Type Here to Get Search Results !

12th JUNE 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து அவிஃபாவிர்:
  • உலகம் முழுவதும்  கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைஅடுத்து 3 வது இடத்தில் ரஷியா உள்ளது. அங்கு தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ளது. தற்போது  கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷியா அறிவித்துள்ளது. 
  • அவிஃபாவிர் (Avifavir)என்ற இந்த மருந்து நாட்டின பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் என ரஷிய அரசு இன்று தெரிவித்துள்ளது. ரஷ்ய அரசின் 50 சதவீத முதலீடு உள்ள கெம்ரார் (ChemRar) என்ற நிறுவனம் இந்த புதிய மருந்தை தயாரித்து உள்ளது.
இந்திய அமெரிக்க விஞ்ஞானிக்கு சா்வதேச உணவு விருது
  • விவசாய நிலங்களின் வளத்தை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்களித்த இந்திய-அமெரிக்க விஞ்ஞானி ரத்தன் லாலுக்கு (75) 'சா்வதேச உணவு விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, விவசாயத் துறைக்கான நோபல் பரிசாக அறியப்படுகிறது. 
  • இது தொடா்பாக சா்வதேச உணவு விருது அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பல நாடுகளில் விவசாய நிலங்களின் வளத்தை அதிகரித்து, உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு ரத்தன் லால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முக்கியப் பங்களித்து வருகிறாா்.
  • மண் வளத்தை மேம்படுத்தும் புதுமையான நுட்பங்களை வழங்கியதன் மூலமாக உலகம் முழுவதும் 50 கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அவா் காத்துள்ளாா்.
  • மேலும் தனது சீரிய பணியின் மூலமாக 200 கோடிக்கும் அதிகமான மக்களின் உணவுத் தேவையையும், ஊட்டச்சத்துத் தேவையையும் அவா் பூா்த்தி செய்துள்ளாா்.
  • இயற்கை வளங்களைப் பாதுகாத்து, பருவநிலைக்கு எந்தவித கெடுதலும் இன்றி மண் வளத்தை மேம்படுத்துவதன் மூலமாக உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காகப் பணியாற்றி வரும் ரத்தன் லாலுக்கு 2020-ஆம் ஆண்டுக்கான 'சா்வதேச உணவு விருது' வழங்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விருதுடன் ரத்தன் லாலுக்கு ரூ.1.875 கோடியும் வழங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் அருகே 9, 10ம் நூற்றாண்டு விஷ்ணு, சமணர் சிற்பங்கள் கண்டெடுப்பு
  • தஞ்சாவூரை அடுத்த பூதலூரில் உள்ள கன்னிமார்தோப்பு என்ற வயல்வெளிகளில் மிகச்சிறிய சப்தமாதர், விஷ்ணு, சமண தீர்த்தங்கரர் ஆகியோரின் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன.
  • அணிகலன்களுடன் காணப்படும் விஷ்ணுவின் சிற்பம் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, வலது கரத்தில் அபயம்காட்டி, இடது கரத்தை இடுப்பில் ஊன்றியவாறு உள்ளது.
  • இதேபோல, சமண தீர்த்தங்கரரின் சிற்பம் முக்குடையின்கீழ் இருபுறமும் சாமரதாரிகள் சாமரம் வீச அமர்ந்த கோலத்தில் உள்ளது.
  • இவை அனைத்தும் 9, 10-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். இவற்றின் மூலம் இப்பகுதியில் சிவன், விஷ்ணு, சமணர் ஆலயங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. 
  • மேலும், சோழர் கால கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள் வயல்வெளி முழுவதும் உடைந்து கிடக்கின்றன. சோழர் கால குடியிருப்பு இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன.
பழங்குடியின மாணவர் விடுதிக்கு ஐ.எஸ்.ஓ.,சான்றிதழ் பெற்ற முதல் மாநிலமானது ஒடிசா
  • பழங்குடியின மாணவர் விடுதிகளுக்கு ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெற்ற முதல் மாநிலமாக ஒடிசா ஆனது என மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். 
  • எஸ்.டி மற்றும் எஸ்.சி.,நலத்துறை சார்பில் மாநிலத்தில் உள்ள அனைத்து பழங்குடியின விடுதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான மிஷன் சுவித்யா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • ஐ.எஸ்.ஓ., 9001-2015 தரச்சான்றிதழை பெறும் வகையில் விடுதிகளின் தரத்தை மேம்படுத்து வதற்கான நோக்கத்தோடு விரிவான மதிப்பீடு நடத்தப்பட்டது. இதன்படி முதற்கட்டமாக கியோஞ்கர் மற்றும் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள விடுதிகள் மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
  • கியோஞ்கர் மாவட்டத்தில் உள்ள 156 விடுதிகளில் 60 ம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள 90 விடுதிகளில் 13 விடுதிகளும் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 
  • தரச்சான்றிதழ் வழங்கும் தணிக்கை குழுவினர் கியோஞ்கர் மாவட்டத்தில் 32 விடுதிகளையும், சம்பல்பூர் மாவட்டத்தில் 12 விடுதிகள் என மொத்தம் 44 விடுதிகளை பார்வையிட்டு சான்றிதழ் வழங்கி உள்ளன.
ஆண்டிபட்டியில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 13 நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே பிராதுக்காரன்பட்டி, ரோசனப்பட்டி, முத்துசங்கிலிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால சிலைகள், கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. மேலும் இப்பகுதியில் சிதிலமடைந்த நிலையில் விநாயகர், அம்மன், போகர் சிலைகள் காணப்படுகிறது. 
  • இந்த கல்வெட்டு நான்கு அடி நீலமும், ஓரு அடி அகலமும் கொண்டது. இதில் முழுமையடையாத ஏழு வரிகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தொல்பொருள் ஆய்வாளர் சி.சாந்தலிங்கம் உதவியுடன் அதில் உள்ள எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 
  • அதன்படி அதில் உள்ள எழுத்துக்கள் அப்பகுதியை ஆண்ட சிறிய தலைவனான கிளாங்குடி தேவர் தொண்டைமான் என்பவருக்கு திருப்புவன்கோன் அங்கராயன் என்ற குடிமகன் வழங்கிய பரிசு பற்றி இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
தமிழக சுகாதாரத்துறை செயலாளராக ஜெ.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றார்
  • தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்தவர் பீலா ராஜேஷ். இவர் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அவ்வப்போது அளித்து வந்தார்.
  • அதேபோலவே, சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார்.
  • தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், அவருக்கு பதில் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், மீண்டும் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கலில் ஏற்பட்ட தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது: டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
  • ஜிஎஸ்டி வரிகள் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே நிலுவையில் இருந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஊரடங்கு காரணமாக கிட்டதட்ட 2 மாதங்களாக ஜிஎஸ்ட் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் கணக்கு தாக்கல் செய்து வரி செலுத்துவதங்றகான அவகாசமும் ஜுன் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இதையடுத்து ஜுன் மாதம் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் தொழில் வர்த்தகம் முடங்கியுள்ளதால் ஜிஎஸ்டி வரிகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
  • கணக்கு தாக்கல் செய்து வரி செலுத்துவதங்றகான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜுன் மாதம் ஜிஎஸ்டி கூட்டம் நடத்துவது பயனில்லை என்றும் அதனால் ஜுலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும் அவசியம் அற்ற பொருட்கள் மீது வரியை உயர்த்த வாய்ப்பில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel