ரூ. 1,514.4 கோடி (200 மில்லியன் டாலா்) கொடுக்கப்படுகிறது. இந்த கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதித்துறையின் பொருளாதார விவகாரத் துறை கூடுதல் செயலா் சமீா் குமாா் கரே இந்திய அரசின் சாா்பிலும் உலக வங்கியின் சாா்பில் அதன் இந்திய இயக்குநா் ஜுனைத் கமால் அகமத்தும் கையெழுத்திட்டனா்.
  • தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டுத்திட்டத்திற்கு ரூ.378.6 கோடிக்கான(50 மில்லியன் டாலா்) ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சாா்பில் தில்லி தமிழ்நாடு இல்ல முதன்மை உரைவிட ஆணையா் ஹிதேஷ்குமாா் எஸ். மக்வானாவும் உலக வங்கியின் சாா்பில் ஜுனைத் கமால் அகமத் ஆகியோா் கையெழுத்திட்டனா். 
  • இந்த இரு சட்டபூா்வமான ஒப்பந்தங்கள் மூலம் மாநிலத்தின் வீட்டு வசதித் துறைகளின் கொள்கைகளை நிறைவேற்றுவது, இத்துறையின் அமைப்புகளான குடிசை மாற்று வாரியம், சென்ளை பெருநகா் வளா்ச்சி வாரியம்ஆகியவற்றை வலுப்படுத்தல், ஒழங்கு முறைகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.
உலகளவில் நடந்த மாதிரி நீதிமன்ற போட்டி சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலை மாணவர்கள் ஆசியாவில் முதலிடம்
  • உலக அளவில் 100 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சட்டப்பல்கலைக்கழங்கள் கலந்துகொண்ட மாதிரி நீதிமன்ற போட்டி ஜெர்மனியின் நியூரம்பர்க் அகாடமியில் கடந்த 19ம் தேதி நடந்தது. இறுதியாக 65 அணிகள் போட்டியில் இறங்கின.
  • இந்த போட்டியில் சென்னை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்ட பள்ளி 4ம் ஆண்டு மாணவர்கள் விஜயகிருஷ்ணன், சௌகந்திக்கா, ஹரிணி யாதவ், விஸ்வஜித் மற்றும் 2ம் ஆண்டு மாணவி ஹர்ஷினி ரங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
  • இந்த போட்டியில் உலக அளவில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தை பெற்றனர். ஆசிய அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். 
  • போட்டி முடிவுகள் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் ஹிட்லரின் நாஜிப்படை தோல்வியடைந்த பிறகு, போர் கைதிகள் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்ட நீதிமன்ற அறையிலிருந்து வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின் தடுப்பூசி: பாரத் பயோடெக் அறிவிப்பு; முதன்முறையாக இந்தியாவில் கண்டுபிடிப்பு
  • ஐதராபாத் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு 'கோவாக்சின்' (COVAXIN) என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. முன்னதாக ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசி மருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
  • இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. 'கோவாக்சின்' தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாதம் இந்த பரிசோதனை வேலூர் உட்பட பல நகரங்களில் தொடங்க உள்ளது.
  • கட்டம் I மற்றும் II என்ற முறையில் மனிதர்களுக்கு செலுத்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். 
  • மேலும் 'கோவாக்சின்' தடுப்பூசி தவிர, பாரத் பயோடெக் நிறுவனமானது, ஏற்கனவே அமெரிக்காவைச் சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான ப்ளூஜென் மற்றும் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்டுகளுடன் கூட்டு சேர்ந்து தடுப்பூசி ஒன்றை உருவாக்க உள்ளது. 
  • புதிய தடுப்பூசியை உருவாக்குவதற்காக பிலடெல்பியாவில் உள்ள தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழகத்துடன் பிரத்யேக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
NADA India மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார் கிரேன் ரிஜிஜு
  • விளையாட்டு வீரர்களுக்கும் - தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கும் (NADA) இடையே ஒரு பாலத்தை உருவாக்கும் நோக்கில், மத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு செவ்வாயன்று நாடா இந்தியாவின் (NADA India) மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.
  • இந்த பயன்பாடானது விளையாட்டின் பல்வேறு அம்சங்கள் மற்றும் மிக முக்கியமாக தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பற்றி எளிதில் அணுகக்கூடிய தகவல்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் கவனக்குறைவான பயன்பாடு தடகள வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
  • பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட மருந்தில் NADA-வால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு பொருளும் உள்ளதா என்பது பற்றிய முழுமையான தகவல்களும் பயன்பாட்டில் கிடைக்கும், எனவே விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்கள் உட்கொள்ளக்கூடிய மருந்துகளை தீர்மானிக்க இந்த செயலி உதவும்.
  • விளையாட்டு வீரர்களுக்கான டோப் சோதனைகளின் மென்மையான, விரைவான செயல்முறையை உறுதிசெய்ய, பயன்பாட்டின் மூலம் ஒரு சோதனையை நடத்துவதற்கு டோப்பிங் கட்டுப்பாட்டு அதிகாரியின் இருப்பை பதிவு செய்ய பயன்பாடு அனுமதிக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel