Type Here to Get Search Results !

இந்தியாவில் COVID-19 தொற்றுநோயின் பொருளாதார தாக்கம் 2020 Economic impact of the COVID-19 pandemic in India 2020 TNPSC CURRENT AFFAIRS


பொருளாதார தாக்கம் 2020  


சிறப்பு பொருளாதார தொகுப்பு அறிவிப்புகள் (12 மே - 17 மே)

12th MAY 2020

ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள்: பிரதமா் மோடி அறிவிப்பு
  • கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். 
  • இது விவசாயிகள், தொழிலாளா்கள், நோமையாக வரி செலுத்தும் நடுத்தர மக்கள், குடிசைத் தொழில் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில்துறையினருக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும். இது தொடா்பான முழு விவரத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவிப்பாா் என்றும் அவா் கூறினாா்.
  • இது தவிர, புதிய வடிவில் 4-ஆவது கட்டமாக தேசிய பொது முடக்கம் தொடரும் என்றும், இது தொடா்பாக மே 18-ஆம் தேதிக்கு முன்பு முழு விவரமும் அறிவிக்கப்படும் என்று பிரதமா் கூறினாா்.
ஆத்மனிர்பர் பாரத் அபியான்:
பிரதமர் ஒரு சிறப்பு பொருளாதாரத் தொகுப்பை அறிவித்து, ‘ஆத்மனிர்பர்’ பாரதத்திற்கு ஒரு தெளிவான அழைப்பை வழங்கினார். கோவிட் நெருக்கடியில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவை மீட்டெடுக்க பொருளாதாரத் திட்டத்துக்காக ஆத்மா நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 10% ஒதுக்கப்படும். அதன் மொத்த ஒதுக்கீடு 20 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும்’ என்று தெரிவித்தார். நிலம், தொழிலாளர், பணப்புழக்கம் மற்றும் சட்டத்துக்கும், குடிசைத் தொழில், எம்.எஸ்.எம்.இ.க்கள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கம், தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும். தொகுப்பின் வரையறைகளின் விவரம் நிதி அமைச்சரால் நாளை விளக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த சீர்திருத்தங்கள் வணிகத்தை ஊக்குவிக்கும், முதலீட்டை ஈர்க்கும், மேலும் மேக் இன் இந்தியாவை மேலும் பலப்படுத்தும், என்றார். உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் சந்தை மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலியின் முக்கியத்துவத்தை இந்த நெருக்கடி நமக்குக் கற்பித்திருப்பதை அவர் பகிர்ந்தார். “இப்போது, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நேரம். அவர்களுக்கு நாம் உறுதுணை புரிந்து குரல் கொடுப்போம். இந்த உள்ளூர் தயாரிப்புகள் உலகளாவியதாக மாற்ற இது நேரம், என்றார்.

13th MAY 2020

சிறு, குறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவிப்பு

  • கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
  • இது விவசாயிகள், தொழிலாளா்கள், நோமையாக வரி செலுத்தும் நடுத்தர மக்கள், குடிசைத் தொழில் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில்துறையினருக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும்; இது தொடா்பான முழு விவரத்தை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவிப்பாா் என்று பிரதமா் கூறியிருந்தாா்.
  • பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதம்(தன்னிறைவு இந்தியா) என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 
  • இந்தியா சுயசார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகத்திற்கு உதவிபொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகியவை வளர்ச்சியின் தூண்கள்.
  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடி பிணையில்லா கடன் அளிக்கப்படும். இதன் மூலம் 45 லட்சம் சிறு தொழில் முனைவோா் பயனடைவா். 
  • 4 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் வழங்கப்படும் இந்தக் கடன்களுக்கு, முதல் ஓராண்டு வட்டி செலுத்த வேண்டியதில்லை. இதன் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மட்டும் ரூ.50,000 கோடி கிடைக்கும்.
  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் என்பதற்கான வரையறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.1 கோடி முதலீடு, ரூ.5 கோடி விற்றுமுதல் கொண்டவை குறு நிறுவனங்கள் என்றும், ரூ.10 கோடி முதலீடு, ரூ.50 கோடி விற்றுமுதல் கொண்டவை சிறு நிறுவனங்கள் என்றும், ரூ.20 கோடி முதலீடு, ரூ.100 கோடி விற்றுமுதல் கொண்டவை நடுத்தர நிறுவனங்கள் என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடியில் திட்டம்: வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக் கடன் நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரூ.30,000 கோடி சிறப்பு நிதித் திட்டம் அறிவிக்கப்படுகிறது. 
  • இதன் மூலம் அவற்றின் கடன் அளிக்கும் திறன் மேம்படும். கடன் சந்தையில் இருந்து இந்த நிறுவனங்கள் பணத்தை திரட்ட முடியாத நிலையில் உள்ளதால் இந்த திட்டம் அறிவிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களின் பெயரில் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டப்படும். இந்த கடன் பத்திரங்களுக்கு அரசு முழு உத்தரவாதம் அளிக்கும்.
  • தொழிலாளா் வருங்கால வைப்பு நிதியாக (பி.எஃப்) இப்போது நிறுவனங்கள் சாா்பில் 12 சதவீத பங்களிப்பும், தொழிலாளா்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தமும் செய்யப்பட்டு செலுத்தப்படுகிறது. 
  • இனி அடுத்த 3 மாதங்களுக்கு இந்த இரு நிலைகளிலும் 10 சதவீதம் மட்டுமே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படும். இதன் மூலம் நிறுவனங்களுக்கு செலவு குறையும். தொழிலாளா்களுக்கு சம்பளம் சற்று கூடுதலாக கிடைக்கும். இந்த நடவடிக்கை மூலம் ரூ.6,750 கோடி கூடுதலாக புழக்கத்துக்கு வரும். இதன் மூலம் 4.3 கோடி தொழிலாளா்களும் 6.5 லட்சம் நிறுவனங்களும் பயனடையும்.
  • இது தவிர பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ் வரும் ஆகஸ்ட் மாதம் வரையிலான அடுத்த 3 மாதங்களுக்கு குறைவான ஊதியம் பெறுவோருக்கான முழு வருங்கால வைப்பு நிதியை (24 சதவீதம்) அரசே செலுத்த இருக்கிறது. 
  • ஏற்கெனவே இத்திட்டத்தை அரசு கடந்த மூன்று மாதங்களாக செயல்படுத்தி வந்தது. இப்போது மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 72.22 லட்சம் தொழிலாளா்களும், அவா்களுக்கு பணி அளித்துள்ள 3.67 லட்சம் சிறு நிறுவனங்களும் பயனடையும் என்றாா் அவா்.
  • வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், 'வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கூடுதலாக 3 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது. 
  • இதேபோல் ஊதியம் அல்லாத பிற நிதி செலுத்துதலின்போது பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ், டிசிஎஸ் போன்றவை இப்போதுள்ள அளவில் இருந்து 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. இது வியாழக்கிழமை (மே 14) முதல் அமலுக்கு வருகிறது. 
  • 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை இந்த சலுகை தொடரும். ஒப்பந்த பணிகளுக்கு வழங்கப்படும் தொகை, வட்டி, வாடகை, பங்கு ஈவுத் தொகை, தரகுத் தொகை உள்ளிட்டவற்றுக்கு இந்த சலுகை பொருந்தும். இதன் மூலம் மக்கள் கைகளில் ரூ.50,000 கோடி அளவுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்' என்றாா்.
  • வரி தொடா்பான பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக அறிவிக்கப்பட்ட 'விதேசி விஸ்வாஸ்' திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு அதாவது 2020 டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
  • கட்டுமானத் துறையினருக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அவா்கள் மேற்கொண்டு வரும் கட்டுமான பணிகளை முடிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. இது தொடா்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கட்டுமானத் துறை கண்காணிப்பு அமைப்புகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளிக்கும். 
  • கரோனா நோய்த்தொற்று பிரச்னையால் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ள காரணத்தால் இந்த சலுகை அளிக்கப்படுகிறது. கட்டுமானத் துறை கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் (ரெரா) கீழ் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் திட்டங்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
  • ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, மத்திய பொதுப் பணித் துறை உள்ளிட்ட மத்திய அரசு ஒப்பந்ததாரா்கள் மேற்கொண்டு வரும் ஒப்பந்தப் பணிகளை முடிக்க மேலும் 6 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
  • பொதுத் துறை நிறுவனங்களான மின் நிதி நிறுவனம், கிராப்புற மின் வசதி நிறுவனம் மற்றும் மின் உற்பத்தி, பகிா்மான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. அவற்றுக்கு ரூ.94,000 கோடி நிதி அளிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு ரூ 7,500 கோடி கடன் வழங்கியது பிரிக்ஸ் வங்கி
  • இந்தியாவின் கொரோனா நிவாரண பணிகளுக்காக, 'பிரிக்ஸ்' நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.
  • கடந்த, 2014ல், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய, 'பிரிக்ஸ்' நாடுகள் இணைந்து, புதிய வளர்ச்சி வங்கியை துவக்கின.
  • சீனாவின் ஷாங்காய் நகரில் செயல்பட்டு வரும் இவ்வங்கியின் தலைவராக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைவர், கே.வி.காமத் நியமிக்கப்பட்டார். 
  • உறுப்பு நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வளர்ச்சி திட்டத்திற்காக, பிரிக்ஸ் வங்கி கடன் வழங்கி வருகிறது. இவ்வங்கி, இந்தியாவின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, 7,500 கோடி ரூபாய் கடன் வழங்கிஉள்ளது.
உள்நாட்டு பொருட்கள் மட்டும் விற்பனை சுதேசி மயமானது ராணுவ, கேன்டீன்
  • சி.ஆர்.பி.எப்., மற்றும் பி.எஸ்.எப்., உள்ளிட்ட துணை ராணுவ படையினருக்கான, 'கேன்டீன்'களில், ஜூன், 1ம் தேதி முதல், உள்நாட்டில் தயாரான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்,'' என, உள்துறை அமைச்சர், அமித் ஷா அறிவித்துள்ளார். 
  • கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டெழுவது குறித்து, பிரதமர், நரேந்திர மோடி, நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, 'மக்கள் உள்ளூர் தயாரிப்புகளை வாங்க வேண்டும்' என, கூறினார்.
  • இதை பின்பற்றி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட, பல்வேறு துணை ராணுவ படையினரின் கேன்டீன்களில், ஜூன், 1ம் தேதி முதல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என, மத்திய உள்துறை அறிவித்துள்ளது.
14th MAY 2020
2ம் கட்டமாக கடன் சலுகைகளை அறிவித்தார் மத்திய நிதியமைச்சர்: விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி


புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்:
  • 8 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம், 1 கிலோ பருப்பு அடுத்த இரு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதற்கான ரூ.3,500 கோடி செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். 
  • இத்திட்டதை செயல்படுத்துவது, புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அடையாளம் காண்பது, அவா்களுக்கு உணவு தானியங்களை விநியோகிப்பது ஆகிய பணிகளை மாநில அரசு மேற்கொள்ளும். ரேஷன் காா்டுகள் இல்லாத புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவாா்கள்.
ஒரே நாடு-ஒரே ரேஷன் காா்டு' திட்டம்:
  • ஒரே ரேஷன் காா்டு: 'ஒரே நாடு-ஒரே ரேஷன் காா்டு' திட்டம் அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்தில் முழுமையாக அமல்படுத்தப்படும். அப்போது ரேஷன் காா்டை பயன்படுத்தி நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் உணவு தானியத்தைப் பெற முடியும். வரும் ஆகஸ்ட் மாதத்தில் 83 சதவீதம் போ ஒரே ரேஷன் காா்டு திட்டத்துக்குள் வந்துவிடுவாா்கள்.
  • விவசாய கடன் சலுகை: 25 லட்சம் புதிய கிஸான் கடன் அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் ரூ.25,000 கோடி கடன் அளிக்கப்படவுள்ளது. இது தவிர ஏற்கெனவே கிஸான் கடன் அட்டைகள் வைத்துள்ள 2.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் குறைந்த வட்டியில் அளிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் மீனவா்கள், கால்நடை வளா்ப்போரும் பயனடைவாா்கள்.
  • இது தவிர மே, ஜூன் மாத காரீப் பருவ சாகுபடிக்கு உதவும் வகையில் நபாா்டு வங்கி மூலம் ரூ.30,000 கோடி அவசர கால கடன் வழங்கப்படும். கிராமப்புற கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் முலம் இந்தக் கடன் அளிக்கப்படும்.
  • ஏற்கெனவே, ரூ.4 லட்சம் கோடி வரை கடன் பெற்றுள்ள 3 கோடி சிறு விவசாயிகளுக்கு 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை அளிக்கப்படுகிறது. கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் 63 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.86,600 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது.
  • சாலையோர வியாபாரிகளுக்காக ரூ.5,000 கோடி: தேசிய பொது முடக்கத்தால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் தொழில்களை இழந்துள்ளனா். அவா்களுக்காக ரூ.5,000 கோடி சிறப்பு கடன் வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தொழிலுக்கான நடைமுறை மூலதனமாக தலா ரூ.10,000 கடன் அளிக்கப்படும். அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • முத்ரா-சிசு திட்டத்தில் வட்டி சலுகை: முத்ரா- சிசு திட்டத்தின்கீழ் ரூ.50,000 வரை கடன் பெற்று முறையாக திருப்பிச் செலுத்தி வருவோருக்கு அடுத்த ஓராண்டுக்கு 2 சதவீத வட்டி குறைப்பு சலுகை கிடைக்கும். இத்திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.1,500 கோடி செலவிட இருக்கிறது. ஒருங்கிணைந்த காடுகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் ரூ.6,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
  • வீடு கட்ட வட்டி சலுகை தொடரும்: ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரையுள்ள நடுத்தர வருவாய் பிரிவினருக்கான குறைந்த விலை வீட்டுக் கடனுக்கு வழங்கப்படும் வட்டி சலுகைத் திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதற்காக ரூ.70,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • இதன் மூலம் 2.5 லட்சம் போ பயனடைவாா்கள். இத்திட்டத்தால் வீட்டு வசதி மற்றும் கட்டுமானத் துறைக்கு உத்வேகம் கிடைக்கும். இது தவிர அரசு, தனியாா் பங்களிப்புடன் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக குறைந்த வாடகையில் வீடுகள் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் நகா்புற ஏழை மக்களும் பயனடைவாா்கள். பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இவை நடைமுறைக்கு வரும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்
  • வேலைவாய்ப்பு உருவாக்கம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் கடந்த 2 மாதங்களில் ரூ.10,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்துக்கு சென்று பணியாற்றி விட்டு இப்போது சொந்த மாநிலம் திரும்பியுள்ள தொழிலாளா்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சோக்கப்படுவாா்கள். 
  • இதன் மூலம் 14.62 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். புதிதாக 2.33 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இப்போது 40 முதல் 50 சதவீதம் அளவுக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரும் பருவ காலத்திலும் தொடா்ந்து நடைமுறையில் இருக்கும்.
  • கிராம உள்கட்டமைப்பு: இது தவிர கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.4,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நகா்ப்புற ஏழைகளை இணைத்து கடந்த 2 மாதங்களில் 7,200 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 10 தொழிலாளா்களுக்கு மேல் உள்ள நிறுவனங்களுக்கு இந்திய தொழிலாளா் அரசு காப்பீட்டுத் திட்டம் (இஎஸ்ஐசி) விரிவுபடுத்தப்படும் என்று நிா்மலா சீதாராமன் அறிவித்தாா்.
கொரோனா சிக்கன நடவடிக்கை 30% சம்பளத்தை குறைத்து கொண்டார் ஜனாதிபதி
  • கொரோனா தொற்றால் நாட்டில் மக்களுக்கும், பொருளாதாரத்துக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிக்கட்ட, மத்திய அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் டிஏ குறைக்கப்பட்டுள்ளது. சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. 
  • பிரதமர், எம்பி.க்கள் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. எம்பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. 
  • இந்நிலையில், இந்த பாதிப்பில் தனது பங்களிப்பையும் வழங்குவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது சம்பளத்தை 30 சதவீதம் குறைத்து கொள்வதாக நேற்று அறிவித்தார். மேலும், ஜனாதிபதி மாளிகையில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை யும் எடுத்துள்ளார்.
  • தனது உள்நாட்டு பயணங்கள், நிகழ்ச்சிகள் குறைப்பு.
  • விருந்தினர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும்.
  • வரவேற்பு ஏற்பாடு செலவுகள் கட்டுப்படுத்தப்படும்.
  • விருந்து உணவு பட்டியல் குறைக்கப்படும்.
  • ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு பணிகள் குறைக்கப்படும்
  • காகித பயன்பாடு குறைக்கப்படும்.
  • முக்கிய விருந்தினர்கள் வருகையின் போது அவர்களை வரவேற்க ஜனாதிபதி மாளிகையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லிமோசைன் கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த காரை வாங்கும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

15th MAY 2020

விவசாயத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 3-ம் கட்ட அறிவிப்பு
  • மூன்றாம்கட்ட அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய நிர்மலா சீதாராமன், " மூன்றாம்கட்ட அறிவிப்புகள் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி போன்றவை தொடர்புடையது.
  • இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அனைத்து துன்பங்களையும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சகித்துக்கொண்டுள்ளனர். விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம்பெற உள்ளன. 
  • குளிர்பதனக் கிடங்கு, விவசாயப் பொருள்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம்பெறும். 8 அறிவிப்புகள் வேளாண் உள்கட்டமைப்புக்கானதாக இருக்கும். மீதமுள்ள 3 அறிவிப்புகள், மேலாண்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தம் தொடர்பானதாக இருக்கும்.
  • பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னோடியான நாடாக உள்ளது. லாக்டெளன் காலத்தில், இந்தியாவில் பால் தேவை 20- 25 சதவிகிதம் குறைந்துள்ளது. தினமும் 360 லட்சம் லிட்டர் பால் தேவை என்கிற நிலையில், ஊரடங்கின்போது தினமும் 560 லட்சம் லிட்டர் பால் உற்பத்திசெய்யப்பட்டது. 
  • கூடுதலாக உற்பத்திசெய்யப்பட்ட பால், சுமார் 4,100 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு, ஆண்டுக்கு 2 சதவிகிதம் வட்டி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. 
  • இதன்மூலம் கூடுதலாக 5,000 கோடி பணப்புழக்கம் ஏற்படும். இதனால் 2 கோடி விவசாயிகள் பலனடைவார்கள். கரும்பு உற்பத்தி மற்றும் மீன் பிடித் தொழிலிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.
  • விவசாயிகள் பயன்பெற நேரடி கொள்முதல் செய்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்படும். 
  • இதன்மூலம், சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் சர்வதேச தரத்தில் செயல்பட உதவியாக இருக்கும். 2 லட்சம் சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் பலன் அடையும். தமிழகத்தின் மரவள்ளிக்கிழங்கு, உத்தரப்பிரதேசத்தின் மாம்பழம், காஷ்மீரின் குங்குமப்பூ, ஆந்திராவின் மிளகாயும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்.
  • பிரதமரின் மட்ஸ்சய சம்பதா யோஜனா திட்டத்தில் (Pradhan Mantri Matsya Sampada Yojana) மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. கடல் மற்றும் உள்நாட்டு மீன்வளத் துறையில் 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குதல். 
  • இதன்மூலம் இந்தியாவின் ஏற்றுமதியில் 1 லட்சம் கோடி பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த தரத்தில் மீன்பிடி கப்பல்கள், துறைமுகங்கள், மீனவர்களுக்கும், படகுகளுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள். 
  • இந்த புதிய திட்டங்களின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் மீன் உற்பத்தி 70 லட்சம் டன் அளவிற்கு உயரும். கடல் மீன்பிடிப்பு, உள்ளூர் நீர் நிலைகளில் மீன்பிடிப்புகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடியில் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.9,000 கோடியில் திட்டங்கள்.
  • தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டம் 13,343 கோடியில் செயல்படுத்தப்படும். இதன்மூலம், கால்நடைகளுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி போடப்படும். கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ரூ.15,000 கோடி ஒதுக்கீடு.
  • மூலிகை சாகுபடியை ஊக்குவிக்க ரூ 4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மூலிகை சாகுபடியில் ஈடுபடும் உள்ளூர் விவசாயிகளுக்கு, ரூ. 5000 கோடி வருமானம் கிடைக்கும். கங்கை நதியின் இருபுறமும் 800 ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை மற்றும் மருத்துவத் தாவரங்கள் வளர்க்கப்படும். 
  • தேனீ வளர்ப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. இந்தத் திட்டத்தின்மூலம் நாடு முழுவதும் உள்ள 2லட்சம் தேனீ வளர்ப்பாளர்களின் வருவாய் அதிகரிக்கும். இந்தத் திட்டத்தில் உள்கட்டமைப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி ஆகியவை அடங்கும்.
  • தக்காளி, வெங்காயம், உருளை விவசாயிகளுக்கான வசதிகள் விரிவுப்படுத்தப்படும். அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கான வசதிகள் விரிவுப்படுத்தப்படும். விநியோக சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். 
  • பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு விவசாயப் பொருள்களை அனுப்பினால், 50 சதவிகிதம் போக்குவரத்து மானியம். அதுபோல் பொருள்களைச் சேகரிக்கவும் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். விவசாய விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
இந்தியாவிற்கு கூடுதலாக ரூ.7,500 கோடி: உலக வங்கி அறிவிப்பு
  • ந்தியாவுக்கு, மேலும், 7,500 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.கடந்த மாதம், கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான இந்திய சுகாதார துறை நடவடிக்கைகளுக்கு, உலக வங்கி, 7,500 கோடிரூபாய் கடன் வழங்கியது. 
  • தற்போது, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, நகர்ப்புற ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் நலனுக்காக, சமூக பாதுகாப்பு தொழில்நுட்ப நிதியத்தின் கீழ், மேலும், 7,500 கோடி ரூபாய் கடன் வழங்குவதாக, உலக வங்கி அறிவித்துள்ளது.
  • இதன் மூலம், கொரோனா அவசர உதவி திட்டத்தின் கீழ், உலக வங்கி, இந்தியாவுக்கு, மொத்தமாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
16th MAY 2020

பாதுகாப்பு, அணுசக்தி, இஸ்ரோ, நிலக்கரி, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தனியார் முதலீடு: மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு
  • பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான ரூ.20 லட்சம் கோடி நிதிச் சலுகை அறிவிப்புகளை, தொடர்ந்து 4வது நாளாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 
  • இதில், பாதுகாப்பு, மின்சாரம், இஸ்ரோ, அணுசக்தி, நிலக்கரி உள்ளிட்ட 8 முக்கிய துறைகளில் தனியார் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
  • கொரோனா ஊரடங்கு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 'ஊரடங்கால் சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க, ரூ.20 லட்சம் கோடிக்கான நிதிச் சலுகைகள் அறிவிக்கப்படும்,' என்று தெரிவித்தார். 
  • அதன்படி, அதற்கு மறுநாள் புதன் கிழமையில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு, இந்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை 'தற்சார்பு இந்தியா திட்டம்' என்ற பெயரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் படிப்படியாக அறிவித்து வருகிறார்.
  • முதல் நாளில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான 15 அம்ச திட்டங்களையும், 2ம் நாளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், சாலையோர வியாபாரிகள் பயன் பெறும் திட்டங்களையும், 3ம் நாளில் விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான 11 அம்ச திட்டங்களையும் அவர் அறிவித்தார். 
  • இதைத் தொடர்ந்து, 4ம் நாளான நேற்று, கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி (இஸ்ரோ), அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய 8 முக்கிய துறைகளில் தனியார் முதலீடுகளை அனுமதிப்பதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார். 
  • அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:நிலக்கரி: நிலக்கரி இறக்குமதியை குறைந்து உள்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்க, இத்துறையில் போட்டி, வெளிப்படைத்தன்மை மற்றும் தனியார் பங்களிப்பை அதிகரிக்க பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
  • வணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். இதற்காக நிலக்கரி துறையின் கட்டமைப்பை மேம்படுத்த ₹50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • நிலக்கரி சுரங்க ஏல முறை, வருவாய் பங்கீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றப்படும். டன் ஒன்றுக்கு இவ்வளவு என்ற கட்டணம் நிர்ணய முறை நீக்கப்படும். யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கேற்று நிலக்கரிச் சுரங்கங்களை வாங்கவும், அதை திறந்தவெளிச் சந்தைகளில் விற்கவும் முடியும்.
  • நிலக்கரி சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் எரிவாயுவும் ஏலத்தில் விடப்படும். 
  • கனிமங்கள்: கனிம சுரங்கங்களில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க 500 கனிம சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும். அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்சைட் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும். சுரங்க துறையை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
  • கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். கனிம வளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.
  • விமான போக்குவரத்து: இந்திய வான் எல்லையை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இதன் மூலம் விமானங்களை இயக்குவதற்கான செலவை ₹1,000 கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட 6 விமான நிலையங்களில் 3 விமான நிலையங்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திற்கு ₹2,300 கோடி நிதி உதவி கிடைக்கும்.
  • 12 விமான நிலையங்களில் தனியார்கள் கூடுதல் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். இதன் மூலம், ₹13,000 கோடி வரையில் முதலீடு கிடைக்கும். 2ம் கட்டமாக மேலும் 6 விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்க தேர்வு செய்யப்படும்.
  • சமூக உள்கட்டமைப்புத் திட்டங்கள்: சமூக உள்கட்டமைப்பு தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்படும். இதற்கான திட்டம் விரைந்து முடிக்கப்படும். இதற்காக ₹8,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்காக அரசு தரப்பிலிருந்து தரப்படும் 20 சதவீத நிதியுதவி 30 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
  • விண்வெளி: விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு ஊக்கப்படுத்தப்படும். செயற்கை கோள், ஏவுதல் மற்றும் விண்வெளி தொடர்பான சேவைகளில் தனியார் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் மேம்படுத்தப்படும்.
  • இஸ்ரோவின் வெற்றிப் பயணத்தில் தனியார் துறையின் பங்களிப்பும் இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் வசதிகளைப் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வழிவகை செய்யப்படும்.
  • அணுசக்தி: மருத்துவ ஐசோடோப்புகளை உற்பத்தி செய்வதற்காக அரசு - தனியார் பங்களிப்புடன் ஆய்வு உலை அமைக்கப்படும். வேளாண் சீர்திருத்தங்களுக்காகவும், விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், உணவு பாதுகாப்பிற்காக கதிர்வீச்சு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தனியார் துறையினருக்கு அனுமதி அளிக்கப்படும்.
  • அணுசக்தி தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் ஸ்டார்ட் அப் தொழிற்சூழலை இணைக்க, தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும். இதன் மூலம் ஆய்வு அமைப்புகளுக்கும், தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கும் இடையே இணைப்பை உருவாக்க முடியும்.
  • புதுச்சேரி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். இதன்மூலம், மின்சார விநியோகம் மேம்படுவதுடன் அதன் தரமும் உயரும்.
  • மின் பகிர்மான நிறுவங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படும். மின்சார விநியோக முறைகேடுகளுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மின்விநியோகப் பணி கண்காணிக்கப்படும்.
  • மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம் ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவடைய சீர்த்திருத்தம் செய்யப்படும். குறிப்பிட்ட சில ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதித்து உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கு 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இது இறக்குமதி செலவை பெருமளவு குறைக்க உதவும்.
  • ராணுவ தளவாடங்கள் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்படும்
17th MAY 2020

மாநிலங்களுக்கான கடன் வரம்பு அதிகரிப்பு, ஊரக வேலைத் திட்டத்துக்கு கூடுதல் நிதி: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
  • மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு அதிகரிப்பு, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி, புதிய திவால் சட்ட நடவடிக்கைகள் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு, அத்தியாவசியம் அல்லாத பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவது உள்ளிட்ட அறிவிப்புகளை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா்.
  • மாநில அரசுகள் தங்கள் மொத்த உற்பத்தியில் 3 சதவீதம் வரை கடன் பெற முடியும். அதன்படி, மாநில அரசுகள் நிகழ் நிதியாண்டில் ரூ.6.41 லட்சம் வரை கடனுதவி பெற முடியும். அதில், 14 சதவீதத்தை மட்டுமே மாநில அரசுகள் பயன்படுத்தி வந்தன. 
  • இருப்பினும், இந்தக் கடன் வரம்பை உயா்த்த வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, மாநில அரசுகளின் கடன் வரம்பை நிகழ் நிதியாண்டில் மட்டும் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயா்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
  • இதன் மூலம் மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.4.28 லட்சம் கோடி கடன் கிடைக்கும். இவ்வாறு கிடைக்கும் கூடுதல் நிதியானது, ஒரே நாடு- ஒரே ரேஷன் காா்டு திட்டம், தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, தடையற்ற மின்விநியோகம், உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவது ஆகிய 4 பிரிவுகளில் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயம்: அரசின் சுயச்சாா்பு திட்டப்படி, பொதுத் துறை நிறுவனங்களுக்கான புதிய சீா்திருத்தக் கொள்கை உருவாக்கப்படும். அதன்படி, முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பங்களிப்பு செலுத்தும் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே அரசின் வசம் இருக்கும். 
  • முக்கிய துறைகளில் அதிகபட்சமாக நான்கு பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே அரசிடம் இருக்கும். மற்ற அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் தனியாா்மயமாக்கப்படும். அரசின் சுயச்சாா்பு திட்டத்தை செயல்படுத்த அனைத்து துறைகளிலும் தனியாா் பங்களிப்பை அனுமதிக்க வேண்டியுள்ளது. எந்தெந்த நிறுவனங்கள் அரசின் வசம் இருக்கும் என பின்னா் அறிவிக்கப்படும்.
  • ஓராண்டுக்கு திவால் நடவடிக்கைகள் இல்லை: கரோனா காலத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் வகையில் திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 
  • அதன்படி, ரூ.1 கோடி வசூல் செய்ய வேண்டிய நிறுவனங்கள் மட்டுமே திவாலானதாக அறிவிக்கப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 
  • தற்போது, இந்தக் கடன் வரம்பு ரூ.1 லட்சமாக உள்ளது. மேலும், திவாலாகும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அவகாசம் ஓராண்டாக உயா்த்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, விரைவில் திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு அவசரச் சட்டம் இயற்றப்படும்.
  • இதேபோல், நிறுவனங்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறு தொழில்நுட்பக் குறைகள், நடைமுறை தவறுகள், அறிக்கைகள்-வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்வதில் தாமதம் போன்றவை குற்றமாகக் கருதப்படாது. அதன்படி, 7 வகையான குற்றங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 5 வகையான குற்றங்களாகக் குறைக்கப்படும்.
  • தனியாா் நிறுவனங்கள் மத்திய அரசின் ஒப்புதலைப் பெறாமலேயே வெளிநாட்டுப் பங்குச் சந்தைகளில் பட்டியலிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • ஊரக வேலைத் திட்டத்துக்கு ரூ.40,000 கோடி கூடுதல் நிதி: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ஏற்கெனவே பட்ஜெட்டில் ரூ.61,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தத் திட்டத்துக்காக கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊா் திரும்பிய தொழிலாளா்களுக்கு ஊரக வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் கூடுதலாக இந்த நிதி ஒதுக்கப்படுகிறது.
  • மருத்துவத் துறையில் முதலீடு: சுகாதாரத்துக்கான பொது செலவினம் அதிகரிக்கப்படும். கீழ்நிலை அளவில் மருத்துவம் சாா்ந்த கல்வி நிறுவனங்களில் கூடுதலாக முதலீடு செய்யப்படும்.
  • இணையவழிக் கல்வி ஊக்குவிப்பு: இணையவழிக் கல்வி முறை விரைவில் தொடங்கப்படும். அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனி தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்படும். 100 முன்னணி பல்கலைக்கழகங்கள் இணையவழி படிப்புகளை தொடங்குவதற்கு வரும் 30-ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்கப்படும்.
  • இ.பி.எஃப். தொகை ரூ.3,360 கோடி அளிப்பு: பொதுமுடக்கம் அமலுக்கு வந்த பிறகு அமைப்பு சாா்ந்த தொழிலாளா்களின் துயரத்தை தணிக்கும் விதமாக, அவா்களின் ஓய்வுக்கால சேமிப்பான வருங்கால வைப்பு நிதியில் (இ.பி.எஃப்.) இருந்து 75 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, கடந்த 2 மாதங்களில் 12 லட்சம் தொழிலாளா்கள், ரூ.3,360 கோடி வரை பெற்றுள்ளனா்.
  • ரிசா்வ் வங்கியின் அறிவிப்புகள்: வங்கிகளின் ரொக்க இருப்பை உறுதிசெய்யவும் பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் கடந்த மாா்ச் மாத இறுதியில் இருந்து ரிசா்வ் வங்கி ரூ.8.01 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகளும் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதாரத் திட்டத்தில் அடங்கும்.
Lockdown Phase 4 (18 May – 31 May)

தேசிய பொது முடக்கம் மே 31 வரை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு
  • கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமானதை அடுத்து நாடு முழுவதுமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை முதல்கட்டமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
  • நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் ஏப்ரல் 15 முதல் மே 3-ஆம் தேதி வரை 2-ஆம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எனினும், கரோனா பாதிப்பு தீவிரமாக இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகு பொது முடக்க கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அளிக்கப்பட்டன. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சில தொழில் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
  • பின்னா், கரோனா பாதிப்பை தொடா்ந்து கட்டுக்குள் வைக்க 3-ஆவது கட்டமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மே 4 முதல் 17-ஆம் தேதி வரை அந்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதுவும் நிறைவடைந்த நிலையில் தற்போது 4-ஆம் கட்டமாக மே 18 முதல் 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
  • வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும். மருத்துவ காரணங்களுக்காக இயக்கப்படும் விமான ஆம்புலன்ஸ்கள் இயங்கத் தடையில்லை. மெட்ரோ ரயில்கள் 31-ஆம் தேதி வரை இயக்கப்படாது.
  • பேருந்து போக்குவரத்து: மாநிலங்களுக்கு இடையே பயணிகள் வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றை இயக்குவது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களிடையேயான பரஸ்பர ஒப்புதல் மூலமாக மேற்கொள்ளலாம்.
  • மாநிலத்துக்குள் போக்குவரத்தை அனுமதிப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்துகொள்ளலாம். தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிா்த்து, இதர இடங்களில் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
  • கல்வி நிறுவனங்கள்: பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்டவை தொடா்ந்து மூடப்பட்டிருக்கும். இணையவழி கற்பித்தல், தொலைதூரக் கல்வி நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
  • ஹோட்டல்கள், உணவகங்களுக்கு முந்தைய கட்டுப்பாடுகளே தொடரும். வீட்டிற்கே சென்று உணவு வழங்கும் நடைமுறைகள் அனுமதிக்கப்படுகின்றன.
  • திரையரங்குகள், வா்த்தக வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள், மதுக் கூடங்கள் போன்றவை செயல்பட அனுமதியில்லை. விளையாட்டரங்கங்கள், மைதானங்களை திறக்கலாம்; ஆனால், பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
  • வழிபாட்டுத் தலங்கள்: அனைத்து விதமான சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கும். மத ரீதியிலான நிகழ்ச்சிகளுக்காக கூடுவதற்கு கண்டிப்பாக அனுமதியில்லை.
  • தீவிர கரோனா பாதிப்பு காரணமாக தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வா்த்தக வளாகங்களில் உள்ள கடைகள் தவிர இதர கடைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. 
  • அந்தக் கடைகள் தங்களது வாடிக்கையாளா்களிடையே 6 அடி இடைவெளி இருப்பதையும், ஒரே நேரத்தில் கடைக்குள் 5-க்கும் மேற்பட்ட நபா்கள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • இரவு ஊரடங்கு: மக்கள் நடமாட்டத்துக்கு இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய காரணங்களுக்காக செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும். ஊரடங்கை உறுதி செய்ய 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.
  • மாநிலங்களே முடிவெடுக்கலாம்: மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ள நெறிமுறைகள் அடிப்படையில் கரோனா பாதிப்பை மதிப்பீடு செய்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வரையறுத்துக்கொள்ளலாம்.
  • தடை செய்யப்பட்ட இடங்களில் அத்தியாவசியமான நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். அங்கு மக்கள் போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். அத்தியாவசிய பொருள்கள் போக்குவரத்துக்கு அனுமதி உண்டு. தடை செய்யப்பட்ட பகுதிகளில் தொடா்பறிதல், கண்காணிப்பு, பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
  • முதியவா்கள், கா்ப்பிணிகள், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், ஏற்கெனவே இதர நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் போன்றோா் கரோனா பாதிப்பு அபாயத்தை தவிா்க்க அவசியமின்றி வெளியே வரக் கூடாது.
  • பொது இடங்கள், பணியிடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். பொது இடங்களில் எச்சில் உமிழ்வோருக்கு அபராதத்துடன் தண்டனை வழங்கப்படும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
  • திருமணங்களில் 50 பேருக்கு மேலும், இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேலும் கூடுவதற்கு அனுமதி இல்லை. அலுவலகங்களுக்கு வரும் பணியாளா்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். 
  • அவா்களுக்கு கை சுத்திகரிப்பான், கை கழுவுவதற்கான திரவங்கள் வழங்க வேண்டும். பணியிடங்கள் அவ்வப்போது கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பீடுகள் GDP:

  • மார்ச் 27 அன்றுமூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை 5.3% முதல் 2.5% வரை குறைத்ததுஃபிட்ச் மதிப்பீடுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கான மதிப்பீட்டை 2% ஆக மாற்றியமைத்தனஇந்தியா மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சி FY21 மதிப்பீட்டை 3.6% ஆக குறைத்தது.
MPLADS இன் இடைநீக்கம்:

  • கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மோடி அரசுநாடாளுமன்ற உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் (எம்.பி.எல்..டி.எஸ்உறுப்பினர்களை இரண்டு ஆண்டுகள் இடைநீக்கம் செய்ததுஇந்த நடவடிக்கை பல வழிகளில் சிக்கலானது என்று அழைக்கப்படுகிறதுஇதில் அதிகாரத்தை மையப்படுத்துதல்இயற்கையில் கூட்டாட்சி விரோதமாக இருப்பதுமற்றும் உள்ளூர் அளவிலான வளர்ச்சி மற்றும் சமூகத்தின் மைக்ரோ மட்டங்களில் எம்.பி. ] அதற்கு பதிலாக டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் 20,000 கோடி (2.8 பில்லியன் அமெரிக்க டாலர்மறுவடிவமைப்பை நிறுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

22nd & 23rd APRIL 2020

பொருளாதார வளர்ச்சி 1.8 சதவீதம்தான் கணிப்பில் தகவல்
  • கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆசிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு தொடர்பாக, ஐஎம்எப் உட்பட பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் கணிப்பு வெளியிட்டு வருகின்றன. 
  • இதன்படி, நடப்பு 2020-21 நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.8 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது.
கரோனா ஊரடங்கு கரீப் கல்யாண் நிவாரணம்: 33 கோடி பேருக்கு ரூ.31235 கோடி: மத்திய அரசு நடவடிக்கை
  • கரோனா தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
  • பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் பெண்கள், ஏழைகள், மூத்த குடிமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரொக்கமாகப் பணம் வழங்குதல், இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டங்களை அரசு அறிவித்தது.
  • இந்தத் தொகுப்பு நிவாரணத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படுவதை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிக்கின்றன. 
  • உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு, நிவாரண உதவிகள் சென்று சேருவதை உறுதிசெய்வதற்கு, நிதியமைச்சகமும், தொடர்புடைய அமைச்சகங்களும், அமைச்சரவைச் செயலகமும், பிரதமர் அலுவலகமும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
  • பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 22 ஆம் தேதி வரையில் பயனாளிகளுக்கு பின்வரும் நிதி உதவிகள் (ரொக்கமாக) வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
  • பயனாளிகளுக்கு விரைவாக, நல்ல முறையில் பணம் செலுத்துவதற்காக Fintech மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. நேரடியாக பயனாளி கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தில் (DBT), பயனாளிகளின் கணக்கிற்கே பணம் செலுத்தப்படுவதால், தவறானவர்களின் கைகளுக்குப் பணம் போய்விடாமல் தடுக்கப்பட்டு, திட்டத்தின் செயல் திறன் அதிகரிக்கப் படுகிறது. பயனாளி, வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், நேரடியாக அவருடைய கணக்கில் பணம் செலுத்துவது உறுதி செய்யப்படுகிறது.
  • ப்ரல் மாதத்துக்கான ஒதுக்கீடு 40 லட்சம் மெட்ரிக் டன்கள் என்ற நிலையில், இதுவரையில் 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் 40.03 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் பெறப்பட்டுள்ளது. 
  • 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.19 கோடி ரேஷன் அட்டை வைத்திருக்கும், 39.27 கோடி பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களாக 19.63 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 1,09,227 மெட்ரிக் டன் அளவுக்கு பயறு வகைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  • பிரதமரின் உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் மொத்தம் 3.05 கோடி சிலிண்டர்களுக்குப் பதிவு செய்யப்பட்டு, 2.66 கோடி இலவச சிலிண்டர்கள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிலுவையில் 75% அல்லது 3 மாத சம்பளம், இவற்றில் எது குறைவோ அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத முன்பணமாகப் பெறும் வசதி
  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் 6.06 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் ரூ.1954 கோடி எடுத்துள்ளனர்.
  • 3 மாதங்களுக்கு ஈ.பி.எப். பங்களிப்பு: 100 பேருக்கும் குறைவான தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக மாதச் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தில் 24 சதவீதத்துக்கான தொழிலாளர் ஈட்டுறுதி சந்தா பங்களிப்பு 3 மாதங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தில் 2020 ஏப்ரல் மாதத்துக்கான பங்களிப்பாக அரசு ஏற்கெனவே ரூ.1000 கோடி அளித்துள்ளது. இதன் மூலம் 78.74 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். இதற்கான அறிவிப்பு, அடிக்கடி எழும் கேள்விகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
  • இதுவரையில் 10.6 லட்சம் தொழிலாளர்கள் ரூ.162.11 கோடி அளவுக்குப் பயன் பெற்றுள்ளனர். 68,775 நிறுவனங்களுக்கு இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 01.04.2020 தேதியில் இருந்து ஊதியம் அதிகரிப்பு குறித்து அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 1.27 கோடி மனித உழைப்பு நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் பொருட்கள் நிலுவையை அளிக்கும் வகையில் ரூ.7300 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் பணிபுரியும் சுகாதார அலுவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டம். 22.12 லட்சம் சுகாதார அலுவலர்கள் பயன்பெறும் வகையிலான இந்தத் திட்டத்தை நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் அமல்படுத்துகிறது.
  • மொத்தமாக வழங்கப்பட்ட நிதியில் ரூ.16,146 கோடி பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் முதலாவது தவணைக்காக அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 8 கோடி பேருக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் தலா ரூ2000 செலுத்தப் பட்டுள்ளது.
  • இந்தியாவில் பெரும்பாலான வீடுகளை பெண்கள் தான் நிர்வகித்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் 20.05 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்குகளில் தலா ரூ.500 செலுத்தப் பட்டுள்ளது. 22 ஏப்ரல் 2020 தேதியின்படி இந்தத் தலைப்பில் மொத்தம் ரூ.10,025 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் 2.82 கோடி முதியோர், விதவையர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,405 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயனாளிக்கும் முதலாவது தவணையாக ரூ.500 வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் மற்றொரு தவணையாக தலா ரூ.500 வழங்கப்படும்.
  • கட்டடம், இதர கட்டுமானத் தொழிலாளர்கள் 2.17 கோடி பேருக்கு, கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நிதியில் இருந்து உதவித் தொகை அளிக்கப் பட்டுள்ளது. இத் திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.3,497 கோடி அளிக்கப் பட்டுள்ளது.
இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பு :தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பு 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்தியப் பொருளாதாரம் 0.9 சதவீத வீழ்ச்சியை அடைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டு, முதலீடு குறைந்து, நுகர்வுத் தேவையும் சரிந்துள்ளது. இந்தியக் குடும்பங்களின் வருமானமும் முற்றிலும் இல்லாமல் போயுள்ளது.

கோவிட் 19 நோய்க்கு எதிரான போரில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளின் பங்கு: 

 

· கோவிட் 19 அல்லது கொரோனா வைரஸ் நோய் என்றும் அழைக்கப்படும் நோய்உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களையும் அங்குமிங்குமாகதிக்கு திசையின்றி ஓடச் செய்து கொண்டிருக்கிறதுஉலக அளவுகோலின்படிஇந்தக் கட்டுரை எழுதப்படும் காலம் வரை பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஏற்கனவே இரையாகியுள்ளார்கள்இந்த எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்இந்த எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறதுஇந்தியாவில் இதுவரை 3000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

· சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர்இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூத்த விஞ்ஞானி திருமிகு ஜோதி ஷர்மாவும்சர்வதேச இருதரப்பு ஒத்துழைப்புப் பிரிவுக்கான தலைவர் திருமிகு எஸ்கேவர்ஷினி அவர்களும் எழுதியுள்ள இந்த சிறப்புக் கட்டுரையில் கோவிட் 19 நோய்க்கு எதிராகஇந்திய விஞ்ஞானிகளும்அமைப்புகளும்மேற்கொண்டுவரும் முயற்சிகளைக் குறித்து விவரமாக எடுத்துக் கூறியுள்ளார்கள்இந்த நோய்க்கு எதிராகஒரு நோய்த் தடுப்பு மருந்தைக் கண்டறிய வேண்டும் என்ற ஆய்விற்காகஉலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு அறிவியலாளர்களையும்ஆராய்ச்சியாளர்களையும்அறிஞர்களையும் உலக சுகாதார நிறுவனம் ஒன்று திரட்டியுள்ளது. 

· உலக சுகாதார நிறுவனத்தில்இந்தியாஇதுதொடர்பாக,பெரும் பங்காற்றி வருகிறதுஇது மட்டுமல்லாமல்கோவிட் 19 நோய்க்கு எதிரான போராட்டத்தில்”‘கோவிட்19 நோய்க்கு எதிரான கூட்டுப்போராட்டம் (crowd fighting) மூலமாகஉலகம் முழுவதுமிருந்துபல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள்தங்களுடைய நிபுணத்துவத்தையும்நேரத்தையும்உதவியையும் அளித்து வருகிறார்கள்ட்விட்டர்முகநூல்லிங்க்டு இன் போன்ற பல்வேறு சமூக வலைதளங்கள் மூலமாகவும் தொடர்பு கொண்டுஆராய்ச்சியாளர்கள் தாங்களாகவே முன்வந்துதங்களது சேவையை அளித்து வருகிறார்கள். 

· அடுத்த 12 முதல் 18 மாதகாலத்திற்குஎந்த ஒரு நோய்த் தடுப்பு மருந்தும் கண்டறியப்பட முடியாது என்ற கருத்து இதுவரை நிலவும் இன்றைய சூழ்நிலையில்இந்த அபாயகரமானஉயிர்க்கொல்லி வைரஸிடமிருந்து மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது போலத் தோன்றுகிறதுஇந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் (ரெஸ்பான்ஸ் மெக்கானிசம்இந்த நோயைக் கையாள்வது குறித்து உண்மையானஉலக அளவிலான கருத்தொற்றுமை எதுவும் ஏற்படவில்லைஒவ்வொரு தேசமும் தன்னுடைய குடிமக்களைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரைதாங்களாகவே முடிவெடுத்து செயல்பட்டுக் கொண்டு வருகின்றனஇந்தியாவின் துரித நடவடிக்கை 130 கோடி மக்களை தன் நெஞ்சில் சுமந்து கொண்டுள்ள இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதலைப் பற்றியும்இந்தியா இந்நோய்க்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. 

· இந்த நோய்க்கு எதிராகஇந்தியா தனது ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டிபிரதமர் திரு நரேந்திர மோதி தலைமையின் கீழ்இந்நோய்க்கு எதிராகப் போரிட்டு வருகிறதுபேரிடர் மேலாண்மை சட்டம் 2015 இன் படிஇந்தியா 25 மார்ச் 2020 அன்று முதல்இருபத்தோரு 21 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்ததுநானூறுக்கும் குறைவான மக்களே பாதிக்கப்பட்டிருந்த போதிலும்முன்னதாகவே ஊரடங்கு அறிவித்ததைஉலக சுகாதார நிறுவனம் வெகுவாகப் பாராட்டியதுகோவிட் 19 நோய்க்கு எதிரான சாதனைப்படை ஒன்றை அமைத்ததுதனி நபர்கள் விலகியிருத்தல்தனிநபர் விலகியிருத்தலைக் கடைப்பிடிப்பதற்காக செய்யப்பட்ட பல அறிவிப்புகள் மற்றும் இதர தீவிர நடவடிக்கைகள் பின் தொடர்ந்தன. 

· இதுபோன்று மேற்கொள்ளப்பட்ட பல முக்கிய நடவடிக்கைகளில் சிலகீழே கொடுக்கப்பட்டுள்ளன தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிவது தொடங்கப்பட்டது  அனைத்து விசாக்களையும் ரத்து செய்தது (தூதரகஅதிகாரபூர்வஐநாசர்வதேச அமைப்புகள்பணி நிமித்தமானதிட்டங்கள் தொடர்பான விசாக்கள் நீங்கலாக 15 ஏப்ரல் 2020 வரை அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானங்கள்இரயில்கள்பேருந்து சேவைகளை ரத்து செய்தது  இந்த ஊரடங்கு காலத்தில் எவருமே பசித்திருக்கக் கூடாது என்பதற்காகஏழை மக்களை இலக்காகக் கொண்டு துவக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள்  இந்திய இரயில்வேயின் இரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றியமைத்தது சவாலை எதிர்கொள்ளும் ஆராய்ச்சிவளர்ச்சி அமைப்புகள் உலக அளவிலான கோவிட் 19 நோய்க்கு எதிராகஇந்தியா தானாகவே முன்வந்து அரசின் முழுமையான அணுகுமுறையுடன்மேற்கோள்ளும் முன்னெச்சரிக்கைபாதுகாப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்கும் அதே சமயத்தில்இந்தியாவுக்கும் உலகின் மற்ற நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தின் மந்த நிலை இதற்கு எதிரான விளைவுகளை இன்னொரு பக்கத்தில் அளித்து வருகிறதுவர்த்தகத்தில் காணப்படும் இந்த மந்த நிலைகோவிட் 19 நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் பொருள் வழங்கு தொடருக்கு (சப்ளை செயினுக்குஇடையூறாக இருக்கிறதுநோய் உள்ளதா என பரிசோதனை செய்வதற்கான பரிசோதனைப் பெட்டிகள்முகக்கவசங்கள்எரிசாராயத்தை அடிப்படையாகக் கொண்ட கிருமி நாசினிகள்சுத்திகரிப்பான்கள்தனிநபர் பாதுகாப்புக் கருவிகள்முன்னணியில் நின்று சேவை புரியும் சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான துணிப்பொருள்கள்உடைகள்நோயாளிகளுக்கான செயற்கை சுவாசக்கருவிகள் போன்றவைஇந்த அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் அடங்கும்இந்தப் பொருள்களை எவ்வளவு விரைந்து தயாரிக்க முடியுமோஅவ்வளவு விரைவாகவும்எவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் தயாரிக்க முடியுமோஅவ்வளவு அதிகமாகவும் உற்பத்தி செய்ய வேண்டியதே சவாலாகும்இந்த நிலையே இந்திய அரசை இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற திட்டத்தைபுத்துணர்ச்சியுடன் செயல்படுத்தத் தூண்டியுள்ளதுஇதில் நாட்டிலுள்ள பல்வேறு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

· நாட்டிலுள்ள அறிவியல் சமுதாயத்தை செயலாக்கச் செய்வதற்காகமத்திய சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவியியல் விஞ்ஞானத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் ஒருங்கிணைந்த அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

· சிறந்த பழக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்ஒருங்கிணைந்து பணியாற்றுதல்தேவை அடிப்படையிலான புதிய விஷயங்களைக் கண்டறிதல்ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மீண்டும் மேற்கொள்ளப்படாமல் இருக்க வழி செய்தல் ஆகியவற்றுக்கு இந்த அணுகுமுறை உதவியுள்ளதுசுருக்கமாகச் சொல்லப்போனால்மிகக் குறுகிய காலகட்டத்தில்இந்தியாவால் புதிய பரிசோதனைகள்பாதுகாப்புக் கருவிகள்சுவாசக்கருவிகள் போன்றவற்றை வடிவமைக்கும் பணியில்கண்டுபிடிக்கும் பணியில்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்களையும்காலங்கருதாமல்ஈடுபட வைக்க முடிந்துள்ளது. 

· இந்தியாவின் உயரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமையும்அதன் முயற்சிகளும்அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையேஇந்தியாவின் உயரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமையாகும்., அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் அதன் தொடர்புடைய இதர அமைச்சகங்களின் கீழ் உள்ள அமைப்புகளின் உதவியுடன்கோவிட் 19 தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து தீர்வு காண்பதற்காகஇந்தியாவில் உள்ள தகுந்ததேவையானதொழில் நுட்பங்களை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் பல ஒருங்கிணைப்பு முயற்சிகள்அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் தலைமையில்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

· நம் நாட்டிற்குப் பொருந்துகின்ற வகையிலான தீர்வுகளையும் அது தேடிக்கொண்டிருக்கிறதுஉலகளாவிய தொற்றுநோயான கோவிட் 19 காரணமாக நாட்டில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிப்பதற்கு உதவும் வகையிலான தயாரிப்புகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. 

· கோவிட் 19 நோய்க்கு எதிராகஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறைதன்னாட்சி அமைப்புகள் மற்றும் சட்ட ரீதியிலான அமைப்புகள் மூலமாகமூன்று வகையான போராட்ட முறைகளை ஏற்படுத்தியுள்ளது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி உதவி தேவைப்படும் நிறுவனங்கள்மேம்பாடு மற்றும் உற்பத்தி உதவி தேவைப்படும் பொருட்கள் கொண்ட startups துவக்க நிலை நிறுவன்ங்கள்ஆகியவற்றைக் கண்டறிதல்  சந்தைப்படுத்தக்கூடியபயன்படுத்த கூடிய பொருட்களைக் கொண்டதுவக்க முதலீடு தேவைப்படும் பொருட்களை கண்டறிதல்  சந்தைகளில் ஏற்கனவே உள்ள ஆனால் அதற்கான தொழில் கட்டமைப்புகளையும் திறன்களையும் மேம்படுத்தும் தேவை உள்ள தீர்வுகளுக்கு ஆதரவளித்தல்உயர் முக்கியத்துவம் உடைய பகுதியில் ஆய்வுகளைத் தீவிரப்படுத்துதல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுக் கழகம் (Science and Engineering Research Board - SERB), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும்கொவிட் 19 மற்றும் தொடர்புடைய வைரல் மூச்சுத் தொற்றுகளுக்கு எதிரான தொற்றுநோயியல் ஆய்வுகள்வைரல் மூச்சுத் தொற்றுகளின் போது நோய் எதிர்ப்புச் செயல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திவைரல்களுக்கு எதிரான புதிய மருந்துகள்தடுப்பு மருந்துகள் மற்றும் மலிவு விலையில் நோய் கண்டறிதல் தொடர்பான தேசிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் விதமாகஉயர் முக்கியத்துவப் பகுதியில் ஆய்வைத் தீவிரப்படுத்துதல் (IRPHA) திட்டத்தின் கீழ் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுக் கழகம் போட்டியிடும் திறன் கொண்ட முன்மொழிவுகளை வரவேற்றிருந்ததுஅதோடுசுகாதாரப் பணியாளர்களின் தற்போதைய தேவைகளான (எளிதில் எடுத்துச் செல்லக்கூடியமலிவு விலையிலானசிறியநோய் கண்டுபிடிப்பு ஆய்வுப் பெட்டிகள் மற்றும் கருவிகள், (கொவிட் 19 மூலக்கூறு இலக்குகளை கணித்து அடையாளம் கண்டு உறுதி செய்தல் மற்றும் (முக்கிய கொவிட் 19 இலக்குகளுக்கு எதிராக மருந்து மறுபயன்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு கூடுதல் ஊட்டச்சத்து பொருள்களின் ஆய்வுக்கூட சோதனை/மருத்துவ அளவு பரிசோதனை ஆகியவை பற்றியும் பல்வேறு அறிவுத்துறைகளின் இணைப்புடன் நடத்தப்படும் ஆய்வுகளுக்கான முன் மொழிவுகளையும் இந்த அமைப்பு வரவேற்றுள்ளது. 

· முதல் தொகுப்பில் உள்ள ஐந்து திட்டங்கள் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வுக் கழகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளனஇவற்றின் மேம்பாடு மற்றும் அமல்படுத்தக்கூடிய அடுத்தக்கட்ட தொழில்நுட்பங்களுக்கான ஆதரவாக அமையும்முதல் தொகுப்பில் உள்ளவற்றில் மூன்று திட்டங்கள்அதி முக்கிய விஷயமான தனிநபர் பாதுகாப்புக் கவசம்உயிரற்ற தளங்களின் மீதான ஆன்டி வைரல் மற்றும் வைரல்கலை முடக்கும் மேற்பரப்பு பூச்சு ஆகியவை தொடர்புடையதாகும்நான்காவது திட்டம்கொவிட் 19 பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வளர்சிதை மாற்ற உயிரிக் குறிப்பான்களை அடையாளப்படுத்துதல் பற்றியதாகும். 

· இதன் மூலம் சிகிச்சை தரவேண்டிய இலக்கின் அடையாளம் எளிதாகும்கடைசி திட்டமானதுகொரோனா வைரஸ் தனது கிளைகோ புரதங்களை அதிகரித்துக்கொண்டு ஏற்பிப் பிணைப்புக் களத்தை அடையும் போது அதற்கு எதிராக நோய் எதிர்ப் பொருள்களை உடலில் உருவாக்குவதைப் பற்றியதாகும்தகவல் சார்ந்த அணுகுமுறை மூலம் வைரஸை கண்டுபிடித்து பின் தொடர்தலே அதன் கட்டுப்படுத்துதலில் முக்கிய நடவடிக்கை ஆகும்இந்த திசையில்கொவிட் 19 பரவலின் கணித மாதிரியை உருவாக்குதல்புள்ளி விவர எந்திரக் கற்றல் கல்விஉலகலாவிய தொற்றுப் பரவல் தகவல்களின் அடிப்படையில் கணிப்பு மற்றும் அனுமானம்இந்தக் குறிப்பிட்ட தொற்றுநோய் மாதிரியை உருவாக்குவதற்கான நிரல் நெறிமுறைகள்தொற்றுநோயியல் மாதிரிகளுக்கான அளவைக்குரிய சமூக அறிவியல் பகுப்பாய்வு அணுகுமுறைகள் ஆகியவை குறித்தான குறுகிய கால ஆராய்ச்சித்திட்டங்களை பொறியியல் ஆய்வுக் கழகம் அறிவித்துள்ளது. 

· தடுப்பு மற்றும் குணமாக்கும் நடவடிக்கைகள் இல்லாத பட்சத்தில்புதிய இடங்களில் நீடித்த பரவலுக்கான சாத்தியத்தை அளவிடுவதில்கணித மாதிரிகள் உதவலாம்தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகத்தால் வரவேற்கப்பட்ட ஆய்வு திட்டங்கள் கொவிட் 19 நோயாளிகளின் பாதுகாப்புமூச்சு விடுதலில் உள்ள சிரமத்தை வீட்டிலேயே சமாளித்தல் போன்ற தலையீடுகளுக்கானத் திட்டங்களை இந்திய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகம்வரவேற்றிருந்ததுகுறைந்த விலை முகக்கவசங்கள்செலவு குறைந்த வெப்ப பரிசோதனைக் கருவிகள்பெரிய பகுதிகளை சுத்தப்படுத்த தொழில்நுட்பங்கள் மற்றும் மனிதத் தொடர்பில்லாத நுழைவுப்பகுதிகள்துரிதப் பரிசோதனைக்கருவிப் பெட்டிகள்பிராண வாயுக் கருவிகள் மற்றும் வென்டிலேட்டர்கள் ஆகிய தொழில்நுட்ப மற்றும் புதுமையான தீர்வுகளைத் தேவைக்கேற்ப உள்நாட்டிலேயே தயாரிக்க/இறக்குமதி செய்ய இந்த அவசியமான நேரத்தில் தொழிற்சாலைகள் உதவலாம்இயக்கக்கூடிய செயற்கை சுவாசக் கருவி அழுத்தம் மூலம் காற்றை செலுத்தும்மனிதர்கள் இயக்கக்கூடிய அமைப்பிலானசெயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்அமைப்பை திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் உருவாக்கியுள்ளதுதீவிர சிகிச்சைப் பிரிவின் வென்டிலேட்டர்களை அணுக முடியாத தீவிர நோயாளிகளுக்குஇந்த தானியங்கி செயற்கை சுவாசக் கருவியைமருத்துவ நிபுணர்களின் ஆலோசனையோடு பயன்படுத்தலாம். 

· விப்ரோ3டிபெங்களூரு இதனைத் தயாரித்தளிக்கிறதுஇந்தக் கருவி இப்போது மருத்துவமனைப் பரிசோதனைக்கு சென்றுள்ளதுஇந்த அவசர கால வென்டிலேட்டரைத் தவிரகொவிட் 19 நோயாளிகளின் பரிசோதனைக்காக குறைந்த விலையிலான செயற்கை அறிவு பொருந்திய எக்ஸ் கதிர் (ரேகண்டுபிடிப்பான்களையும் தயாரிக்க இந்த நிறுவனம் முயற்சிகளை எடுத்து வருகிறதுநுண்ணுயிர் எதிர்ப்புப் பூச்சு ஒரே முயற்சியில் பிணி நீக்கக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்புப் பூச்சைஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான ஜவஹர்லால் நேரு மேம்படுத்தபட்ட அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்கொண்டுவந்துள்ளது. 

· குளிர் காய்ச்சல் வைரஸ்எதிர்ப்பைத் தாங்கும் பாக்டீரியா நோய்க்கிருமி மற்றும் பூஞ்சைகள்கொரோனாவைரஸ் (சார்ஸ் கொவி 19) ஆகியவற்றை இந்த பூச்சு முற்றிலுமாக அழித்துவிடும்பூசப்பட்ட மேற்பரப்புகளின் மீது நுண்ணுயிர்களை இந்த பூச்சு மீண்டும் அனுமதிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறதுகொவிட் 19 பெரும் பரவலின் போதுதனிநபர் பாதுகாப்புக் கருவிகள்துணிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் உபகரணங்களைப் பாதுகாக்க இந்த பூச்சு உதவலாம்மக்களிடமிருந்து புதுமைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள மற்றொரு தன்னாட்சி அமைப்பான தேசிய புதுமை அறக்கட்டளைதனிப்பட்ட நபர்களும் உள்ளூர் சமூகங்களும்எந்த தொழில்நுட்பப் புலத்திலும் கண்டுபிடிக்கும் புதுமைகளுக்கு ஊக்கமளித்து ஆதரவளிக்கிறது

· தன்னுடைய 'சவால் கொவிட் 19 போட்டிமூலம்கீழ்கண்ட சிக்கல்களை சமாளிக்க படைப்பாற்றல் மிக்க மற்றும் புதுமையான யோசனைகளை மக்களிடம் இருந்து தேசிய புதுமை அறக்கட்டளை வரவேற்றுள்ளது: (ஊட்டச்சத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் சத்தான உணவு; (கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்தல்; (கைகள்வீட்டு சாதனங்கள்வீடுகள்தேவைப்படும் பொது இடங்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்துதல், (மக்களுக்குகுறிப்பாக தனியாக வாழும் முதியவர்களுக்குஅத்தியாவசியப் பொருள்களை விநியோகித்தல்; (வீட்டிலுள்ளவர்களை பயனுள்ள வகையில் ஈடுபடுத்துதல்; (சுகாதாரத் திறனைக் கட்டமைக்க தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள்துரித பரிசோதனைப் பெட்டிகள்மற்றும் (கொரோனாவுக்கு பிந்தைய செயல்பாடுகள்கொவிட் 19இன் போது வெவ்வேறு பிரிவு மக்களின் தேவைகளுக்காக, 'மனிதத் தொடர்பில்லாகருவிகளை மேம்படுத்தும் மறுயோசனைகள் ஆகியவற்றிற்கு தேசிய புதுமை அறக்கட்டளை வரவேற்பளிக்கிறது. 

· மக்கள் மத்தியில் அறிவியல் மனநிலையை உருவாக்குவதோடுஅவர்களை பெரும் தொற்று நோய்க்கு எதிரான அரசின் திட்டங்களில் தீவிரமாகப் பங்குபெற செய்யவும் இத்தகைய முன்னெடுப்புகள் ஊக்கமளிக்கும்அறிவியல்தொழில்நுட்ப முயற்சிகளை ஒருங்கிணைத்தல் ஏற்கனவே குறிப்பிட்டது போன்றுபுதிதாக தொடங்கப்படும் நிறுவனங்கள்கல்வி நிறுவனங்கள்ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் மற்றும் தொழில் துறை ஆகியவற்றில் உள்ள தொழில்நுட்பத் திறனைப் பயன்படுத்தி கோவிட்-19 பரவலை கண்டறிவதற்காக கோவிட்-19 அதிவிரைவுக் குழு-வை இந்திய அரசு அமைத்துள்ளது. 

· திறன் கண்டறியும் குழுவில்அறிவியல் தொழில்நுட்பத் துறை (DST), உயிரி தொழில்நுட்பத் துறை (DBT), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEIT), விஞ்ஞான மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக்கான கவுன்சில் (CSIR), அடல் புத்தாக்க இயக்கம் (AIM), சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம் (MSME), இந்தியாவில் தொழில் தொடங்குதல் (Startup India) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE) ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்இந்தக் குழுவினர்மருத்துவப் பரிசோதனைமருந்துகள்செயற்கை சுவாசக் கருவிகள் தயாரிப்புபாதுகாப்புக் கவசம்கிருமிநாசினி முறை ஆகிய துறைகளில் ஈடுபடும் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கண்டறிந்துள்ளனர். 

· நோய் பரவலை தடுப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிந்துள்ளனர்அவற்றில்முகக்கவசம் மற்றும் பிற பாதுகாப்புக் கவசங்கள்கிருமிநாசினிகள்பரிசோதனைக்கு தேவையான கருவிகள்செயற்கை சுவாசம் மற்றும் ஆக்சிஜன் ஏற்றும் கருவிகள்செயற்கைப் புலனறிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான முறைகள் மூலம் வைரஸ் பரவலைக் கண்டறிவதுகண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்தும் வகையில் தகவல் தரவுகளை ஏற்படுத்துவது என சிலவற்றைக் குறிப்பிடலாம்அறிவியல் தொழில்நுட்பத் துறையின் பிரிவான உயிரிதொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலும்உயிரி தொழில்நுட்பத் துறையும் கூடகோவிட்-19 ஆராய்ச்சித் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளனகோவிட்-19 வைரசைக் கட்டுப்படுத்துவதற்கு குறைந்த விலையில் பரிசோதனை செய்தல்தடுப்பு மருந்துகள்புதிய முறை சிகிச்சைகள்மருந்துகளை மீண்டும் பயன்படுத்துதல் அல்லது வேறு ஏதாவது முறைகள் குறித்த ஆலோசனைகளை தொழில் துறையினரும்கல்வியாளர்களும்தொழில்துறை - கல்வியாளர் கூட்டு முயற்சியாகவும் வழங்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

· விஞ்ஞான மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில்தனது புதிய ஆயிரமாவது ஆண்டுக்கான இந்திய தொழில்நுட்பத் தலைமை முயற்சியின் (New Millennium Indian Technology Leadership Initiative - NMITLI) மூலம்நோய்த் தடுப்புக்கான முன்மொழிவுகளை வழங்குமாறு தொழில் நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளதுஇதன்படிகுறைந்த விலையிலான செயற்கை சுவாசக்கருவிகள்புத்தாக்கப் பரிசோதனை முறைகள் (விரைவானகுறைந்த விலையிலானஅதிநவீன), புதிய மருந்துகள் அல்லது மீண்டும் பயன்படுத்தக் கூடிய மருந்துகள்புதிய தடுப்பு மருந்துகள் அல்லது மீண்டும் பயன்படுத்தக் கூடிய தடுப்பு மருந்துத் தயாரிப்புநோய் பரவும் வழியைக் கண்டறியும் தொழில்நுட்பங்கள் போன்ற உதவிகரமான கருவிகள் குறித்த திட்டங்களை தொழில் நிறுவனங்கள் அளிக்கலாம்பல புதுமையானவிரைவான மற்றும் பொருளாதாரத் தீர்வுகள் மற்ற நிறுவனங்களிடமிருந்தும் வந்துகொண்டிருக்கின்றன. 

· உதாரணமாககாகிதப்பட்டை அடிப்படையிலான சோதனை முறையை விஞ்ஞான மற்றும் அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியியல் கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளதுஇந்த சோதனையின் மூலம்புதிய கொரோனா வைரசான சார்ஸ்-கோவ்-2-இன் ஆர்.என். மூலக்கூறு அமைப்பை ஒரு மணிநேரத்தில் கண்டறிய முடியும்உலகளாவிய வகையில் பரவும் இந்த வைரஸின் உருவத் தோற்றம்வளர்ச்சி முறைநம் நாட்டில் ஆங்காங்கே பரவும் கிருமிகளின் மரபுக்கூறுகளை வகைப்படுத்துதல் (sequencing of local strain), வைரசுக்கும் அது தொற்றிக் கொள்ளும் உடலுக்கும் இடையே நடைபெறும் செயல்களும் - எதிர்ச்செயல்களும்வீரியத்தன்மையோடு தொடர்புடைய வைரசின் மரபணு மாற்ற வடிவங்கள்வைரசின் பரிணாமவளர்ச்சிதொற்று நோய்ப் பரவல் குறித்த தரவுகள் சேகரிப்பு போன்ற இந்த நோய் தொடர்பான அடிப்படை அறிவியல் மற்றும்சமுதாய அம்சங்கள் குறித்தும் பல ஆராய்ச்சிக் குழுக்கள் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனஇத்தகைய ஆய்வுகள்கோவிட்-19 வைரஸுக்கு எதிரான சிகிச்சை மருந்துகளைக் கண்டறியவும்தடுப்பு மருந்துகளை உருவாக்கவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. 

· தனியார் ஆய்வகங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நோயறிதல் முறைகள்தடுப்பு மருந்துகள் மற்றும் புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கும் நடைமுறைகளை தனியார் துறையினரின் முயற்சிகளும்பங்களிப்பும் ஊக்குவித்து வருகின்றனபுனே-வை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மூலக்கூறு பரிசோதனை நிறுவனமான மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் (Mylab Discovery Solutions), கோவிட்-19 வைரஸை விரைவாக கண்டறிவதற்கான முதலாவது பரிசோதனைக் கருவியை இந்தியாவில் உருவாக்கியுள்ளதுஇந்தப் பரிசோதனை கருவிக்கு இந்திய உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்புமத்திய மருந்து தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளன. 

· இந்தப் பரிசோதனை கருவி மூலம்இரண்டரை மணிநேரத்துக்குள் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும். Serum Institute of India மற்றும் AP Globale ஆகியவற்றுடன் இணைந்து செயல்படத் தொடங்கிய பிறகு மைலேப் நிறுவனத்தின் வாரத்துக்கு 1.5 இலட்சமாக இருந்த பரிசோதனைத்திறன்வாரத்திற்கு 20 இலட்சம் பரிசோதனைகள் என்ற அளவுக்கு இப்போது உயர்ந்துள்ளதுபுனேயில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பூங்காவில் இருக்கும் (STP அல்லது Scitech Park), என்ற புதிய நிறுவனம் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிதி பிரயாஸ் திட்டத்தின் கீழ் ScitechAiron என்ற கருவியைத் தயாரித்து கோவிட்-19-க்கு எதிரான புத்தாக்கத் தீர்வைக் கொண்டு வந்துள்ளதுஇந்த அயனியாக்குதல் இயந்திரம்எதிர்மறை மின்னேற்றம் கொண்ட சுமார் 10 கோடி அயனிகளை 8 நொடிகளில் உருவாக்கும்.. அறைகளுக்குள் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பை 99.7 சதவீத (அறையின் அளவைப் பொறுத்ததுஅளவுக்கு குறைக்கும் திறன் பெற்றது இந்த இயந்திரம்.. தனிமைப்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் கிருமிகளைப் போக்குவதற்கு இது பேருதவியாக இருக்கும்., தொழில்நுட்பத் தீர்வுகள்மருத்துவத் தீர்வுகளை கண்டறிவதோடுவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்அறிவியல் அடிப்படையிலான தொகுப்பை (IEC - information, educational and communication) தயார் செய்துபெருமளவில் மக்களை சென்றடையச் செய்வதும் முக்கிய இலக்காக உள்ளது.

இந்த முயற்சியின் மூலம்பொதுமக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைஅச்சஉணர்வு மற்றும் உளவியல் ரீதியான அழுத்தங்களைப் போக்க முடியும்இதன்படிசெயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கொரோனா கவாச்” · (Corona Kavach) செயலி அரசின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளதுஇதேபோன்றுகொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்ட நபருக்கு அருகே செல்லும்போதுஎச்சரிக்கை விடுக்கும் வகையிலான செயலிகளும் உள்ளனஇருந்தாலும்இதுபோன்ற செயலிகள்மக்கள் மத்தியில் இதுவரை போதிய அளவில் பரவவில்லைபோர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்த முயற்சிகள் கோவிட்-19 வைரஸுக்கு எதிராக போரிடுவதில் இந்திய சுகாதாரம் மற்றும் அறிவியல் துறையினருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க இந்திய அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளதுசுகாதாரத்துறைஅறிவியல் துறையினர்ஆய்வாளர்கள்தனியார் மற்றும் பொது ஆய்வகங்கள்புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்கள்இன்குபேட்டர்கள்தொழில்முனைவோர் மற்றும் தொழில் துறையினருக்கு முழு ஆதரவு அளிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசின் அறிவியல் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. 

 

· தேசிய அளவிலான திட்டங்களைசர்வதேசத் திட்டங்களுடன் இணைப்பதற்கான முயற்சிகளை நிதியுதவி அளிக்கும் அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றனஇதன்மூலம்நாடுகளுக்கு இடையே நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளவும்இரட்டிப்பு முறையைத் தவிர்க்கவும்எந்த நேரத்தில்எங்கு தேவைப்படுகிறதோ அதற்கேற்ப ஒட்டுமொத்த செயல்பாடுகளை வேகப்படுத்தவும் முடியும்கோவிட்-19 தொடர்பான அரசின் அதிகாரமிக்க குழு வெளியிட்ட குறிப்பு மூலம்கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து ரத்த மாதிரிமூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சளி மாதிரி ஆகியவற்றை சேகரிப்பதற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு மார்ச் 21-இல் அனுமதி அளிக்கப்பட்டதுஇந்த அறிவிப்பைத் தொடர்ந்துஅக அளவில் கோவிட்-19 பரவும் விதம்பரிசோதனைக் கருவிகளை உருவாக்குவதுதடுப்பு மருந்துகள் போன்ற பல்வேறு ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. 

· இதற்கும் மேலாகஅறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில்உயிரி தொழில்நுட்பத் துறைஅறிவியல் தொழில்நுட்பத் துறைஅணுசக்தி துறை ஆகியவற்றின் கீழ் உள்ள ஆய்வகங்கள் உள்பட தேசிய அளவிலான அனைத்து ஆய்வகங்களும்கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதுநோய் தாக்கியுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் பணிகளையும்நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிவதையும் வேகப்படுத்த இது உதவும்கோவிட்-19 தொற்று சவால்களை எதிர்கொள்வதற்காக 50 வகையான புத்தாக்கங்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கவும் மதிப்பீடு செய்யவும், 56 கோடி ரூபாய் செலவில் கோவிட்-19 சுகாதார நெருக்கடிக்கு எதிரான போரை விரைவுபடுத்தும் மையத்தை (CAWACH) அறிவியல் தொழில்நுட்பத் துறை ஏப்ரல் 3-ஆம் தேதி அமைத்துள்ளது. 

· மும்பை ஐஐடி-யில் உள்ள தொழில்நுட்ப வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பான புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோருக்கான சமூகம் மையத்தில் இது அமைக்கப்பட்டுள்ளதுஅறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் செயல்படும் CAWACH அமைப்புநாடு தழுவிய அளவில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதோடுவர்த்தகமயமாக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு பல்வேறு நிலைகளிலும் தேவையான உதவிகளை வழங்கும்வைரஸ் தொற்றிலிருந்து நாடு விரைவில் மீண்டு வருவதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் இந்த முயற்சிகள் உதவும் என்று இந்திய அரசு உறுதியாக நம்புகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel